பொங்கி எழுந்த Airtel.. இனி ஒரே ரீசார்ஜ் இல் நெட், காலிங், டிடிஎச், ஓடிடி சேவை! குஷியின் உச்சத்தில் யூஸர்கள்!

|

ஜியோ அறிமுகமான குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்தது. இரண்டாவது இடத்தில் இருக்கும் ஏர்டெல் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வழங்கி ஜியோவுக்கு கடுமையான போட்டியை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும் அதிகரிக்கும் ஏர்டெல் தொடர் முயற்சியில் ஈடுபட்டு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. அதன்படி ஏர்டெல் வழங்கும் ஒரு சலுகை குறித்த விவரத்தை தான் பார்க்கப் போகிறோம்.

ஒரே ரீசார்ஜ் இல் இத்தனை சலுகையா?

ஒரே ரீசார்ஜ் இல் இத்தனை சலுகையா?

ஏர்டெல் பிளாக் திட்டத்தின் மூலம் பயனர்கள் டிடிஎச், லேண்ட்லைன், ஃபைபர் மற்றும் மொபைல் இணைப்பைப் பெறலாம். அதாவது ஒரே ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்கள் மற்றும் அவர்களது வீட்டுக்கு தேவையான மொத்த சலுகையும் பெற முடியும். அதேபோல் இந்த திட்டத்தில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல ஓடிடி நன்மைகளும் தொகுத்து வழங்கப்படுகிறது.

என்னென்ன சலுகைகள், விலை எவ்வளவு?

என்னென்ன சலுகைகள், விலை எவ்வளவு?

டிடிஎச், ஓடிடி, மொபைல் நெட், காலிங், பிராட்பேண்ட், ஃபைபர் என ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனியாக சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுப்பது சிரமம். ஒவ்வொன்றாக ஆராய்ந்து எந்த சேவைக்கு எது பெஸ்ட் என தேர்ந்தெடுப்பது கஷ்டம். இந்த சிரமத்தை நிவர்த்தி செய்யவே ஏர்டெல் தங்களது பயனர்களுக்கு பிளாக் திட்டத்தை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் ஓடிடி சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதலாக டிடிஎச் சேவையும் கிடைக்கிறது. ஏர்டெல் பிளாக் திட்டமானது ரூ.699 முதல் ரூ.2999 வரையிலான விலையில் கிடைக்கிறது.

ரூ.699 ஏர்டெல் பிளாக் திட்டம்

ரூ.699 ஏர்டெல் பிளாக் திட்டம்

ரூ.699 விலையில் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டமானது அடிப்படை விலை ஏர்டெல் பிளாக் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் 40 எம்பிபிஎஸ் வரை வேகத்திலான ஃபைபர் சலுகை, ரூ.300 மதிப்புள்ள டிடிஎச் இணைப்பு சேவை வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப்ஸ் உள்ளிட்ட 12 ஓடிடி பயன்பாடுகளுக்கான இலவச சந்தா அணுகல் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் போஸ்ட் பெய்ட் இணைப்புகளும் கிடைக்கிறது.

ரூ.899 ஏர்டெல் திட்டம்

ரூ.899 ஏர்டெல் திட்டம்

105 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புடன் கூடிய 2 போஸ்ட்பெய்ட் இணைப்புகள் என பல சலுகைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் அமேசான் பிரைம் வீடியோக்கள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட 12 ஆப்ஸிற்கான அணுகல், ரூ.350 மதிப்புள்ள டிடிஎச் சலுகை உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ரூ.1098 ஏர்டெல் பிளாக் திட்டம்

ரூ.1098 ஏர்டெல் பிளாக் திட்டம்

இந்த ரீசார்ஜ் திட்டத்தில் ஃபைபர் மற்றும் லேண்ட்லைன் இணைப்புடன் கூடிய 100Mbps வேக 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வரம்பற்ற அழைப்புடன் கூடிய போஸ்ட்பெய்ட் நன்மையும் கிடைக்கிறது. அதேபோல் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.

ரூ.1099 ஏர்டெல் பிளாக் திட்டம்

ரூ.1099 ஏர்டெல் பிளாக் திட்டம்

இந்த திட்டத்திற்கும் இதன் முந்தைய திட்டத்திற்கும் உள்ள வித்தியாச விலை ரூ.1 மட்டுமே ஆகும். சந்தா லேண்ட்லைன் மூலம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் வழங்கப்படுகிறது. ஃபைபரில் 200Mbps வேகத்தில் வரம்பற்ற இணையம் கிடைக்கிறது. அதேபோல் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட 13 ஆப்ஸ் சந்தா அணுகலுடன் ரூ.350 மதிப்புள்ளி டிடிஎச் அணுகலும் வழங்கப்படுகிறது.

ரூ.1599 ஏர்டெல் பிளாக் திட்டம்

ரூ.1599 ஏர்டெல் பிளாக் திட்டம்

வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற இணையம் வழங்கப்படுகிறது. லேண்ட்லைன் இணைப்பும் இதில் கிடைக்கிறது. ரூ.350 மதிப்புள்ள டிடிஎச் இணைப்புகள் உடன் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட ஓடிடி அணுகல் வழங்கப்படுகிறது.

ரூ.1799 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம்

ரூ.1799 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம்

இந்த ஏர்டெல் பிளாக் திட்டத்தில் ஃபைபர் சேவை, லேண்ட்லைன் இணைப்பு, 200 எம்பிபிஎஸ் வேக அன்லிமிடெட் இன்டர்நெட் என பெரும்பாலான நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 4 போஸ்ட்பெய்ட் இணைப்புகளை பெறலாம். அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட பல்வேறு ஓடிடி சந்தா அணுகலும் வழங்கப்படுகிறது.

ரூ.2299 ஏர்டெல் திட்டம்

ரூ.2299 ஏர்டெல் திட்டம்

ஏர்டெல் பிளாக் திட்டத்தில் மிகவும் விலை உயர்ந்த ரீசார்ஜ் திட்டம் இதுவாகும். இந்த திட்டத்தில் பயனர்கள் ஃபைபர் மற்றும் லேண்ட்லைன் இணைப்பு சேவைகளை பெறலாம். 240 ஜிபி டேட்டாவுடன் 4 போஸ்ட்பெஸ்ட் இணைப்புகள் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. ரூ.350 மதிப்புள்ள டிடிஎச் அணுகல் உடன் Netflix, Amazon Prime Videos, Disney Plus, Hotstar, Airtel Xstream உள்ளிட்ட பல்வேறு ஓடிடி சந்தா அணுகலும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Users Happy: mobile, broadband, fiber, DTH, OTT service Availble Under 1 Recharge Plan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X