Home
News

ரூ.300-க்குள்ள தான் நம்ம பட்ஜெட்:Jio Vs Airtel Vs Vodafone சிறந்த திட்டங்கள்.,காசு மிச்சமாகும் பாஸ்!

இப்போதெல்லாம், ரூ .199-க்கும் குறைவான விலையில், இணைய சேவை, வரம்பற்ற அழைப்பு வசதியையும் வழங்கும் ஆல்-ரவுண்டர் பேக்குளை பெறலாம். இந்த திட்டத்தில் ரூ.300-க்கு கீழ் பெரும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் ஜியோ சில திட்டங்களை மலிவான விலையிலேயே அறிமுகம் செய்கிறது. ரூ.149-க்கு கிடைக்கும் திட்டமானது 24 நாளுக்கு 24 ஜிபி டேட்டா தரவை வழங்குகிறது. அதாவது ஒரு நாளுக்கு 1 ஜிபி என்ற வீதம் டேட்டா வழங்கப்படுகிறது.

தினசரி 1.5 ஜிபி, 2 ஜிபி, 3 ஜிபி திட்டங்கள்

தினசரி 1.5 ஜிபி, 2 ஜிபி, 3 ஜிபி திட்டங்கள்

ரூ.199-க்கு கிடைக்கும் திட்டங்கள் குறித்து பார்க்கையில் 28 நாளுக்கு 42 ஜிபி கிடைக்கிறது. அதாவது ஒரு நாளுக்கு 1.5 ஜிபி என்ற வீதம் வழங்குவதோடு, வரம்பற்ற குரல் அழைப்புகளும் வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.249-க்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பார்க்கையில் இந்த திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் அதேபோல் தினசரி 2 ஜிபி என்ற வீதம் வழங்கப்படுகிறது, இந்த திட்டத்திலும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.300-க்கு கீழ் உள்ள திட்டங்கள்

ஏர்டெல் ரூ.300-க்கு கீழ் உள்ள திட்டங்கள்

ஏர்டெல் நிறுவனத்தை பொருத்தவரை மொத்தம் ரூ.300-க்கு கீழ் மாதம் முழுவதும் பயன்படுத்தும் திட்டங்கள் என்றால் இரண்டை மட்டுமே கூறமுடியும், இதில் ரூ.219-க்கு வழங்கப்படும் இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி ஆகும் இதில் தினசரி 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ரூ.249 திட்டம் சிறந்தது:

ரூ.249 திட்டம் சிறந்தது:

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.249 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந் திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலே வழங்கப்பட்டுள்ள இந்த இரண்டு திட்டங்கள் மட்டுமே மாதம் முழுவதும் பயன்படுத்த ஏதுவான திட்டங்களாக கருதப்படுகிறது.

வோடபோன் வழங்கும் அட்டகாச சலுகை:

வோடபோன் வழங்கும் அட்டகாச சலுகை:

வோடபோன் நிறுவனத்தை பொருத்த வரை பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது எண்களை வேறு போர்டலுக்கு மாற்றி விடக்கூடாது என பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது உள்ள அறிவிப்பு வோடபோன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.

ரூ.199, ரூ.219-க்கு கிடைக்கும் திட்டங்கள்

ரூ.199, ரூ.219-க்கு கிடைக்கும் திட்டங்கள்

ரூ.199-க்கு கிடைக்கும் திட்டங்களை பொருத்த வரை தினசரி 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 24 நாட்கள் செல்லுபடியாகும். அதேபோல் இதில் வரம்பற்ற குரல் அழைப்புகளும் கிடைக்கும். அதேபோல் ரூ.219-க்கு கிடைக்கும் திட்டமானது தினசரி 1 ஜிபி என்ற வீதம் என 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் வரம்பற்ற குரல் அழைப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள்

தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள்

ரூ.299-க்கு கிடைக்கும் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சமீபத்திய சிறப்பு சலுகையாக ரூ.249-க்கு ரீசார்ஜ் செய்யும் போது தினசரி 3 ஜிபி வீதம் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது முன்னதாக தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel, Vodafone, Jio: Best prepaid recharge plans under RS.300
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X