கம்மி விலையில் BSNL, Jio மற்றும் Airtel பிராட்பேண்ட் திட்டம் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..
சமீபத்தில், பிராட்பேண்ட் திட்டங்களுக்கான தேவை இந்திய சந்தையில் வேகமாக அதிகரித்துள்ளது. இந்த தற்போதைய தேவையைப் பயனர்களுக்காக சிறப்பாக வழங்க, நாட்டில் உள்ள பல்வேறு இணைய சேவை வழங்குநர்கள் பல மலிவு விலை கொண்ட சில பிராட்பேண்ட் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர். ஜியோ, பிஎஸ்என்எல், ஏர்டெல் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் பிராட்பேண்ட் திட்டங்கள் பல இருந்த போதிலும், மக்களின் கவனம் வழக்கம் போல மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த திட்டங்களின் மேல் மட்டுமே இருக்கிறது.

மக்களை அதிகம் கவர்ந்த விலை மலிவான பிராட்பேண்ட் திட்டம்
அப்படி மக்களின் கவனத்தை அதிகம் கவர்ந்த சில முக்கிய மலிவு விலை கொண்ட பிராட்பேண்ட் திட்டங்களை இங்கு உங்களுக்காக தொகுத்துள்ளோம். இந்த திட்டங்கள் உண்மையில் மலிவு விலையில் இருந்தாலும், இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் உங்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் அதிவேக டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மலிவு விலையில் ஏராளமான நன்மைகளுடன் கிடைக்கும் பிராட்பேண்ட் திட்டங்கள்
அப்படி, ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் வழங்கும் மலிவான பிராட்பேண்ட் திட்டங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இதில் எந்த திட்டம் உங்களுக்கு பொருத்தமானது என்பதை நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள். உண்மையை சொல்ல போனால், இந்த பட்டியலில் உள்ள திட்டங்கள் அனைத்தும் மலிவான விலையில் தான் கிடைக்கிறது. ஆனால், இவற்றின் நன்மைகளில் ஏராளமான மாற்றங்கள் உள்ளது என்பதனால் பதிவை முழுமையாக படித்து உங்களுக்கு சரியான திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ. 449 பிராட்பேண்ட் திட்டம்
அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.449 விலையில் மலிவான பிராட்பேண்ட் திட்டத்தை மிகவும் மலிவான விலையில் சிறந்த சலுகை உடன் வழங்குகிறது. இந்த ரூ. 449 திட்டமானது உங்களுக்கு 30 Mbps வேகத்தில் மொத்தம் 3.3TB அல்லது 3300GB டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் டேட்டா வரம்பை பயனர்கள் மீறும் போது, இணைய வேகம் 30 Mbps வேகத்தில் இருந்து 2 Mbps வேகமாக குறைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் 'இந்த' இலவச நன்மைகள் மட்டும் கிடையாதா?
நீங்கள் மாதம் தோறும் ரீசார்ஜ் செய்யும் தொகையுடன் இதை ஒப்பிடும் போது, இதன் நன்மைகள் உங்களுக்கு ஏராளமாக இருக்கிறது. பிராட்பேண்ட் சேவை மூலம் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து சாதனங்களிலும் நீங்கள் டேட்டா சேவையை இணைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதனுடன், பிஎஸ்என்எல் ரூ. 449 திட்டம் அனைத்து நெட்வொர்க்குக்கும் செல்லுபடியாகும் இலவச வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் போன்ற நன்மைகளுடன் வருகிறது. இருப்பினும், இந்த நுழைவு நிலை பிராட்பேண்ட் திட்டம் எந்த OTT சந்தாக்களையும் இணைக்காது என்பதை கவனிக்க மறக்காதீர்கள்.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் வழங்கும் ரூ. 499 பிராட்பேண்ட் திட்டம்
பயனர்களுக்கு கிடைக்கக்கூடிய மற்றொரு மிகவும் மலிவு பிராட்பேண்ட் திட்டம் என்றால் அது ஏர்டெல் வழங்கும் ரூ. 499 திட்டமாகும். இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிராட்பேண்ட் திட்டமானது 40 Mbps வேகத்தில் வரம்பற்ற டேட்டா நன்மையை பயனர்களுக்கு வழங்குகிறது. ஆம், சரியாக தான் படித்தீர்கள். இந்த விலையில் உங்களுக்கு வரம்பற்ற டேட்டா நன்மை கிடைக்கிறது. இத்துடன், உங்களுக்கு உள்ளூர் மற்றும் STD அழைப்புகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் விங்க் மியூசிக் சந்தா, ஷா அக்காடமி சந்தா, வூட் பேசிக் சந்தா, ஈரோஸ் நவ் சந்தா,

மலிவு விலையில் இத்தனை நன்மைகளா? அடேங்கப்பா.!
ஹங்கமா சந்தா போன்ற பல இலவச அணுகல் கொண்ட OTT சந்தாக்கள் உள்ளிட்ட பல பலன்களுடன் இந்த திட்டம் தொகுக்கப்பட்டுள்ளது. பிளே, ஷெமரூ எம் மற்றும் அல்ட்ரா ஆப் போன்ற சலுகையுடன் வருகிறது. இந்த திட்டத்தை தேர்வு செய்யும் சந்தாதாரர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மையையும் பெறுவார்கள். மேலும், பயனர்கள் Xstream போவித் சாந்தாவிற்கான ஒரு மாத இலவச HD பேக்கையும் தேர்வு செய்யலாம். ஏர்டெல் ரூ.499 பிராட்பேண்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலையில் இத்தனை நன்மைகள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ வழங்கும் ரூ. 399 பிராட்பேண்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் மிகவும் மலிவு விலை கொண்ட பிராட்பேண்ட் திட்டம் ரூ .399 விலையில் கிடைக்கிறது. இந்த ஜியோஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பு மற்றும் வரம்பற்ற இணைய நன்மைகளை தனது பயனர்களுக்கு வழங்குகிறது. குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த திட்டம் 30 Mbps வேகம் கொண்ட சமச்சீர் வேகத்தை வழங்குகிறது.

3300GB வரையிலான அதிவேக டேட்டா ஒரே வேகத்தில் கிடைக்கிறது
அதாவது அதே பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்தை இந்த திட்டம் வழங்குகிறது. இதன் படி 30 Mbps பதிவிறக்க வேகம் மற்றும் 30 Mbps பதிவேற்ற வேகம் உங்களுக்கு கிடைக்கிறது.ஜியோவின் இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த மலிவு விலை பிராட்பேண்ட் திட்டமானது உங்களுக்கு 3.3TB அல்லது 3300GB வரையிலான அதிவேக டேட்டா நன்மையை தடையின்றி வழங்குகிறது. மேலும், பயனர்கள் வழக்கம் போல ஜியோவின் பல ஜியோ சேவைகளுக்கான அணுகலைப் பெறுவார்கள்.

மக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டது 'இந்த' திட்டம் தானா?
இந்த மூன்று பிராட்பேண்ட் திட்டங்களைப் பார்த்த பிறகு, ஏர்டெல்லின் திட்டம் அதிக நன்மைகளை வழங்குவதாகவும், பயனர்களை அதிகம் ஈர்க்க்கும் திட்டமாக தெரிகிறது என்று நாங்கள் உணர்கிறோம். உங்களை இந்த திட்டத்தில் எந்த திட்டம் ஈர்த்தது என்று எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். டெலிகாம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சுரவாரஸ்யமான தகவலை உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களின் கிஸ்பாட் பக்கத்தை பார்வையிடுங்கள்.


Click it and Unblock the Notifications