Airtel சிம் யூஸ் பண்றீங்களா? 84 நாள் வேலிடிட்டி.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. மிஸ் பண்ணக்கூடாத 3 திட்டங்கள்..
ஜியோ நிறுவனத்துக்குப் போட்டியாக அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் (Airtel) நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி தரும் மூன்று திட்டங்களை வைத்துள்ளது. அந்த திட்டங்களின் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 859 prepaid plan) தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 126ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த திட்டம்.

இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், rewards mini subscription, அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.
ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். பின்பு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
குறிப்பாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே ஆனது 22 ஓடிடி ஆப்களின் அனுகலை வழங்குகிறது.அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), விங்க் மியூசிக் (Wynk Music), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (airtel rs 1199 prepaid plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக ஏர்டெல் ரூ.1199 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1199 திட்டம் பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), rewards mini subscription, விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.
குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் இந்த 84 நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் விரைவில் இந்நிறுவனம் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்ட ங்களை அறிமுகம் செய்ய உள்ளது. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் முதல் நெட்வொர்க் அடிப்படையிலான ஏஐ (AI) ஆற்றல் பெற்ற ஸ்பேம் கண்டறிதல் தீர்வை அறிமுகம் செய்தது. குறிப்பாக இது ஏர்டெல் பயனர்களுக்கு ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளால் (எஸ்எம்எஸ்) ஏற்படும் சிக்கலைக் கணிசமான அளவில் தீர்க்கும்.


Click it and Unblock the Notifications








