ஜியோவை பின்னுக்குத் தள்ளிய ஏர்டெல்.. டிராய் வெளியிட்ட வயர்லெஸ் சந்தாதாரர் எண்ணிக்கை..

|

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய வயர்லெஸ் சந்தாதாரர்களைச் சேர்ப்பதில் பாரதி ஏர்டெல் முதலிடத்தில் இருப்பதாக டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டில் ஏர்டெல் நிறுவனம் சுமார் 28.99 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்த்து, ரிலையன்ஸ் ஜியோவை பின்னுக்குத் தள்ளியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ

இந்த மாதத்தில் ஜியோ நிறுவனம் வெறும் 18.64 லட்சம் சந்தாதாரர்களை மட்டுமே பெற்றுள்ளது என்று டிராய் குறிப்பிட்டுக் கூறியுள்ளது. ஆனால், ஜூலை மாதத்தில் அதன் செயல்திறனுடன் ஒப்பிடும்போது, ​​ஆகஸ்ட் மாதத்தில் ஏர்டெல் 32.60 லட்சத்திலிருந்து 28.99 லட்சமாக சந்தாதாரர்களைக் குறைத்துள்ளது. வயர்லெஸ் சந்தாதாரர்களில் ஏர்டெல் மாத வளர்ச்சி விகிதம் 0.91 சதவீதமாக இருந்துள்ளது.

வயர்லெஸ் சந்தாதாரர்

அதேபோல், ஜியோ நிறுவனத்தின் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 0.47 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் இருந்துள்ளது என்று டிராய் தெரிவித்துள்ளது. Vi (வோடபோன் ஐடியா) போன்ற பிற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தொடர்ந்து 12.28 லட்சம் சரிவுடன் சந்தாதாரர்களை இழந்துள்ளனர் என்றும், ஆகஸ்ட் மாதத்தில் பிஎஸ்என்எல் சுமார் 2.14 லட்சம் சந்தாதாரர்களைப் பெற்று தனது எண்ணிக்கையைச் சற்று அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்: புதிய நடைமுறை இதுதான்!இனி வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்: புதிய நடைமுறை இதுதான்!

ஆகஸ்ட் மாத

மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்கள் ஜூலை 20 இன் இறுதியில் 1,144.18 மில்லியனிலிருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் 1,147.92 மில்லியனாக அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவித்திருக்கிறது. இவ்வாறு, மாத வளர்ச்சி விகிதத்தை 0.33 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா, இமாச்சலப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஆகஸ்ட் மாதத்தில் அதன் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் அதிகபட்சமாக 1.13 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

அறிக்கை

அதே நேரத்தில் மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், உ.பி. மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகியவை கணிசமாக மட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சியைக் கண்டன. நகர்ப்புறங்களில் வயர்லெஸ் சந்தா 620.68 மில்லியனிலிருந்து 624.93 மில்லியனாக உயர்ந்துள்ளது, இருப்பினும், கிராமப்புறங்களில் வயர்லெஸ் சந்தா 523.50 மில்லியனிலிருந்து 522.99 ஆகக் குறைந்துள்ளது என்பதும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel topped the chart of wireless subscribers base in August than Reliance Jio : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X