ஏர்டெல்லுக்கு கும்பிடு.. அயோத்தியில் மனம்குளிர்ந்த கஸ்டமர்கள்.. ராமர் கோயில் ஏற்பாடு அப்படி!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு அங்குள்ள விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஹோட்டல்கள் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தரமான சம்பவத்தை செய்திருக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் (Ayodhya) இன்று ராமர் கோயில் கும்பாபிஷேக விழா (Ram Mandir Consecration) பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நண்பகல் 12.30 மணி அளவில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. இதனால், இந்த நிகழ்வு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்தியாவின் டாப் அரசியல்வாதிகள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் அங்கு குவிந்து வருகின்றனர். இதனால், அந்த நகரம் முழுவதும் முன்னேற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு இருக்கின்றன. பல்லாயிரணக்கான போலீசார் குவிக்கப்பட்டள்ளனர். 10,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதோடு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட ட்ரோன்கள் கண்காணிப்புப் பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நிகழ்வின்போது, அயோத்திக்கு செல்லும் ஏர்டெல் கஸ்டமர்கள் நெட்வொர்க் பின்னடைவால் எந்த வித சிரமத்தையும் எதிர்கொள்ள கூடாது என்பதற்காக அந்த நிறுவனம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்திருக்கிறது.
அயோத்தி நகரம் முழுவதும் பார்தி ஏர்டெல் நிறுவனமானது, அதனுடைய நெட்வொர்க் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், லேண்ட் மார்க்குகள், ஹோட்டல்கள் மற்றும் நகரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏர்டெல் கவரேஜை விரிவுபடுத்தி இருக்கிறது.

செல் ஆன் வீல்ஸ் (Cell on Wheels) எனப்படும் போர்ட்டபிள் செல் டவர்களை (Portable Cell Tower) நிறுவி இருக்கிறது. இவை வாகனங்களில் பொருத்தப்பட்ட டவர்களாகும். இந்த வாகனங்கள் ராமர் கோயிலை சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கோயில் வளாகம், லாக்கர் ரூம் மற்றும் ராஜவார் பார்க் போன்ற முக்கிய இடங்களில் ஹை-ஸ்பீடு டேட்டா கனெக்டிவிட்டி கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல், அயோத்தி தாம் (Ayodhya Dham), அயோத்தி கான்ட் (Ayodhya Cantt), விமான நிலையம், கத்ரா ரயில் நிலையம், பேருந்து நிலையம், ராம்பிரஸ்த் பூங்கா (Ramprasth Park), ராம் பத்ரா (Ram Bhadra), பிரம்மகுண்ட் (Brahmakund), குப்தர் காட் (Guptar Ghat), பரிக்கிரமா மார்க் மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளிலும் தடையில்லா டேட்டா கனெக்டிவிட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே போல ஃபைபர் ஆப்டிக் கேபிள் கனெக்டிவிட்டியும மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க கூடுதல் நெட்வொர்க் இன்ஜினியர்கள், டெக் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல வோடபோன் ஐடியா நிறுவனமும், தங்களது வாடிக்கையாளர்களுக்காக செல் ஆன் வீல்ஸ் போர்ட்டபிள் செல் டவர்களை அயோத்தியில் நிறுவி இருக்கின்றது.

ஏர்டெல்லை போலவே, அயோத்தி தாம், அயோத்தி கான்ட், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி விட்டது. அயோத்தி மேம்பாட்டு ஆணையம், விமான நிலைய ஆணையம், பொதுப்பணித் துறை மற்றும் காவல்துறை ஆகியவற்றின் உதவி மற்றும் அனுமதியுடன் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








