Airtel vs Jio vs Vi: ரூ.200 விலைக்குள் கிடைக்கும் பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்கள்.!
Airtel, Jio, Vi டெலிகாம் நிறுவனங்கள் இப்போது அன்லிமிடெட் அழைப்பு நன்மையுடன், டேட்டா நன்மைகளையும் கம்மி விலையில் வழங்குகிறது. குறைந்த விலையில் ஒரு சிறப்பான ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால் இந்த பதிவு உங்களுக்கானது தான். Airtel vs Jio vs Vi: ரூ.200 விலைக்குள் சிறந்த நமைகளுடன் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்
ஜியோ நிறுவனம் ரூ.200 விலைக்குள் 2 சிறந்த திட்டங்களை வழங்குகிறது. இதில் உள்ள திட்டம் ரூ.119 விலையில் வருகிறது. இந்த திட்டம் உங்களுக்குத் தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இது வரம்பற்ற அழைப்பு நன்மை உடன், 300 SMS நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி 14 நாட்களாகும். இத்துடன், Jio Tv, Jio Cinema, Jio Cloud போன்ற அம்சங்கள் இலவசமாகக் கிடைக்கிறது.

ரூ.149 விலையில் பெஸ்டான நன்மை
ஜியோவிடமிருந்து கிடைக்கும் மற்றொரு திட்டம் ரூ.149 விலையில் வருகிறது. இந்த திட்டம் உங்களுக்குத் தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் அழைப்பு நன்மையை வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி 20 நாட்களாகும். இதுவும், ஜியோவின் இலவச சந்தா நன்மைகளைக் கொண்டுள்ளது.

வோடபோன் ஐடியா திட்டங்கள்
வோடபோன் ஐடியா அதன் பயனர்களுக்கு 4 திட்டங்களை ரூ.200 விலைக்குள் வழங்குகிறது. இந்த திட்டங்களில் உள்ள முதல் திட்டம் ரூ.129 விலையில் வருகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் அழைப்பு நன்மையுடன் ஒட்டுமொத்தமாக 20MB டேட்டாவை இது கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி வெறும் 18 நாட்களாகும். இந்த திட்டத்துடன் SMS நன்மை என்று எதுவும் கிடைக்காது.

ரூ.155 விலையில் கிடைக்கும் நன்மைகள் என்ன?
ரூ.149 திட்டமானது 1ஜிபி டேட்டா நன்மையுடன் வருகிறது. இது அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளுடன், SMS நன்மை எதுவுமின்றி வருகிறது. இந்த திட்டம் உங்களுக்கு 18 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதே நன்மைகளை நீங்கள் 24 நாள் வேலிடிட்டி உடன் வாங்க நீங்கள் ரூ.155 கட்டணம் செலுத்தினால் போதும். இந்த திட்டத்துடன் உங்களுக்கு 300 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் வருகிறது.

Vi ரூ.199 திட்டத்தின் நன்மைகள் என்ன?
ரூ.199 திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் வருகிறது. இது 1 ஜிபி டேட்டா நன்மையுடன் 100 SMS வருகிறது. இதேபோல், ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.200 விலைக்குள் கிடைக்கும் சிறந்த திட்டங்களைப் பற்றிப் பார்க்கலாம். ரூ.155 திட்டமானது 1ஜிபி டேட்டாவுடன், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையுடன் 300 எஸ்எம்எஸ் உடன் 24 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் 1 மாத அமேசான் சந்தாவுடன் வருகிறது.

ஏர்டெல் வழங்கும் ரூ.179 திட்ட நன்மைகள்
இத்துடன் இலவச ஹலோ டியூன் சந்தா போன்றவற்றையும் நிறுவனம் வழங்குகிறது. ஏர்டெல் இடமிருந்து கிடைக்கும் மற்றொரு திட்டம் ரூ.179 விலையில் வருகிறது. இந்த ரூ.179 திட்டம் 2ஜிபி டேட்டா நன்மையுடன் வருகிறது. இந்த திட்டம் உங்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மையுடன் வருகிறது. இந்த திட்டம் 300 SMS உடன் வருகிறது. 200 ரூபாய் விலைக்குள் கிடைக்கும் இந்த சிறந்த திட்டங்களில் எது உங்களுக்கான பெஸ்ட் திட்டம் என்ற கருத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications