Airtel vs Jio: தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்: எது சிறந்தது?
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் அருமையான சலுகைகளை வழங்க வருகின்றன. குறிப்பாக ஜியோ நிறுவனம் சமீபத்தில் எக்கச்சக்கமான பல அசத்தலான சலுகைகளைத் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தினசரி 3ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. இப்போது அந்த திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் Xstream App, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஏர்டெல் ரூ.499 திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Xstream App, டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.
ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஏர்டெல்ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் சந்தா, Xtream App, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.
ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதுதவிர கூடுதலாக 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 44ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், நன்மைகளும் இதில் உள்ளன. அதேபோல் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் கூடுதலாக 6ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், நன்மைகளும் இதில் உள்ளன. அதேபோல் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் கூடுதலாக 40ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 292ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் இதில் உள்ளன. அதேபோல் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.
எது சிறந்தது? ஏர்டெல் நிறுவனத்தை விட கம்மி விலையில் தினசரி 3ஜிபி தரும் டேட்டா திட்டங்களை வழங்குகிறது ஜியோ நிறுவனம். அதேபோல் ஜியோ நிறுவனம் தனது திட்டங்களில் கூடுதல் டேட்டாவையும் வழங்குகிறது. ஆனால் ஏர்டெல் நிறுவனம் சற்று உயர்வான விலையில் தினசரி 3ஜிபி டேட்டா வழங்கினாலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது. எனவே ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications