Home
News

ஏர்டெல் VS ஜியோ: ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்.. அதிக சலுகைகளை வழங்கும் நிறுவனம் எது?

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

அதேபோல் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஒரு வருடம் வேலிடிட்டி வழங்கும் ஒரே மாதிரியான திட்டத்தை வைத்துள்ளன. அதாவது இந்த இரண்டு நிறுவனங்களும் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளன. இப்போது ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் எந்த நிறுவனம் அதிக சலுகைகள் மற்றும் நன்மைகள் வழங்குகிறது என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் VS ஜியோ: ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்.. எது சிறந்தது?

ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 2999 Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளன. இதுதவிர அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மெம்பர்ஷிப், விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட பல நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் உள்ளன.

ஏர்டெல் VS ஜியோ: ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்.. எது சிறந்தது?

ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 2999 Plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே இந்த ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது.

ஆனால் ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்துக்கு தற்போது 23 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி நன்மை வழங்கப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் இந்த ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஒட்டுமொத்தமாக 388 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு ஜியோ 23 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்குவதால், தினமும் 2.5ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 57.5ஜிபி டேட்டா இலவமாகக் கிடைக்கிறது.

அதேபோல் ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. இதுதவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா (Unlimited True 5G Data), ஜியோ டிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் VS ஜியோ: ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்.. எது சிறந்தது?

குறிப்பாக ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தை விட ஜியோ நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் தான் அதிக டேட்டா நன்மை மற்றும் கூடுதல் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தை விட ஜியோ நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது.

மேலும் ஜியோ நிறுவனம் கூடிய விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளதால் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel vs Jio Rs 2999 annual plan: Check who offers more benefits and extra validity : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X