ஜியோவிற்கு அடிமேல் அடி: அனைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கு இலவசம் அறிவித்த ஏர்டெல்.!

|

ஏர்டெல் நிறுவனம், தற்பொழுது புதிய மூன்று ட்ரூலி அன்லிமிட்டெட் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மூன்று திட்டங்களின் படி ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அனைத்து நெட்வொர்க்கிற்கும் ஆலிமிடெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது.

புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் ப்ரீபெய்ட் திட்டங்கள்

புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது ரூ.219, ரூ.399 மற்றும் ரூ.449 என்ற மூன்று புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ரூ.219 திட்டம் ஒரு மாத வேலிடிட்டியுடனும். ரூ.399 மற்றும் ரூ.449 ஆகின திட்டங்கள் இரண்டு மாத வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து நெட்வொர்க்களுக்கான ஆலிமிடெட் வாய்ஸ் கால்

அனைத்து நெட்வொர்க்களுக்கான ஆலிமிடெட் வாய்ஸ் கால்

இந்த மூன்று திட்டங்களுக்கும் அனைத்து நெட்வொர்க்களுக்கான ஆலிமிடெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டங்களின் விலை மதிப்பிற்கு ஏற்றார் போல டேட்டாவின் அளவில் சில மாற்றங்களை ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

வாட்ஸ்அப் இல் உங்களை யார் பிளாக் செய்துள்ளனர் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?வாட்ஸ்அப் இல் உங்களை யார் பிளாக் செய்துள்ளனர் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

ஏர்டெல் ட்ரூலி அன்லிமிட்டெட் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.219

ஏர்டெல் ட்ரூலி அன்லிமிட்டெட் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.219

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய ரூ. 219 பிரீபெயிட் திட்டத்தின் கீழ் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் கிவ்விங் சேவையாக இலவச ஹலோ டியூன், ஆலிமிடெட் வீங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் போன்ற சேவைகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ட்ரூலி அன்லிமிட்டெட் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.399

ஏர்டெல் ட்ரூலி அன்லிமிட்டெட் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.399

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய ரூ.399 பிரீபெயிட் திட்டத்தின் கீழ் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற சேவைகளுடன், ஏர்டெல் தேங்க்ஸ் கிவ்விங் சேவையாக இலவச ஹலோ டியூன், அன்லிமிடெட் வீங்க் மியூசிக் மற்றும் 'ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம்' போன்ற சேவைகளுடன் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ட்ரூலி அன்லிமிட்டெட் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.449

ஏர்டெல் ட்ரூலி அன்லிமிட்டெட் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.449

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய ரூ.449 பிரீபெயிட் திட்டத்தின் கீழ் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற சேவைகளுடன், ஏர்டெல் தேங்க்ஸ் கிவ்விங் சேவையாக இலவச ஹலோ டியூன், அன்லிமிடெட் வீங்க் மியூசிக் மற்றும் 'ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம்' போன்ற சேவைகளுடன் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் அம்சம்: வெர்ஷன் 2.19.353-ல் கிடைக்கிறது.! ஆனால் ஒரு சிக்கல்.!மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் அம்சம்: வெர்ஷன் 2.19.353-ல் கிடைக்கிறது.! ஆனால் ஒரு சிக்கல்.!

எந்தவித கட்டுப்பாடும் இன்றி வாய்ஸ் கால் சேவை

எந்தவித கட்டுப்பாடும் இன்றி வாய்ஸ் கால் சேவை

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் சலுகைகள் தவிர ஏர்டெல் வழங்கி வரும் மற்ற அன்லிமிட்டெட் சலுகைகளுக்கும், இந்தியா முழுக்க உள்ள அனைத்து நெட்வொர்க்களுக்கான அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை எந்தவித கட்டுப்பாடும் இன்றி கட்டணமும் இன்று வழங்கப்படும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.

ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா என்ன செய்ய போகிறது?

ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா என்ன செய்ய போகிறது?

ஏர்டெல்லின் இந்த புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் திட்டங்கள் இன்று முதல் பயனர்களுக்கு கிடைக்கும் என்று ஏர்டெல்
நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்பொழுது ஏர்டெல் தனது பயனர்களுக்கு அனைத்து நெட்வொர்க் அழைப்புகளையும் இலவசமாக மாற்றியுள்ளதால், மீண்டும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா நிறுவனங்களின் திட்டங்களில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel Truly Unlimited Prepaid Plans Launched With Unlimited Calling On Any Network In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X