அடேங்கப்பா.!- நாளை முதல் வோடபோன், ஏர்டெல் கட்டணம் கடும் உயர்வு- புதிய திட்டங்கள்
வோடபோன், ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய தொலைத் தொடர்பு கொள்கையின்படி தங்களது வருவாயில் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இந்த நிலையில் வருவாய் குறைத்து காட்டியது தொடர்பான வழக்கில் ரூ. 1 லட்சத்து 33 ஆயிரம் கோடி கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 92 ஆயிரத்து 641 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என கடந்த மாதம் 24 ஆம் தேதி உத்தரவிட்டது.

கடும் நஷ்டத்தை சந்தித்த நிறுவனம்
இதனால் வோடபோன், ஐடியா கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில் மட்டும் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.50 ஆயிரத்து 922 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது. அண்மைக் காலக்கட்டத்தில் எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு நஷ்டத்தை சந்தித்தது இல்லை. இந்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் நேற்று ஒரே நாளில் 20% அளிவிற்கு அந்த நிறுவனம் இழப்பை சந்தித்துள்ளது.

வோடபோன் நிறுவனம் வலியுறுத்தல்
முதன்மை தொகை, வட்டி, அபராதத் தொகை, அபராதம் மீதான வட்டி என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை கட்டுவதற்கு 3 மாதங்கள் அவகாசம் கொடுத்துள்ளது. மத்திய அரசு விதிமுறைகளை தளர்த்த வேண்டும் எனவும் இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான எதிர்காலம் மிகவும் மோசமாக உள்ளது எனவும் வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை சந்திக்காத அளவிற்கு நஷ்டம்- ஏர்டெல்
அதேபோல் ஏர்டெல் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டாம் காலாண்டில் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடும் நெருக்கடி சந்தித்து வருவதாக ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. இதில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக வோடபோன், ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 3 முதல் கட்டணம் உயர்வு
வோடபோன், ஐடியா நிறுவனம் தங்களது சேவைக்கட்டணம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. அதேபோல் கட்டணத்தை உயர்த்தும் ஒரே நிறுவனமாக வோடபோன் இருக்கப்போவதில்லை, ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களும் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களை மனதில் வைத்தே திட்டங்கள் அறிவிப்பு
வாடிக்கையாளர்களுக்கு எளிமையான, வசதியான மற்றும் மலிவு விலையில் சேவைகளை பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் தங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்பட பொருத்தமான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெற முடியும் எனவும் இந்தியா முழுவதும் தடையற்ற இணைப்பை தொடர்ந்து வழங்குவோம் எனவும் அந்த வோடபோன், ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது.

28 நாட்கள் வேலிடிட்டி திட்டங்கள்
ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்து அன்லிமிட்டெட் கால் பெறலாம் ஆனால் முந்தய திட்டத்தில் இருந்து மாறுபட்டு மாதத்திற்கு 300 எஸ்எம்எஸ் மட்டும், மாதம் முழுவதும் 2ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. ரூ.249-க்கு ரீசார்ஜ் செய்தால், அன்லிமிட்டெட் கால், தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

28 நாட்கள் வேலிடிட்டி திட்டங்கள்
ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் அன்லிமிட்டெட் கால், தினமும் 2 ஜிபி டேட்டாவும், 100 எஸ்எம்எஸ்-ம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்து அன்லிமிட்டெட் கால், தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்-ம் வழங்கப்படுகிறது.

84 நாட்கள் வேலிடிட்டி திட்டங்கள்
ரூ.379-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் கால், மாதம் முழுவதும் 6 ஜிபி டேட்டா மற்றும் 1000 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.599-க்கு ரீசார்ஜ் திட்டத்தில், அன்லிமிட்டெட் கால், தினமும் 1.5 ஜிபி டேட்டா வசதி, 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

வருடாந்திர திட்டம்:
ரூ.1499-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் கால், ஒவ்வொரு மாதமும் 24 ஜிபி டேட்டா மற்றும் மொத்தமாக 3600 எஸ்எம்எஸ்-களும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2399-க்கு ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிட்டெட் கால், தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

புதியவகை திட்டங்கள்:
கீழே வழங்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ரூ.97-க்கு ரீசார்ஜ் செய்து 45 ரூபாய் டாக்டைம், ஒரு விநாடிக்கு ஒரு பைசா வழங்கப்படுகிறது. ரூ.197-க்கு ரீசார்ஜ் செய்து 2 ஜிபி டேட்டா மாதம் முழுவதும், அன்லிமிட்டெட் கால்ஸ், 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.297 மற்றும் ரூ.647-க்கு ரீசார்ஜ் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் அறிவிப்பு
தொலைதொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் தனது அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையையும் நாளை முதல் 47% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

ரூ.148 திட்டத்தின் அறிவிப்பு
ரூ.148 திட்டத்தின் கீழ் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இது அன்லிமிட்டெட் காலிங் வசதி பெறுகிறது. மாதம் முழுவதும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 300 எஸ்எம்எஸ்-ம் வசதியும் கொண்டுள்ளது.

ரூ.169,ரூ.199 திட்டங்கள் ரூ248 ஆக அறிவிப்பு
ரூ.248 திட்டங்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதேபோல் தினமும் 1.5 ஜிபி டேட்டா வசதியும் இருக்கிறது. 28 நாட்கள் இந்த திட்டம் செல்லுபடியாகும்.

ரூ.298 திட்டங்கள் அறிவிப்பு
ரூ.299 திட்டத்திற்கு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. தினமும் 2 ஜிபி டேட்டா தினமும், 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. இந்த திட்டமும் 28 நாட்கள் வேலிடிட்டியாகும்.


Click it and Unblock the Notifications








