விலை ஒஸ்தி தான்., சலுகை டபுள் மடங்கு ஒஸ்தி- விஐ, ஏர்டெல் பயனர்களுக்கான சிறந்த திட்டங்கள்!

|

உயர்நிலை திட்டங்களின் குறிப்பிடத்தக்க பட்டியலில் முதல் திட்டமாக இருப்பதாக ஏர்டெல்லின் ரூ.999 திட்டம் ஆகும். இந்த திட்டத்தை தேர்வு செய்து ரூ.999 செலுத்துவதன் மூலம் பயனர்களுக்கு 150 ஜிபி மாதாந்திர டேட்டாவை 200 ஜிபி வரையிலான ரோல் ஓவர் உடன் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களுடன் பெறலாம். இந்த திட்டத்தின் சந்தாவுடன் பயனர்கள் 1 வழக்கமான சிம் மற்றும் 2 இலவச ஆட் இன் குரல் இணைப்பை பெறுவார்கள்.

நிரந்தர சலுகைகள் வழங்கும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

நிரந்தர சலுகைகள் வழங்கும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

ப்ரீபெய்ட் திட்டங்கள் என்பது பயனர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது. காரணம் மாத வருமானத்தை கருத்தில் கொண்டும் பட்ஜெட் விலையை மனதில் கொண்டும் பெரும்பாலானோர்கள் தேர்ந்தெடுப்பது ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆகும். ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கில் பெரும்பாலான மற்றும் நிரந்தர சலுகைகள் வழங்குவது போஸ்ட்பெய்ட் திட்டங்களில் தான். குறிப்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீமியம் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் பல அற்புதமான நன்மைகளை வழங்குகிறது. மேலும் பல ஓடிடி ஸ்ட்ரீமிங் சேவைகளும் வழங்கப்படுகிறது. டேட்டா, குரல் அழைப்புகளையும் தாண்டி கூடுதல் அணுகல் தேவைப்படும் பயனர்களுக்கு இந்த திட்டங்கள் ஏற்றதாக இருக்கும். இந்தியாவில் உள்ள இரண்டு முக்கியதொலைத் தொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா வழங்கும் உயர்நிலை போஸ்ட்பெய்ட் திட்டங்களில் கிடைக்கும் நன்மைகளை விரிவாக பார்க்கலாம்.

பாரதி ஏர்டெல் இரண்டு ப்ரீமியம் திட்டங்கள்

பாரதி ஏர்டெல் இரண்டு ப்ரீமியம் திட்டங்கள்

பாரதி ஏர்டெல் இரண்டு ப்ரீமியம் திட்டங்களை வழங்குகிறது. ஏர்டெல் வழங்கும் முதல் திட்டமானது ரூ.999 திட்டமாகும். குறிப்பிடத்தக்க பட்டியலில் இருக்கும் முதல் திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்தை தேர்வு செய்து ரூ.999 செலுத்துவதன் மூலம் பயனர்களுக்கு 150 ஜிபி மாதாந்திர டேட்டாவை 200 ஜிபி வரையிலான ரோல் ஓவர் உடன் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களுடன் பெறலாம். இந்த திட்டத்தின் சந்தாவுடன் பயனர்கள் 1 வழக்கமான சிம் மற்றும் 2 இலவச ஆட் இன் குரல் இணைப்பை பெறுவார்கள். ஏர்டெல் அதன் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் "ஏர்டெல் தேங்க்ஸ் பிளாட்டினம் ரிவார்டுகளையும்" வழங்குகிறது. கூடுதல் செலவின்றி 1 வருடத்திற்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி மெம்ர்ஷிப் 1 வருடத்திற்கான கூடுதல் அணுகல் வழங்கப்படுகிறது. அதேபோல் ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீம் ஆப் ப்ரீமியம், விங்க் ப்ரீமியம், ஷா அகாடமிக்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்படுகிறது.

அதிக மாதாந்திர டேட்டா

அதிக மாதாந்திர டேட்டா

அடுத்ததாக ஏர்டெல் வழங்கும் மிக உயர்ந்த திட்டமானது அதிக மாதாந்திர டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டமானது ரூ.1599 விலையில் வழங்குகிறது. இது வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 200 ஜிபி டேட்டாவை ரோல்ஓவர் உடனான 500 ஜிபி மாதாந்திர டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டங்களில் 200 ஐஎஸ்டி நிமிடங்கள் உடன் வழங்குகிறது. இதற்கான சந்தா செலுத்தும் போது 1 வழக்கமான சிம் உடன் குடும்ப உறுப்பினர்களுக்கான 1 இலவச ஆட் ஆன் குரல் இணைப்பும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் பிளாட்டினம் நன்மைகளும் இந்த திட்டங்களில் கிடைக்கிறது.

கூடுதல் 30 ஜிபி டேட்டா

கூடுதல் 30 ஜிபி டேட்டா

வழக்கமான வரம்பற்ற அழைப்புகள் உடன் கூடுதல் 30 ஜிபி டேட்டா கூடுதல் 100 எஸ்எம்எஸ் சலுகையோடு ரூ.299 செலவில் கூடுதல் குடும்ப உறுப்பினர்களையும் இணைக்கலாம். இலவச ஆட் ஆன்களை பயன்படுத்திய பிறகு இந்த கூடுதல் இணைப்புகள் ரூ.999 மற்றும் ரூ.1599 மட்டுமே வசூலிக்கப்படும். குடும்ப உறுப்பினர்களுக்கான திட்டத்தில் அதிகபட்சம் 9 ஆட் ஆன் எண்களை இணைக்கலாம்.

வோடபோன் ஐடியா ரெட்எக்ஸ் திட்டங்கள்

வோடபோன் ஐடியா ரெட்எக்ஸ் திட்டங்கள்

வோடபோன் ஐடியா (விஐ) தனிப்பட்ட பயனர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தனித்தனியாக போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. தனிப்பட்ட பயனர்களுக்கான விஐ மிகவும் ப்ரீமியம் திட்டங்களை வழங்குகிறது. இதன் விலை ரூ.1099 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் ரெட்எக்ஸ் திட்டமாகும். விஐ-ன் ரெட்எக்ஸ் திட்டங்கள் பல ஓடிடி சந்தாக்கள் மற்றும் பலவற்றுடன் தொகுக்கப்பட்டுள்ளன. ரூ.1099 செலவில் பயனர்கள் ஒரு மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் உடன் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. திட்டத்தின் கூடுதல் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

ரூ.2299 விலையில் வரும் ப்ரீமியம் குடும்ப ரெட் எக்ஸ் திட்டம்

ரூ.2299 விலையில் வரும் ப்ரீமியம் குடும்ப ரெட் எக்ஸ் திட்டம்

மறுபுறம் விஐ ஆனது ரூ.2299 விலையில் வரும் ப்ரீமியம் குடும்ப ரெட் எக்ஸ் திட்டமாகும். இந்த திட்டம் 5 குடும்ப உறுப்பினர்களுக்கான இணைப்பை வழங்குகிறது. திட்டத்தின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைப்புகளுக்கு மாதத்திற்கு 3000 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் உடன் வருகிறது. இந்த திட்டமானது வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது ரெட்எக்ஸ் திட்டத்தின் கூடுதல் நன்மைகளை உள்ளடக்கியது.

கூடுதல் சலுகைகள்

கூடுதல் சலுகைகள்

இந்த திட்டங்களில் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் குறித்து பார்க்கையில், மொபைல் நெட்பிளிக்ஸ்-க்கான ஒரு வருட கூடுதல் சந்தாவை பெறலாம். ரூ.1499 மதிப்புள்ள அமேசான் பிரைம்-ன் ஒரு வருடத்திற்கான சந்தாவையும், ரூ.499 மதிப்புள்ள ஒரு வருடத்திற்கான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Airtel, VI Offers Best Premium Postpaid Plans: Unlimited Data, Voice Calling and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X