ஏர்டெல் vs ஜியோ.. ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்.. எது சிறந்தது?
ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளன. குறிப்பாக இரண்டு நிறுவனங்களும் இந்த திட்டங்களில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றன. இப்போது இந்த ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டத்தில் எந்த நிறுவனம் அதிக சலுகைகள் வழங்குகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜியோவின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3599 prepaid plan) தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் 120ஜிபி போனஸ் டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக 12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10ஜிபி டேட்டா வீதம் 120ஜிபி போனஸ் டேட்டா கிடைக்கும்.

எனவே நீங்கள் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1032.5ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.
குறிப்பாக 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ப்ரோ சேவைக்கான சந்தா, நானோ பானானா ஏ.ஐ, 5000ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற சலுகைகள் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டம் மூலம் வருடம் முழுவதும் 1000+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். அதுவும் ஜியோ டிவி வழியாக மட்டுமே இந்த லைவ் டிவி சேனல்களை பார்த்துக் கொள்ள முடியும்.
தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, EasemyTrip வழங்கும் விமானங்கள் மற்றும் ஓட்டல் புக்கிங்களில் ரூ.2200 வவுச்சர், Cinepolis திரையரங்குகளில் ரூ.150 தள்ளுபடி வவுச்சர், ரூ. 200 AJIO தள்ளுபடி வவுச்சர் போன்ற சலுகைகளும் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3599 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
அதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) போன்ற சலுகைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.

ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா, உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), போன்ற முக்கிய ஓடிடி சந்தா மற்றும் லைவ் டிவி சேனல்களை பெறமுடியும்.
எது சிறந்தது?
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தை விட ஜியோவின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக டேட்டா மற்றும் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. எனவே ஜியோவின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது.


Click it and Unblock the Notifications
