ஏர்டெல் VS ஜியோ: ரூ.49 ரீசார்ஜ் திட்டம்.. அதிக சலுகைகளை வழங்கும் நிறுவனம் எது?
ஐபிஎல் 2024 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் டேட்டா திட்டங்கள் மற்றும் பல்வேறு அசத்தலான சலுகைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளன.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தற்போது ரூ.49 ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகள் வழங்கி உள்ளது. இப்போது எந்த நிறுவனம் ரூ.49 ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நன்மைகளை வழங்குகிறது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.49 திட்டம் ஆனது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் 1 நாள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால் 25ஜிபி டேட்டாவை இந்த திட்டம் மூலம் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் 25ஜிபி டேட்டா தீர்ந்தபிறகும் கூட 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
அதேபோல் ஜியோ ரூ.49 திட்டம் டேட்டா வவுச்சர் என்பதால் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) போன்ற வழக்கமான நன்மைகள், ஜியோ ஆப்ஸ் (Jio Apps) நன்மைகள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) போன்ற எந்த நன்மைகளும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.49 திட்டம் ஆனது 1 நாள் வேலிடிட்டி தான் வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 20ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டம் கூட ஒரு டேட்டா வவுச்சர் என்பதால் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), எஸ்எம்எஸ் (SMS)போன்ற நன்மைகளும் கிடைக்காது.

அதேபோல் ஏர்டெல் ரூ.49 திட்டத்தில் 20ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம். மேலும் 30 நாட்களுக்கு விங்க் பிரீமியம் சந்தாவை (Wynk Premium subscription) வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.49 திட்டம்.
எது சிறந்தது? ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் வழங்கும் ரூ.49 திட்டம் ஆனது 1 நாள் வேலிடிட்டி தான் வழங்குகிறது. ஆனால் ஏர்டெல் குறைந்த டேட்டாவை வழங்குகிறது. ஜியோ நிறுவனம் மட்டும் தான் அதிக டேட்டாவை வழங்குகிறது. எனவே ஜியோவின் ரூ.49 திட்டத்தை தேர்வு செய்வது தான் நல்லது. மேலும் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இரண்டு டேட்டா திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.39 திட்டம் ஆனது 1 நாள் மட்டுமே வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒரு நாளுக்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் 20ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம் என நிறுவனம் கூறியுள்ளது.
ஏர்டெல் ரூ.79 திட்டம் 2 நாள் வேலிடிட்டி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒரு நாளுக்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 40ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








