ஏர்டெல் ரூ.299 திட்டம் அறிமுகம்: தினசரி 2.5ஜிபி டேட்டா: எத்தனை நாட்களுக்கு தெரியுமா?
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.48-பீரிபெய்ட் திட்டதில் ரீசார்ஜ் செய்தால் 28நாட்களுக்கு 3ஜிபி டேட்டா கிடைக்கும்.
ஏர்டெல் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், தேங்க்ஸ் கிங்விங் ரீசார்ஜ் ஆஃபர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும்.

இப்போது அறிமுகமாகியுள்ள ரூ.299-திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் 2.5ஜிபி டேட்டா தினமும் பெற்றுக் கொள்ளலாம், அதனுடன் அமேசானின் ப்ரைம் மெம்பர்ஷிப் முற்றுலும் இலவசம். குறிப்பாக இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 இலவச எஸ்எம்எஸ் தினசரி
வீதம் பயன்படுத்த முடியும்.

இன்ஃபினிட்டி போஸ்ட்பெய்ட்
மேலும் இது நாள் வரையில் ஏர்டெலின் இன்ஃபினிட்டி போஸ்ட்பெய்ட் ப்ளான்களை பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அமேசான் ப்ரைம் ஆஃபர்களை வழங்கியது. அமேசான் ப்ரைம் ஆஃபரை பயன்படுத்த நீங்கள் ஏர்டெல் தேங்க்ஸ் என்ற ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும். அதன்படி //www.airtel.in ஏர்டெல் தரும் பல சலுகைகளை இந்த இணையத்திற்கு சென்று நீங்கள் நேரடியாக பார்த்தும் தெரிந்தும் கொள்ளலாம்.

சில்வர், கோல்ட், பிளாட்டினம்
மேலும் சில்வர், கோல்ட், பிளாட்டினம் என மூன்று விதமான சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு தருகின்றது, சில்வர் டையரில் இருப்பவர்களுக்கு ஏர்டெல் டிவி, விங்க் போன்ற ஆப்களை அக்செஸ் செய்ய இயலும்,பின்பு கோல்ட் டையரில் இருப்பவர்களுக்கு டெலிகாம் சர்வீஸ்கள் மற்றும் சிறந்த ப்ரீபெய்ட் ஆஃபர்கள் கிடைக்கும். மேலும்
பிளாட்டினம் ஆஃபர்கள் மூலமாக ஃபினான்சியல் சர்வீஸ்களை வாடிக்கையாளர்களை பெற்றுக் கொள்ள இயலும். பின்பு ஏர்டெல் நிறவனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்த சலுகைகளை பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.48-பீரிபெய்ட் திட்டம்:
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.48-பீரிபெய்ட் திட்டதில் ரீசார்ஜ் செய்தால் 28நாட்களுக்கு 3ஜிபி டேட்டா கிடைக்கும்,அதேபோல் ரூ.98-பீரிபெய்ட் திட்டதில் ரீசார்ஜ் செய்தால் 6ஜிபி டேட்டா 28நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும், பின்பு ரூ.98 ரூபாய் ரீசார்ஜ்-க்கு மட்டும் கூடுதலாக தினமும் 10எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.178 பிரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.178 பிரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடேட் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்கள் பயன்படுத்த முடியம். மேலும் 1ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ்,ரோமிங் போன்ற சலுகைகளும் இந்த திட்தடதில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.495 திட்டம்:
ஏர்டெல் ரூ.495 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் வழங்கும், இந்த ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம் FUP வரம்பு இல்லாமல் இந்தியாவுக்குள் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இத்துடன் மொத்தமாக இத்திட்டத்தில் 6 ஜிபி டேட்டா சேவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் எஸ்.எம்.எஸ் சேவை புதுப்பிக்கப்படும். ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்தத் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.இத்துடன் ஏர்டெல் பயனர்கள் ஏர்டெல் டிவி ஆப் மூலம் நேரடி லைவ் டி.வி. மற்றும் உள்ளடக்கப் பயன்பாட்டினை இலவசமாகப் பெறலாம்.


Click it and Unblock the Notifications