நெட்பிளிஸ், அமேசான் ப்ரைம், ஜீ5, டிவியையும் இலவசமாக வழங்கும் ஏர்டெல்.!
நெட்பிளிக்ஸ, அமேசான் ப்ரைம், ஜீ5 உள்ளிட்ட சேவைகளையும் இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஏர்டெல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு நன்றி செல்லும் விதமாகவும் ஏர்டெல் நி
நெட்பிளிக்ஸ, அமேசான் ப்ரைம், ஜீ5 உள்ளிட்ட சேவைகளையும் இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஏர்டெல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு நன்றி செல்லும் விதமாகவும் ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய 3 பிராட்பேண்ட் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த பிளான்கள் குறித்து இனி காணலாம்.

ஏர்டெல் வி-பைபர் பிராட்பேண்ட்:
ஏர்டெல் நிறுவனத்தின் வி-பைபர் பிராட்பேண்ட் சேவை புதிப்பதித்து அளித்துள்ளது ஏர்டெல் நிறுவனம். 1,099 ரூபாயிலிருந்து பிராட்பேண்ட் சேவை துவங்குகின்றது. இவைகளோடு நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ5, ஏர்டெல் டிவிகளும் இவசமாக வழங்கப்படுகின்றது. மேலும் ரூ.129க்கு ரீசார்ஜ் செய்தால், ஹெல்லோ டியூன்ஸ் சேவையும் இலவமாக வழங்கப்படுகின்றது.

ரூ.1299 திட்டத்தின் சேவை:
முன்னதாக இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் ரூ1,299 மேலான போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளுக்கு நெட்பிளிக்ஸ் அமேசான் ப்ரைம் சந்தா இலவசமாக அளித்திருந்தது என்பது குறிப்பிடதக்கது.

100 எம்பிபிஎஸ் வேகம்:
ஏர்டெல் வி- பைபர் திட்டத்தில் ரூ.1099 ரீசார்ஜ் செ;யதால், 300ஜிபி டேட்டாவை 100 எம்பிபிஎஸ் வேகத்தில் பெற முடியும். சேவையுடன் நெட்பிளிக்ஸ், அமேசான், ப்ரைம், ஜீ5 ஏர்டெல் டிவி ஆகியவைகளையும் இலவசமாக பெற முடியும்.

ரூ. 1,599 பிராட்பேண்ட் பிளான்:
இரண்டாவதாக 1,599 ரூபாயிற்கான ஏர்டெல் வி-பைபர்' திட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. 300எம்பிபிஎஸ் இன்டெர்நெட் வேகம் இந்த திட்டத்தில் 600ஜிபி டேட்டாவை வழங்கவுள்ளது ஏர்டெல் நிறுவனம். இந்த சேவையுடன் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ5 மற்றும் ஏர்டெல் டிவி ஆகியவற்றின் சேவைகளை இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 1999 பிராட்பேண்ட் அம்சம்:
ரூ. 1,999 ரூபாய் ஏர்டெல் வி-பைபர்' பிராட்பேண்ட் 100எம்பிபிஎஸ் இன்டெர்நெட் வேகத்தை கொண்டுள்ளது. இன்டெர்நெட் பயன்பாட்டிற்கு எந்த ஒரு அளவையும் அறிவிக்கவில்லை. அளவற்ற டேட்டா பயன்பாட்டுடன் இந்த சேவையை அறிவித்துள்ளது ஏர்டெல். மற்ற சேவைகள் போன்றே இந்த சேவையும் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ5 மற்றும் ஏர்டெல் டிவி ஆகியவற்றின் இலவசமான சந்தாக்களுடனே வந்துள்ளது
இந்த மூன்று திட்டங்களும் ஒரு மாத கால அளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications