ஏர்டெல் சேவையில் ஏதேனும் பிரச்சனையா? இதை பயன்படுத்துங்கள்.! ஏர்டெல் வேண்டுகோள்.!
இந்தியா முழுவதும் தொலைத்தொடர்புச் சேவையை வழங்கிவரும் ஏர்டெல் நிறுவனம்,கொரோனா பாதுகாப்பு காரணமாக தங்களது வாடிக்கையாளர்கள் மையங்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் சார்பில் வேண்டுகொள் விடுக்கப்பட்டுள்ளது
இதனால் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்வதற்கான காத்திருப்பு நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்,சிரமத்தைப் பொறுத்துக்கொள்ளுமாறும் ஏர்டெல் நிறுவனத்தின் சார்பில் வேண்டுகொள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குறுஞ்செய்தி மற்றும் டிவிட்டர் செய்தி மூலம் வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளது.

ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்
மேலும் வாடிக்கையாளர் மையங்களை நாடுவதற்கு மாற்று யோசனையாக தங்களது டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks App) மூலமாக, வாடிக்கையாளர்களின் மொபைல்போன், வைஃபை மற்றும் டிஜிட்டல் டிவி தொடர்பான சேவைகளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஏர்டெல்.இன் இணையதளத்தையும் பயன்படுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த கொரோனா அச்சம் காரணமாக பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தியுள்ள, வீட்டிலிருந்து பணியாற்றுபவர்களுக்கு இணையப் பயனபாடு கூடுதலாக தேவைப்படுகிறது. எனவே இதைக் கருத்தில்கொண்டு, டெஸ்க்டாப், லேப்டாப் மற்றும் மொபைல்போன் மூலமாக, ஏர்டெல் இணைய சேவையை நன்முறையில் பயன்படுத்தும் முறையை விளக்குவதற்கான வீடியோவையும் ஏர்டெல் வெளியிட்டுள்ளது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் சிறப்பான திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.148 திட்டம்
ஏர்டெல் நிதானமாக தங்களது திட்டத்தை நிலைநிறுத்துகிறது. முதலில் ரூ.148 வழங்கப்படும் திட்டம் குறித்து பார்க்கலாம். இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி நாட்கள் முழுவதும் 2 ஜிபி டேட்டா தான் வழங்கப்படுகிறது.

ரூ. 219 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி
219 ரூபாய் திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் 1 ஜிபி தினசரி டேட்டா வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.249 திட்டத்தின் கீழ் அதே 28 நாட்கள் வேலிடிட்டியுடனும் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ரூ.298 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா
ரூ.298 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது அதேபோல் இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.398 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கப்படுவதோடு இந்த திட்டத்திற்கு 28 நாட்கள் வேலிடிட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








