Home
News

பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஏர்டெல் நிறுவனத்தின் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

கடந்த மாதம் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. அதன்பின்பு அவ்வப்போது இந்த மூன்று நிறுவனங்கள் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகளை வழங்கி வருகின்றன. இருந்தபோதிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்றுவரை கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.

ஏர்டெல்

அதேபோல் ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்நிறுவனங்கள் 5ஜி சோதனையை மேற்கொண்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனமும் இந்த ஆண்டு 4ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள்உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. Amazon Prime Video Mobile Edition, Free Hello Tunes மற்றும் Wynk Music ஒரு மாத இலவச சோதனை போன்ற நன்மைகளையும் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்.

 ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. Amazon Prime Video Mobile Edition, Free Hello Tunes மற்றும் Wynk Music ஒரு மாத இலவச சோதனை போன்ற நன்மைகளையும் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில்அறிமுகம் செய்த ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

 பிஎஸ்என்எல் ரூ.184, ரூ.185, ரூ.186 மற்றும் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.184, ரூ.185, ரூ.186 மற்றும் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.184, ரூ.185, ரூ.186 மற்றும் ரூ.347 என்ற விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு திட்டங்களின் விவரங்களையும் முழுமையாக பார்க்கலாம். ரூ.184 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல்
அழைப்புகள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் ரூ.185 மற்றும் ரூ.186 திட்டங்கள் தினசரி 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த மூன்று திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. வழங்கப்பட்ட வரம்புக் கொள்கை முடிந்த பின் இந்த திட்டத்தில் இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

திட்டங்களில் இருக்கும் வித்தியாசம்

திட்டங்களில் இருக்கும் வித்தியாசம்

ஆனால் இந்த திட்டங்களில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்ற கேள்வி வரலாம். அதற்கான பதில் குறித்து பார்க்கையில், ரூ.184 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் Lystn போட்காஸ்டின் கூடுதல் பலனை பெறுவார்கள். ரூ.185 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் M/S ஆன்மொபைல் குளோபல் லிமிடெட் மற்றும் BSNL ட்யூன்ஸ் வழங்கும் ப்ரோக்ரஸிவ் வெப் APP (PWA)-ன் அரீனா மொபைல் கேமிங் சேவையை இணைந்து பெறுவார்கள். அதேபோல் ரூ.186 திட்டத்தில் மேலே வழங்கப்பட்ட தொகுப்புகளுடன் கூடுதலாக ஹார்டி கேம்ஸ்மற்றும் பிஎஸ்என்எல் டியூன்களின் கூடுதல் பலன்களை பெறுவார்கள்.

பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் தினசரி 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை பெறுவார்கள். இந்த திட்டம் பயனர்களுக்கு 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் M/S ஆன்மொபைல்குளோபல் லிமிடெட் வழங்கும் ப்ரோக்ரஸிவ் வெப் APP (PWA)-ன் அரீனா மொபைல் கேமிங் சேவை அணுகல் வழங்கப்படுகிறது. இந்த அனைத்து திட்டங்களிலும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படுகின்றன.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிரபார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏர்டெல்,ஜியோ, வோடபோன் நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel Two prepaid plans available at budget prices: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X