5ஜி சேவை: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஏர்டெல் நிறுவனம்.!

|

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 5ஜி சோதனையை துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஏர்டெல் 5ஜி சோதனை செய்யும்

அண்மையில் ஏர்டெல் 5ஜி சோதனை செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இந்நிலையில் ஏர்டெல் மற்றும் டாடா குழுமம்
இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் விரிவுபடுத்துவதற்கு ஒன்றிணைந்துள்ளன.

இந்திய அரசு வகுத்துள்ள

இந்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, இந்த இரண்டு நிறுவனங்களும் 5ஜி நெட்வொர்கை விரிவுபடுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும் டாடா குழுமம் O-RAN (Open Radio Access Network) அடிப்படையிலான ரேடியோ & என்எஸ்ஏ / எஸ்ஏ கோரை உருவாக்கியுள்ளது. முற்றிலும் உள்நாட்டு தொலைத் தொடர்பு அடுக்கை ஒருங்கிணைத்து, குழு திறன்களையும் அதன் கூட்டாளர்களையும் மேம்படுத்துகிறது. இது ஜனவரி 2022 முதல் வணிக மேம்பாட்டுக்கு கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால் 1,00,000 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா?இந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால் 1,00,000 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா?

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி 5ஜி நெட்வொர்கை விரிவுபடுத்தும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் கூறுகையில், இந்தியாவை 5ஜி மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான உலகளாவியமையமாக மாற்ற டாடா குழுமத்துடன்இணைந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறியுள்ளார்.

ஏர்டெல் நிறுவனம் குருகிராமில்

மேலும் நாட்டின் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் 5ஜி சோதனையை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன எனத் தகவல் வெளிவந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் குருகிராமில் 3.5GHz பேண்ட் மூலம் 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது.

 வேகத்

குறிப்பாக ஏர்டெல் 5ஜி சோதனையில் 1Gbps வேகத்தில் டவுன்லோட் வேகம் கிடைத்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும்இதை உறுதி செய்யும் வகையில் ட்விட்டர் தளத்தில் வெளிவந்த வீடியோவில், ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் 5ஜி 1Gbps டவுன்லோட், 100Mbps அப்லோட் வேகம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி சேவை என்று கூறப்படும்

5ஜி சேவை என்று கூறப்படும் போது முதலில் நாம் நினைப்பது வேகம் தான், அதன்படி Gigabits-per-second (Gbps)வேகத்தில் இன்டர்நெட் பயன்படுத்த முடியும். அதாவது 1ஜி சேவையானது வெறும் கால் அழைப்புகளுக்கு மட்டுமே பயன்பட்டது. அடுத்து 2ஜி சேவையான டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவதற்கு மட்டுமே பயன்பட்டது. அதன்பின்பு 3ஜி சேவையில் கால் அழைப்புகள், இன்டர்நெட், எஸ்எம்எஸ் என அனைத்தும் பயன்படுத்த முடிந்தது. மேலும் 4ஜி சேவையானது சிறந்த இன்டர்நெட் வேகத்தை கொடுத்தது, இதன் மூலம் வீடியோ கால் அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மிகவும் அருமையாக பயன்படுத்த முடிந்தது.

ஆனால் இனிவரும் 5ஜி சேவையானது 4ஜி விட 100 மடங்கு வேகத்தை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது நாம் இப்போது பயன்படுத்தும் 4ஜி சேவை ஆனது Mbps வேகத்தில் மட்டுமே கிடைக்கிறது. எனவே விரைவில் வரும் 5ஜி சேவையானது வேகமாக இணையத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 4ஜி வேகத்தில் ஒரு முழு திரைப்படத்தை டவுன்லோடு செய்ய 7 அல்லது 8 நிமிடங்கள் ஆகும். ஆனால் இந்த 5ஜி சேவையில் மிகவிரைவில் அதாவது சில வினாடிகளில் டவுன்லோடு செய்ய முடியும்.

5ஜி தொழில்நுட்பத்தினால் என்னென்ன நன்மைகள் என்று பலருக்கும் தெரியும், உங்களின் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும், வீடியோகளை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ள முடியும் என்பதே நாம் பார்க்கும் சில நல்ல விஷயங்கள். ஆனால்5ஜி தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை திறன்பேசி பயன்பாடு மட்டுமின்றி மற்றனைத்து துறைகளிலும்ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel,TCS announces partnership to build 5G networks in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X