Just In
- 4 hrs ago
அமேசான் LG Monitors குவிஸ் போட்டி.. ஜனவரி 27 வரை மட்டுமே.. உடனே முந்துங்கள்..
- 4 hrs ago
WhatsApp எடுத்த U-டர்ன்.. இனிமேல் இதை செய்யமாட்டோம்.. பிப்ரவரி 8ம் தேதி காலக்கெடு இப்போது மார்ச்சுக்கு மாற்றமா
- 12 hrs ago
வாட்ஸ் அப் கணக்கு பிப்.,8 டெலிட் ஆகாது: ஆனா கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க- வாட்ஸ்அப் விளக்கம்!
- 15 hrs ago
ரூ.5,000 Amazon pay Balance இலவசம்: ஜனவரி 16 அமேசான் குவிஸ் பதில்கள்!
Don't Miss
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Movies
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Airtel vs Jio vs Vi: ரூ.399 போஸ்பெய்ட் திட்டத்தில் சிறந்த நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது?
ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

குறிப்பாக ஜியோ நிறுவனம் கடந்த நில மாதங்களுக்கு முன்பு சிறப்பான போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. அதிலும் புதிய ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்வதற்கு முன்பு, இந்த டெலிகாம் நிறுவனம் ரூ.199 என்கிற விலையில் ஒரே ஒரு போஸ்ட்பெய்ட் திட்டத்தை மட்டுமே வழங்கியது. ஆனால் இப்போது புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ரூ.399-ல் துவங்கி ரூ.1,499 வரை செல்கின்றன.

மேலும் ஜியோ நிறுவனம் அதன் அடிப்படை ரூ.399 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தை அறிமுகம் செய்தபின்பு, ஏர்டெல் நிறுவனம் உடனடியாக அதன் அனைத்து போஸ்ட்பெய்ட் வட்டாரங்களிலும் அதன் அடிப்படை திட்டத்தின் விலை ரூ.399 ஆக மாற்றியது.
முறைப்படி பதிவு செய்யப்பட்ட PUBG மொபைல் இந்தியா.. களமிறங்க தயார்நிலையில் உள்ளதா?

அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனமும் அதன் அடிப்படை போஸ்ட்பெய்ட் திட்டங்களை புதிய பயனர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் ரூ.299 முதல் வழங்குகிறது மற்றும் ஏற்கனவே உள்ள பயனர்களுக்கு ரூ.399 முதல் திட்டங்களை வழங்குகிறது.
எனவே ஏர்டெல், வோடபோன் ஐடியா,ஏர்டெல் என மூன்று நிறுவனங்களுமே ரூ.399 என்கிற ஒரே விலையிலான திட்டங்களை வைத்துள்ளன. இவற்றில் எந்த நிறுவனம் சிறந்த நன்மைகளை வழங்குகிறது என்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் ரூ.399-திட்டம்
ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் ரூ.399-திட்டம் ஆனது மாதத்திற்கு 75ஜிபி அளவிலான டேட்டாவை 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதியுடன் வழங்குகிறது. பின்பு ஒரு பில்லிங் சுழற்சிக்கு எந்தவொரு FUP வரம்பும் இல்லாமல் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற பிற நன்மைகளையும் வழங்குகிறது.
ஜியோ ரூ.399 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தில் OTT சந்தாக்கள் கிடைப்பது தான் சிறப்பு. அதன்படி இந்த திட்டம் வழியாக ரூ.199 மதிப்புள்ள நெட்பிலிக்ஸ் மொபைல் திட்டம், ரூ.999 மதிப்புள்ள அமேசான் பிரைம் சந்தா மற்றும் ரூ.399 மதிப்புள்ள டிஸ்னி 10 ஹாட்ஸ்டார் விஐபி சாந்த போன்ற OTT தளங்களுக்கான இலவச அணுகல் கிடைக்கும். இதுதவிர பயனர்களுக்கு JioTV, JioCinema, JioSaavn மற்றும் Unlimited Caller Tunes ஆகியவற்றிற்கான இலவச அணுகலும் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 40 ஜிபி அளவிலான டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் நாட்டில் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது. ஏர்டெல் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் மூலம் பயனர்கள் 200 ஜிபி வரையிலான டேட்டாவை ரோல் ஓவர் செய்துகொள்ளலாம். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பயன்பாட்டிற்கு மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு இலவச அணுகலும் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆனால் இந்த திட்டதின் வழியாக வேறு எந்த OTT இயங்குதள சந்தாக்களையும் வழங்கவில்லை. குறிப்பாக ஏர்டெல் ரூ.499 மற்றும் அதற்கு மேல் உள்ள திட்டங்களுக்கு மட்டுமே OTT சந்தாக்கள் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது 40 ஜிபி அளவிலான டேட்டா நன்மை, 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதியை வழங்குகிறது. பின்பு ஒரு மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் ஏர்டெல் நிறுவனத்தை போலவே வோடபோன் ஐடியா நிறுவனமும் மூவி & டிவி சேவைக்குமான இலவச அணுகலை மட்டுமே வழங்குகிறது. குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் OTT தளங்களுக்கான இலவச சந்தா வழங்கப்படவில்லை.

சிறந்தது எது?
ஜியோ நிறுவனம் தான் போஸ்ட்பெய்ட் திட்டதில் சிறப்பான சலுகைகளை வழங்குகிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் குறிப்பிட்ட சில நன்மைகளை மட்டுமே வழங்குகிறது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190