Home
News

"வாவ்" சொல்ல வைக்கும் டேட்டா; ரூ.49/-க்கு புதிய திட்டம்; ஏர்டெல் அதிரடி.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் பிரதான போட்டியாளர் ஆன பார்தி ஏர்டெல், அதன் பயனர்களுக்கு ரூ.49/- மதிப்புள்ள ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

By Muthuraj

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் பிரதான போட்டியாளர் ஆன பார்தி ஏர்டெல், அதன் பயனர்களுக்கு ரூ.49/- மதிப்புள்ள ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விளைவாக டெலிகாம் துறையில் ரூ.50/- மற்றும் அதற்கு கீழான கட்டண திட்டங்களுக்கு இடையேயான ஒரு கடும் போட்டியை உண்டாகி உள்ளது. பார்தி ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ரூ.49 ப்ரீபெய்ட் ரீசார்ஜின் நன்மைகள் மற்றும் செல்லுபடி என்ன.? என்பதை விரிவாக காண்போம்.

3ஜிபி அளவிலான 4ஜி டேட்டா.!

3ஜிபி அளவிலான 4ஜி டேட்டா.!

ஏர்டெல் ரூ.49/- திட்டமானது மொத்தம் 3ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும் ஒரு திட்டமாகும். இது ஒரு நாள் மட்டுமே என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்மையானது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் என்பதும், மற்ற பயனர்களுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

'மைஏர்டெல்' ஆப் அல்லது ஏர்டெல் வெப்சைட்.!

'மைஏர்டெல்' ஆப் அல்லது ஏர்டெல் வெப்சைட்.!

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஏர்டெல் சந்தாதாரர்கள் 'மைஏர்டெல்' பயன்பாடு அல்லது ஏர்டெல் நிறுவனத்தின் இணையத்தளத்தில் உள்நுழைந்து, திட்டத்தின் செல்லுபடியை சரிபார்க்க மொபைல் எண்ணை உள்ளிடவும். உங்கள் எண் தகுதியானதாக இருக்கும் பட்சத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளவும்.

ஜியோவின் ரூ.49/-ன் நன்மைகள்.!

ஜியோவின் ரூ.49/-ன் நன்மைகள்.!

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ரூ.49/- ஆனது, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.49/- திட்டத்திற்கு கடுமையான போராட்டத்தை வழங்குவதாக உள்ளது. ரிலைன்ஸ் ஜியோவின் ரூ.49/- என்கிற ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது, வெறும் 1ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. ஆனால் 28 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. மற்றும் இந்த திட்டமானது ஜியோ போன் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

56 ஜிபி அளவிலான டேட்டா.!

56 ஜிபி அளவிலான டேட்டா.!

டேட்டா நன்மைகளை மட்டுமின்றி, ரிலைன்ஸ் ஜியோவின் ரூ.49/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது, வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல்அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது. ரூ.49/-ல் மட்டுமின்றி ஜியோவை எதிர்க்கும் முனைப்பின் கீழ், பார்தி ஏர்டெல் ரூ.249, ரூ.349 போன்ற பல திட்டங்களை சந்தைப்படுத்தி உள்ளது. ஏர்டெல் ரூ.249/-ஐ பொறுத்தவரை, நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா என, 28 நாட்களுக்கு மொத்தம் 56 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

நாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான டேட்டா.!

நாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான டேட்டா.!

ஏர்டெல் ரூ.249/- ப்ரீபெய்ட் பேக் உடன், வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி / ரோமிங் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளையும் பெறலாம். மறுகையில் உள்ள ஏர்டெல் ரூ.349/- ப்ரீபெய்ட் ஆனது, நாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி / ரோமிங் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

How to Find a domain easily for your business (TAMIL)
84 ஜிபி மற்றும் 105 ஜிபி.!

84 ஜிபி மற்றும் 105 ஜிபி.!

போட்டியாளரான ஜியோ உடனான ஒப்பீட்டில், ஜியோ ரூ.299/- ப்ரீபெய்ட் பேக் ஆனது மொத்தம் 84 ஜிபி அளவிலான டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்க, மறுகையில் உள்ள ஜியோ ரூ.349/- திட்டமானது, மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் 105 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Airtel versus Reliance Jio: Data deal gets sweeter! Below Rs 50, here’s new plan for you. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X