115 லைவ் டிவி, 10000 வீடியோ வழங்கி மாஸ் காட்டும் ஏர்டெல் டிவி வெப்.!
இந்திய தொலைத் தொடர்பு துறையில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது, ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள
இந்திய தொலைத் தொடர்பு துறையில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது, ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிறுனங்கள், வீடியோ மற்றும் டிவி சேனல்களை வழங்கின வருகின்றன.

இதில் ஏர்டெல் சிறந்த வீடியோ ஆன் டி மாண்ட் தொலைக்காட்சி சேனல்களை வழங்குகின்றது. இதில் 115 டிவி சேனல்களை வழங்கி தெறிக்க விட்டுள்ளது ஏர்டெல். மேலும், ஏர்டெல் டிவி இந்த பயன்பாடு ஆனது இணையத்திலும் கிடைக்கின்றது.

ஏர்டெல் டிவி வெப் விவரங்கள்:
தற்போது, ஏர்டெல் டிவி தனது 115 லைப் டிவி சேனல்களை வழங்குகின்றது. ஏர்டெல் டிவி வீடியோ ஆன்டிமாண்ட் மற்றும் லைவ் டிவி சேவையை வழங்குகின்றது.
இதன் மூலம் நாம் பெரிய தொலைக்காட்சியிலும் லைப் டிவிகளை இடையூறு இல்லாமல் காண முடியும். மேலும், விபரங்களுக்கு (www.airtelxstream.in) என்ற இணையதளத்தை பார்வையிடவும். மேலும், ஓடிபிஐ பயன்படுத்தி உள் நுழைய முடியும். நீங்கள் விரும்பும் சேனல்களை ஆராய லைவ் டிவி பிரிவுக்கு செல்ல வேண்டும்.

ஏர்டெல் டிவி வீடியோ:
இதன் மூலம் நாம் ஏர்டெல் டிவியில் வீடியோக்களும் கிடைக்கின்றன. மேலும் ஓவர் தி டாப் பயன்பாடு இருக்கின்றது. ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு இலவச நிகழ்ச்சிகள் மற்றும் டிவி திரைப்படங்களை அணுக விரும்பினால் பயன்பாட சரியாக இருக்கும்.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஜீ5 உள்ளடக்கத்தை இலவசமாகப் பெறுகிறது. வலை பயனர்களுக்கு இந்த சேவையை ஏர்டெல் மொபைல் டிவி குழு புதிய அம்சங்களையம் வழங்கியுள்ளது.

ஏர்டெல் டிவி மொபைல் பயன்பாடு:
மொலைப் பயன்பாட்டில் செய்தி, பொழுது போக்கு, இன்போமெயின்மென்ட், இசை, திரைப்படங்கள், பக்தி, வாழ்கை முறை, குழந்தைகள், விளையாட்டு, ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மலையாளம், மராத்தி போன்ற பல மொழிகளில் 350 கூடுதலாக நேரடி தொலைக்காட்சி சேனல்களை வழங்கிறது.
தற்போது, ஏர்டெல் வழங்கி அதிரவிட்டுள்ளது.

ஏர்டெல் டிவி மொபைல் டிவி ஆப்:
ஏர்டெல் டிவி ஆப் தற்போது, டார்க் மோடு, பிரைட் ஸ்கிரீன் வசதியுடன் மொபைல் பேட்டரிகளை சேமிக்கின்றது. ஏர்டெல் டிவி பயன்பாடு ஒரு பிக்சர் இன் பிக்சர் பயன்முறையை பெற்றள்ளது. வீடியோ கிள்ளுதல் மற்றும் மனியேச்சர்கள் செய்யவும் இது அனுமதிக்கும்.

10 ஆயிரம் திரைப்படங்கள்:
இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் காண முடியம். ZEE5, ஹங்கமா, ஈரோஸ் நவ், OOQ, Alt Balaji, ShareIt, YouTube போன்றவைகளில் மூலம் நாம் காண முடியும். இதில் பல்வேறு அம்சங்களையும் ஏர்டெல் டிவி வழங்கின்றது.
இதனால் மற்ற நிறுவனங்களை காட்டிலும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஏராளமான வசதிகளையும் அனுமதியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications