கில்லி மாதிரி 3 பிளான்.. உண்மையான அன்லிமிடெட் பிளான் இது மட்டும் தான்.! ஃபிரீ 5ஜி டேட்டா..
ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் பயனர்களுக்கு பெஸ்டான ட்ரூலி அன்லிமிடெட் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. அதில் குறைந்த விலையில் கிடைக்கும் மிகவும் அற்புதமான ட்ரூலி அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனம் ரூ. 319 விலையில் அதன் முதல் ட்ரூலி அன்லிமிடெட் பிளானை வழங்குகிறது. இதில் உங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு நன்மை, தினமும் 2 ஜிபி டேட்டா, SMS நன்மை என்று 1 மாதத்திற்கு தேவையான நன்மைகளை இந்த திட்டம் பேக் செய்துள்ளது.

தினசரி டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகு, டேட்டா வேகம் 64 கேபிபிஎஸ் வரை இருக்கும். ஏர்டெல் தேங்க்ஸ் நன்மையின் ஒரு பகுதியாக, இந்தத் திட்டமானது அன்லிமிடெட் 5G டேட்டாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது திட்ட வரம்பை விட அதிகமாக உள்ளது. இது ஏர்டெல் 5G பிளஸ் நெட்வொர்க் பகுதிகளில் மட்டும் பயன்படுத்த கூடிய இலவச நன்மைகளை வழங்குகிறது.
இத்துடன் இதில் Apollo 24|7 Circle இன் 3 மாத சந்தா கிடைக்கிறது. இதில் கட்டணமில்லா விங்க் மியூசிக் (Wynk music) இசை இலவசம் மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் நன்மைகள் கிடைக்கிறது. அடுத்த திட்டத்திற்கு வரும்போது, ஏர்டெல் ரூ.359 ட்ரூலி அன்லிமிடெட் திட்டம், பயணத்தின் போது அல்லது ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்கிற்காக தேவைப்படுபவர்களுக்கானது. இந்த திட்டம் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளேயுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது வாடிக்கையாளர்களுக்கு சோனி எல்ஐவி, லயன்ஸ்கேட் ப்ளே, ஃபேன்கோட், ஈரோஸ் நவ், ஹோய்ச்சோய், மனோரமாக்ஸ் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளேயில் உள்ள உள்ளடக்கம் போன்ற 15+ OTT களுக்கு 28 நாட்கள் இலவச அணுகலை அனுபவிக்க அனுமதிக்கிறது. உங்கள் மொபைல், டேப்லெட் அல்லது டிவியில் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்.
ஏர்டெல் 359 ட்ரூலி அன்லிமிடெட் திட்டமானது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே நன்மையுடன் வாய்ஸ் கால் அம்சம், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளுடன் வருகிறது. ஏர்டெல் 319 ட்ரூலி அன்லிமிடெட் திட்டத்தைப் போலவே அதே நன்மைகளை இந்த திட்டமும் கொண்டுள்ளது. கூடுதலாக இதில் இலவச 2ஜிபி டேட்டா கூப்பன் கிடைக்கிறது.

ஏர்டெல் வழங்கும் மாதாந்திர செல்லுபடியாகும் பிரிவில் கடைசியாக கிடைக்கும் திட்டத்திற்கு வரும்போது, நிறுவனம் ரூ. 509 விலையில் ட்ரூலி அன்லிமிடெட் மாதாந்திர திட்டத்தை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால், 60ஜிபி மொத்த டேட்டா என்று பல நன்மைகளை வழங்குகிறது.
இத்துடன் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. ஒரு மாத செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் டேட்டா டேரிஃப் பின் ஒதுக்கீட்டிற்கு 50p/MB கட்டணம் விதிக்கப்படும். ஏர்டெல் தேங்க்ஸ் நன்மையாக இத்துடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மை கிடைக்கிறது.
இது திட்ட வரம்பை விட அதிகமாக உள்ளது மற்றும் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் பகுதிகளில் மட்டும் இது கிடைக்கும். இந்த திட்டம் அப்பல்லோ 24|7 வட்டத்தில் மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்த கூடிய சந்தாவை வழங்குகிறது. இத்துடன் வின்க் மியூசிக் இலவசம் மற்றும் இலவச ஹெலோட்யூன்ஸ் நன்மையையும் இந்த திட்டம் வழங்குகிறது.
ஏர்டெல் வழங்கும் மூன்று மாதாந்திர வேலிடிட்டி திட்டங்களும் வரம்பற்ற 5G நன்மையுடன் வருகின்றன. எனவே, இணக்கமான ஸ்மார்ட்போனுடன் 5G நெட்வொர்க்கில் உள்ள வாடிக்கையாளர்கள் வரம்பற்ற 5G அனுபவங்களை அனுபவிக்க முடியும். நீங்கள் 4G ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் பயன்பாட்டின் போது ஏதேனும் அதிகரித்த அல்லது எதிர்பாராத டேட்டா உபயோகத்தைக் கண்டால், அந்த டேட்டா பேக்குகள் உங்களிடம் உள்ளன.


Click it and Unblock the Notifications








