Airtel vs Jio vs Vi : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் IPL பார்க்க பெஸ்ட்டான திட்டம் இது தான்..
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சமீபத்தில் அதன் திட்டங்களை மேம்படுத்தி வருகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இப்போது 499 ரூபாயில் இருந்து தனது அடிப்படை திட்டத்தைத் தொடங்குகிறது. இது மொபைல் திட்டமாகும். இதேபோல் இரண்டாவது திட்டமாக ரூ. 899 திட்டமும் மற்றும் பிரீமியம் திட்டமாக ரூ. 1499 விலையில் ஒரு திட்டத்தையும் நிறுவனம் தற்போது கொண்டுள்ளது. இது இப்போது மூன்று புதிய திட்டங்கள் மூலம் அனைத்து உள்ளடக்கத்திற்கும் பயனர்களுக்கு அணுகலை வழங்கும்.

ஐபிஎல் அனுபவத்துடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா
இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து, ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மைகளுடன் வரும் தங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களை மேம்படுத்தியுள்ளது. ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் திட்டங்களுடன் காம்போ ரீசார்ஜ் சலுகைகளை வழங்கும் பலவிதமான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன, அவை நேரடி ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கத் தனது பயனர்களை அனுமதிக்கிறது.

ஏர்டெல் இல் கிடைக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டம்
ஏர்டெல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்கள் இப்போது ரூ .499, ரூ .699 மற்றும் ரூ .2798 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டங்கள் முறையே 28 நாட்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா, 56 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 365 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டங்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இந்தத் திட்டங்கள் பயனர்களுக்கு அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான அணுகலை வழங்கும். எனவே மொபைல் பயனர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவற்றுக்கான அணுகலைப் பயன்படுத்தலாம்.

விஐ டிஸ்னி+ ஹோஸ்டார் திட்டம்
விஐ தனது வலைத்தளத்தைப் புதுப்பித்து டிஸ்னி+ ஹோஸ்டார் திட்டங்களை 3 ஜிபி தினசரி டேட்டா நன்மைகளுடன் பட்டியலிட்டுள்ளது. இந்த திட்டங்களின் விலை ரூ .501, ரூ .701 மற்றும் ரூ .901 என்று நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இது வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உடன் 3 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. திட்டங்கள் முறையே 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும். டிஸ்னி+ ஹோஸ்டார் மொபைல் நன்மைக்கான அணுகலைத் தவிர, இந்தத் திட்டங்கள் இரவு முழுவதும் இலவச டேட்டா, வீக்கெண்டு டேட்டா ரோல்ஓவர் வசதி மற்றும் வி மூவீஸ் மற்றும் டிவி நன்மைகளுக்கான அதிகப்படியான அணுகலுடன் வருகின்றது.

விஐ கீழ் கிடைக்கும் ஆண்டு திட்டத்தின் விலை என்ன?
விஐ நிறுவனம் ரூ. 2595 விலையில் ஒரு ஆண்டு ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்குகிறது. இது 365 நாட்கள் செல்லுபடியாகும் 1.5 ஜிபி தினசரி தரவை வழங்குகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தொலைத்தொடர்பு-குறிப்பிட்ட நன்மைகளுடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. Vi ஒரு தரவுத் திட்டத்தையும் வழங்குகிறது. இது ரூ .501 மற்றும் ரூ. 601 விலையில் மொத்தமாக 56 நாட்கள் செல்லுபடியாகும் 75 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது.

ஜியோ டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்கள்
ஜியோ டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்கள் இப்போது ரூ .499 முதல் தொடங்கிக் கிடைக்கிறது. இந்த முதல் திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மையுடன் 3 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும். அடுத்த திட்டத்திற்கு ரூ .666 செலவாகும், இது தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் 56 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்திற்குப் பிறகு, அடுத்த திட்டம் ரூ .888 விலையில் 84 நாட்கள் செல்லுபடியாகும் 2 ஜிபி தினசரி தரவை வழங்கும். இறுதியாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மைகளுடன் ஒரு வருடாந்திர திட்டம் உள்ளது. இது 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் 2 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. இதன் விலை 2599 ரூபாய் ஆகும்.

உங்களுக்கு எந்த திட்டம் சிறப்பானது
இந்த திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் என்ற நன்மையை வழங்குகின்றது. ஜியோ இப்போது ஒரு டேட்டா திட்டத்தையும் வழங்குகிறது. இதன் விலை 549 ரூபாய் ஆகும். இது பயனர்களுக்கு 1.5 ஜிபி தினசரி தரவை 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. உங்களுக்கான திட்டம் எது என்பதை முடிவு செய்து, உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற திட்டத்தைத் தேர்வு செய்து பயன் அடைவீர்.


Click it and Unblock the Notifications