ஏர்டெல் தடாலடி! 5G டேட்டா உடன் அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார்! எந்த பிளான்?
இந்த ஏர்டெல் (Airtel) ப்ரீபெய்ட் பிளான்களுடன் அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், சோனி லிவ், ஈரோஸ் நவ், லயன்கேட்ஸ் பிளே உள்ளிட்ட 15 ஓடிடி தளங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். இவை எந்த பிளான்கள்? இவற்றின் சலுகைகள் என்ன? உள்ளிட்ட தகவல்கள் இதோ.
ஏர்டெல் ரூ. 359 ப்ரீபெய்ட் பிளான்
இந்த பிளானின் வேலிடிட்டி 28 நாட்களாகும். அன்லிமிடெட் கால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். அப்பல்லோ 24/7 (Apollo 24|7), ஹலோடியூன்ஸ் (Hellotunes), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதோடு சோனி லிவ் (Sony LIV), ஈரோஸ் நவ் (Eros Now), லயன்கேட்ஸ் பிளே (Lionsgate Play) ஆகிய ஓடிடி தளங்களை உள்ளன.

ஏர்டெல் ரூ. 399 ப்ரீபெய்ட் பிளான்
இந்த பிளான் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த நாட்களில் அன்லிமிடெட் கால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) உடன் இதோடு சோனி லிவ் (Sony LIV), ஈரோஸ் நவ் (Eros Now), லயன்கேட்ஸ் பிளே (Lionsgate Play) உள்ளிட்ட 15 ஓடிடி தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பிளானில் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ. 499 ப்ரீபெய்ட் பிளான்
இந்த பிளான் ரூ.399 பிளானின் அனைத்து சலுகைகளையும் கொண்டுள்ளது. அதோடு, 3 மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ( Disney+ Hotstar ) சப்ஸ்கிரிப்சன் வழங்கப்படுகிறது. அதேபோல ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) உடன் இதோடு சோனி லிவ் (Sony LIV), ஈரோஸ் நவ் (Eros Now), லயன்கேட்ஸ் பிளே (Lionsgate Play) உள்ளிட்ட 15 ஓடிடி தளங்களும் அடங்கும்.
ஏர்டெல் ரூ. 699 ப்ரீபெய்ட் பிளான்
இந்த பிளானின் வேலிடிட்டி 56 நாட்களாகும். இந்த நாட்களில் அன்லிமிடெட் கால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். இதோடு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) உடன் இதோடு சோனி லிவ் (Sony LIV), ஈரோஸ் நவ் (Eros Now), லயன்கேட்ஸ் பிளே (Lionsgate Play) உள்ளிட்ட 15 ஓடிடி தளங்களை பயன்படுத்தலாம். அதோடு அமேசான் பிரைம் (Amazon Prime) சப்ஸ்கிரிப்சன் 56 நாட்களுக்கு வழங்கப்படும்.
ஏர்டெல் ரூ. 839 ப்ரீபெய்ட் பிளான்:
இதுவொரு 84 நாட்கள் பிளானாகும். இந்த நாட்களில் அன்லிமிடெட் கால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். அதோடு மூன்று மாதங்களுக்கு அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்சன் வழங்கப்படும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே உள்ளது.
ஏர்டெல் ரூ. 999 ப்ரீபெய்ட் பிளான்
இந்த பிளான் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். 5ஜி டேட்டாவுடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) உடன் இதோடு சோனி லிவ் (Sony LIV), ஈரோஸ் நவ் (Eros Now), லயன்கேட்ஸ் பிளே (Lionsgate Play) உள்ளிட்ட 15 ஓடிடி தளங்களை பயன்படுத்தலாம். இந்த நாட்கள் முழுவதும் அமேசான் பிரைம் பயன்படுத்தலாம். இந்த பிளான்கள் அனைத்திலும் 5ஜி டேட்டா கிடைக்கும்.


Click it and Unblock the Notifications