Just In
- 11 hrs ago
86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 12 hrs ago
குறைந்த விலையில் இன்று மட்டும் தான் சலுகை.. உடனே ஆர்டர் செய்யுங்கள்.. அட்டகாச Tecno போன்கள்..
- 12 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி சி30: என்னென்ன அம்சங்கள்?
- 13 hrs ago
IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?
Don't Miss
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- News
"நீங்க இப்படி செய்யலாமா.. கொஞ்சம் யோசிங்க பிளீஸ்!" இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்த சர்வதேச நிதியம்
- Automobiles
சொன்னதை செஞ்சுட்டாங்க... டாடா நிறுவனம் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!
- Sports
வழுக்கி விழுந்த ஹர்திக் பாண்ட்யா.. முதுகில் பலத்த அடியா.. குஜராத் vs ராஜஸ்தான் போட்டி பரபர சம்பவம்!!
- Movies
அம்மா தூக்குப்போட்டு தற்கொலை.. மோசமான நாள்.. வேதனையை பகிர்ந்த நடிகை கல்யாணி !
- Finance
உணவு, பிட்காயின், தங்கம், வெள்ளியை வாங்கி வைங்க.. ஏன்.. பிரபல எழுத்தாளர் சொல்லும் காரணத்தை பாருங்க!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா: வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்கள்.! இதோ பட்டியல்.!
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த மாதம் இந்த மூன்று நிறுவனங்களும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. அதன்பின்பு அவ்வப்போது இந்த மூன்று நிறுவனங்களும் ப்ரீபெய்ட் திட்டங்களில் சில சலுகைகளை வழங்கி வருகின்றன.

அதேபோல் இந்த மூன்று நிறுவனங்களும் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்நிறுவனங்கள் 5ஜி சோதனையை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் வழங்கும் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 356 நாட்கள் ஆகும். கூடுதலாக இந்த திட்டத்தில் 10ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.
Xiaomi 11T Pro ஒரு சாதாரண ஸ்மார்ட்போன் இல்ல.. இது 'ஹைப்பர்போன்'.. அப்படினா என்ன தெரியுமா?

குறிப்பாக ஜியோவின் இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் ஸ்ட்ரீமிங் சேவை, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான ஓராண்டு அணுகலுடன் வருகிறது.

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏர்டெல் வருடாந்திரத் திட்டமானது டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, அமேசான் பிரைம் மொபைல் பதிப்பிற்கான 30 நாள் இலவச சோதனை அணுகல், அப்பல்லோ 24/7 ஹெல்த்கேர் செயலிக்கான மூன்று மாத அணுகல், ஷா அகாடமியில் இலவச ஆன்லைன் படிப்புகள், ஃபாஸ்டேக்கில் ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹலோ ட்யூன்கள் மற்றும் Wynk மியூசிக் பயன்பாட்டிற்கான அணுகல் உள்ளிட்டபல நன்மைகளை வழங்குகிறது.

வோடபோன் ஐடியா ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில்
வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின்வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போன்.! முழு விவரம்.!

டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கான அணுகல் மற்றும Vi இன் பிரத்யேக Vi திரைப்படங்கள் மற்றும் டிவி அணுகலை வழங்குகிறது இந்த வோடபோன் ஐடியா வருடாந்திரத் திட்டம். அதேபோல் வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர், Vi இன் ஃபிளாக்ஷிப் Binge ஆல் நைட் ஆஃபர் 12 முதல் 6 வரை இலவச டேட்டா நன்மை இந்த திட்டத்திற்குப் பொருந்தும்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999