பயனர்களை 'காப்பாற்ற' குவியும் ஆபர்கள், உங்களுக்கான ஆபர் எது.?
ரிலையன்ஸ் ஜியோவின் சந்தை நுழைவு பிற தொலைத்தொடர்பு பெருநிறுவனங்களுக்கு தூக்கமில்லாத இரவுகளை கொடுத்திருக்கிறது.
ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோவை எதிர்த்து போராட தங்களுக்கு இருக்கும் ஒரே வழியான அதிரடி சலுகைகளை வரிசை கட்டி வழங்க தொடங்கின.
நாட்கள் நகர நகர ஜியோவின் வரம்பற்ற வோல்ட் அழைப்புகள் மற்றும் இணைய சலுகைகள் ஆகியவைகளை சமாளிக்க பிறஆப்ரேட்ர்கள் இன்னுமின்னும் அதிக சலுகைகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அவர்களை தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

பொருத்தமான டேட்டா பேக்
அப்படியாக, பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் உங்களுக்காக வழங்கும் அற்புதமான டேட்டா திட்டங்களை இங்கே தொகுத்துள்ளோம், நீங்கள் பயன்படுத்தும் நெட்வெர்க் உங்களுக்கு பொருத்தமான டேட்டா பேக் உள்ளதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் சமீபத்தில் ரூ.1099/-க்கு ஒரு அற்புதமான வரம்பற்ற 3ஜி தரவு திட்டமொன்றை அறிவித்தது. 30 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டம் தவிர்த்து 30 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.549/-க்கு 10ஜிபி அளவிலான தரவு திட்டம் ஒன்றும் 30 நாட்கள் மற்றும் ரூ.156/-க்கு 2ஜிபி அளவிலான 2ஜி தரவு திட்டம் ஒன்றும் அறிவித்தது.

ஏர்டெல்
ஜியோவின் வரம்பற்ற சலுகைகளுக்கு சரியான போட்டியாய் சிறந்த திட்டங்களை சமீபத்தில் 'இன்பினிட்டி திட்டங்கள்' என்ற பெயரின் கீழ் ஏர்டெல் அனைத்து வட்டங்களிலும் (ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு) சந்தாதாரர்களுக்கு அறிவித்தது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

4ஜி தரவு நன்மை
அந்த திட்டம் பல காம்போ தொகுப்புகளில் 4ஜி தரவு நன்மைகளை பயனர்களுக்கு வழங்குகிறது. உடன் அது வின்க் மியூஸிக், திரைப்படங்கள், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் குரல் அழைப்புகள், ஆகியவைகளையும்.

ஐடியா
ஏர்டெல் மற்றும் வோடபோனுக்கு இணையாக, ஐடியா அதன் அனைத்து 3ஜி / 4ஜி தரவு திட்டங்களை வரை 67 சதவீதம் வரை விலைக்குறைப்பு செய்தது. அதன்படி, ஐடியா பயனர்கள் ரூ.990/-க்கு 10ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி தரவு பெற முடியும். மற்றும் ரூ.349/-கு 2ஜிபி மற்றும் முறையே ரூ.649/-க்கு 3ஜிபி பெற முடியும்.

பிரீடம் தரவு
மேலும் ஐடியா மாதாந்திர பிரீடம் தரவு என்ற திட்டத்தின்கீழ் ரூ.100/-க்கு 300 எம்பி அளவிலான 2ஜி தரவும் மற்றும் ரூ175/-க்கு 500 எம்பி அளவிலான தரவும் வழங்குகிறது, இந்த 2 திட்டமுமே 28 நாள்கள் செல்லுபடியாகும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வோடபோன் இந்தியா
வோடபோன் இந்தியா சமீபத்தில் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் 1ஜிபி செலவில் 10 ஜிபி தரவு வழங்கும் அதன் அற்புதமான திட்டங்களை அறிவித்தது. இது அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.

மேலும் படிக்க
மலிவு விலையில் 4ஜி போன் அறிமுகம் செய்யும் ரிலையன்ஸ் ஜியோ விலை ரூ.1,000 தான்.!!


Click it and Unblock the Notifications