Home
News

ரூ. 500 விலைக்குள் 84 நாள் வேலிடிட்டி கிடைக்கும் Airtel, Jio, Vi திட்டங்கள்.. பெஸ்ட்டான ரேட்டில் சூப்பர் நன்மை

ஏர்டெல், வோடபோன் ஐடியா (Vi) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உட்பட அனைத்து முக்கிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் தங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களை முதன்மையாக 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் ஆகிய மூன்று வேலிடிட்டி கட்டமைப்புகளில் வழங்குகிறார்கள். இதில் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட திட்டங்களைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக மாதம் தோறும் ரீசார்ஜ் செய்யச் சிரமப்பட விரும்பாத சந்தாதாரர்களுக்கு இது வசதியாக இருக்கும்.

மாதம்-மாதம் ரீசார்ஜ் செய்யும் பழக்கம் வேண்டாம்.. நிம்மதியாக இருக்க இது தான் பெஸ்ட் வழி

மாதம்-மாதம் ரீசார்ஜ் செய்யும் பழக்கம் வேண்டாம்.. நிம்மதியாக இருக்க இது தான் பெஸ்ட் வழி

இப்படி மாதம் தவறாமல் ரீசார்ஜ் செய்யும் பழக்கத்தை நிறுத்திவிட்டு, நீண்ட நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களைத் தேர்வு செய்து நிம்மதியாக இருப்பதையே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். அப்படி, உங்கள் பட்ஜெட்டிற்குள் கிடைக்கக் கூடிய சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை உங்களுக்காக Airtel, Jio, Vi டெலிகாம் நிறுவனங்களின் பட்டியலில் இருந்து தேர்வு செய்து தொகுத்துள்ளோம். குறிப்பாக இவை அனைத்தும் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வெறும் ரூ.500 விலைக்குள் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

84 நாட்களுக்கு எந்த கவலையும் இல்லாமல் தொடர்ந்து பேசலாம்

84 நாட்களுக்கு எந்த கவலையும் இல்லாமல் தொடர்ந்து பேசலாம்

ஒரு பார்வையில், இந்த விலை வரம்பு மற்றும் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் பல திட்டங்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரும் இந்த விலைப் புள்ளியின் கீழ் தலா ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. இந்த திட்டங்கள் உங்களுக்கு வரையறுக்கப்பட்ட டேட்டா (6ஜிபி வரை) மற்றும் சேவை வழங்குநரின் சொந்த OTT இயங்குதள அணுகல் ஆகியவற்றைக் கொண்ட நன்மை உடன் வருகிறது.

ரூ. 500க்கு கீழ் 84 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்கள்

ரூ. 500க்கு கீழ் 84 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐயிலிருந்து 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ. 500க்கு கீழ் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்க்கலாம். முதலில், ஏர்டெல் நிறுவனம் இந்த ரூ. 500 விலை வரம்பின் கீழ் என்ன திட்டத்தை என்ன நன்மைகளுடன் வழங்குகிறது என்று பார்க்கலாம். ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 455 ப்ரீபெய்ட் திட்டமானது அதன் பயனர்களுக்கு மொத்தமாக 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் 900 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகளை 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.

ஏர்டெல்லின் இந்த திட்டத்துடன் என்ன கூடுதல் நன்மை கிடைக்கிறது?

ஏர்டெல்லின் இந்த திட்டத்துடன் என்ன கூடுதல் நன்மை கிடைக்கிறது?

வரம்பிற்குப் பிறகு, சேவை வழங்குநர் உள்ளூர் SMSக்கு தலா ரூ. 1 மற்றும் எஸ்டிடி குறுஞ்செய்திகளுக்கு ரூ. 1.50 என்ற விதத்தில் வசூலிக்கிறது. டேட்டா, ஒதுக்கீட்டிற்குப் பிந்தைய நிறைவு, ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்துடன் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் பற்றிப் பார்க்கையில், இது இலவச அமேசான் பிரைம் மொபைல் சந்தா சோதனை 30 நாட்கள் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ் உடைய பலன்கள் உட்பட இன்னும் இந்த திட்டத்தில் பல கூடுதல் சலுகைகள் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 395 திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 395 திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ரிலையன்ஸ் ஜியோவைப் பொறுத்தவரை, ஏர்டெல் போன்ற திட்டமானது, 1000 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகளுடன் 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது மலிவு வகையின் கீழ் உங்களுக்கு வெறும் ரூ. 395 என்ற விலைக்கு வருகிறது. டேட்டா வரம்பிற்குப் பிறகு, வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும். OTT நன்மைகளாக இந்த திட்டத்துடன் ஜியோவின் ஜியோடிவி மற்றும் ஜியோசினிமா அணுகலைப் பயனர்கள் பயன்படுத்த முடியும். இந்த திட்டம் உங்களுக்கு 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

Vi ரூ. 459 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தரும் நன்மைகள்

Vi ரூ. 459 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தரும் நன்மைகள்

அடுத்தபடியாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் Vi ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பட்டியலைப் பார்க்கும் போது, 6 GB டேட்டாவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்திற்கு இந்நிறுவனம் ரூ. 459 என்ற விலையை வசூலிக்கிறது. உண்மையிலேயே இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்கிற்கான வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 1000 SMS நன்மை மற்றும் கூடுதல் நன்மைகளுடன் வருகிறது. கூடுதல் நன்மைகள் என்று பார்க்கும் பட்சத்தில் இது Vi Movies & TVக்கான அணுகல் ஆகியவற்றை இந்த திட்டத்தின் கீழ் வழங்குகிறது.

ரூ.500 முதல் ரூ.1000 விலைக்குள் 84 நாட்கள் செல்லுபடியுடன் கிடைக்கும் ப்ரீப்பெய்டுதிட்டங்கள்

ரூ.500 முதல் ரூ.1000 விலைக்குள் 84 நாட்கள் செல்லுபடியுடன் கிடைக்கும் ப்ரீப்பெய்டுதிட்டங்கள்

இந்த திட்டங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் கவலைப் படாதீர்கள், உங்கள் பட்ஜெட் விலையில் இருந்து ஒரு நூறு அல்லது இரு நூறு அதிகரித்து செலவு செய்ய நீங்கள் முடிவு செய்தால், 84 நாட்களுக்கும் 1.5 ஜிபி டேட்டா நன்மையுடன், அழைப்பு நன்மை மற்றும் கூடுதல் நன்மைகளை வழங்கக்கூடிய திட்டங்களை டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் வசம் வைத்துள்ளன. ஆனால், இவை ரூ.500 விலை வரம்பிற்குள் வராது.

ஏர்டெல் வழங்கும் 84 நாட்கள் செல்லுபடி கொண்ட மற்ற திட்டங்களின் விலை என்ன?

ஏர்டெல் வழங்கும் 84 நாட்கள் செல்லுபடி கொண்ட மற்ற திட்டங்களின் விலை என்ன?

சந்தாதாரர் தங்களின் விலைக் கோட்டை சிறிது நீட்டிக்க முடிந்தால், ஏர்டெல் இடம் ரூ. 719 விலையில் ஒரு திட்டம் உள்ளது. இது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. ஏர்டெல்லின் ரூ. 455 திட்டத்தைப் போலவே, அமேசான் பிரைம் மொபைலுக்கான 30 நாள் இலவச சோதனையைத் தவிர, ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் நன்மைகளுடன் OTT சந்தா நன்மைகளுடன் வருகிறது. இதேபோல், பயனர் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2ஜிபி கிடைக்கும் திட்டத்தை விரும்பினால், அது உங்களுக்கு ரூ. 839 விலையில் கிடைக்கிறது.

 Vi நிறுவனம் வழங்கும் பெஸ்ட் அன்லிமிடெட் திட்டங்கள்

Vi நிறுவனம் வழங்கும் பெஸ்ட் அன்லிமிடெட் திட்டங்கள்

இதேபோல், Vi நிறுவனத்திடம் ரூ. 839 திட்டமும் (தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகள்) மற்றும் ரூ. 719 திட்டம் (தினமும் 1.5ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகள்) ஏர்டெல்லைப் போலவே உள்ளது. Vi இன் முதன்மையான பலன்கள் என்றால், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இலவச டேட்டா வழங்கும் பின்கே ஆள் நைட் நன்மையுடன் வருகிறது. இது இரவு முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை இலவசமாக வழங்குகிறது.

எல்லாவற்றையும் விட இது தான் சிறந்ததா? என்ன காரணம்?

எல்லாவற்றையும் விட இது தான் சிறந்ததா? என்ன காரணம்?

இதேபோல், இதில் வீக்கெண்டு டேட்டா ரோல் ஓவர் நன்மையையும் நிறுவனம் வழங்குகிறது. இது வார இறுதியில் உங்களுடைய ஒட்டுமொத்த டேட்டாவையும் பயன்படுத்த அனுமதிக்கிறது. இத்துடன் உங்களுக்கு Vi Movies மற்றும் TVக்கான அணுகல் மற்றும் கூடுதல் 2GB டேட்டா பேக்கப் ஆகியவை கிடைக்கிறது. இவை ஏர்டெல்லின் திட்டங்களை விட சிறந்த திட்டங்களாகக் கருதப்படுகிறது. ஜியோவிடம் இருந்து கிடைக்கக்கூடிய திட்டங்கள் என்றால் அது தினமும் 1.5ஜிபி வழங்கும் ரூ.666, மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி வழங்கும் ரூ. 719 திட்டத்துடன் வருகிறது. இந்த திட்டங்களில் உங்களுக்கு எந்த திட்டம் சரியாக இருக்கும் என்று தேர்வு செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Vs Jio Vs Vi Prepaid Plans With 84 Days Validity Under Rs 500 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X