Home
News

மூன்று திட்டங்களில் வாரி வழங்கும் Airtel.. 365 நாள்.. வாய்ஸ் கால்கள்.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. விட்றாதீங்க..

ஏர்டெல் (Airtel) நிறுவனம் அவ்வப்போது அசத்தலான சலுகைகள் மற்றும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதேபோல் இந்நிறுவனத்தின் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யப் பயனர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இப்போது ஏர்டெல் வழங்கும் மூன்று வருடாந்திர திட்டங்களின் விலை மற்றும் அவற்றின் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1999 prepaid plan) ஆனது மொத்தமாக 24ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.

மூன்று திட்டங்களில் வாரி வழங்கும் Airtel.. 365 நாள்.. விட்றாதீங்க..

குறிப்பாக அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா ஏர்டெல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவை 3 மாதங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) சலுகையை கஸ்டமர்கள் பெறலாம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3599 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls)சலுகை இந்த ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

அதன்படி அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5g data) போன்ற சலுகைகளை இந்த ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (disney + Hotstar) சந்தாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டம் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று திட்டங்களில் வாரி வழங்கும் Airtel.. 365 நாள்.. விட்றாதீங்க..

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். இதுதவிர பல சலுகைகள் இதில் கிடைக்கும்.

அதாவது அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data) போன்ற சலுகைகளை இந்த ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பெற முடியும். குறிப்பாக இந்த திட்டம் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ள வகையில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel three annual prepaid plans that offer unlimited voice calls and 365 days validity: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X