Home
News

முடிஞ்சு போச்சு.. ஏர்டெல்லுக்கு இனி இதான்.. ரூ.500 எடுத்து வைங்க.. அப்புறம் ரீசார்ஜ் வேற.. வருடாந்திர கட்டணம்!

ஜூலை 3ஆம் தேதிக்கு பிறகு ஏர்டெல் கஸ்டமர்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை பார்த்துவிட்டு 'கண்ணே கலங்கிருச்சுப்பா' என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்படலாம். 10 முதல் 21 சதவீதம் வரையில் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. ரூ.179 பட்ஜெட்டில் கிடைத்த திட்டம் ரூ.199ஆக மாற்றப்பட இருக்கிறது. இந்த கட்டண உயர்வில் இருந்து எஸ்கேப்பாக முடியாதா என்ற கேள்வி ஏர்டெல் கஸ்டமர்களிடையே ஏற்பட்டிருக்கும். இதற்கு வருடாந்திரம் ரூ.500 செலவில் கஸ்டமர்களை தூக்கிசாப்பிடும் ஒரு திட்டம் இருக்கிறது. இதுகுறித்து முழு விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் கட்டண உயர்வு (Airtel Tariff Hikes) காரணமாக அந்த நிறுவனத்தின் கஸ்டமர்கள், எப்படி இதை சமாளிக்கலாம் என்ற சிந்தனையில் மூழ்கிவிட்டனர். முன்கூட்டியே ரீசார்ஜ் செய்யலாமா, ஒரு வருடத்துக்கு சேர்த்து ரீசார்ஜ் செய்யலாமா அல்லது வேறு சிம் கார்டுக்கு மாறலாமா உள்ளிட்ட பல வழிகளில் இப்போது அவர்களின் சிந்தனை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முடிஞ்சு போச்சு.. ஏர்டெல்லுக்கு இனி இதான்.. ரூ.500 எடுத்து வைங்க!

ஆனால், ஏற்கனவே ரீசார்ஜ் கட்டணங்களில் டிஸ்கவுண்ட் பெற ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்திவரும் ஒரு திட்டம் இருக்கிறது. இது பெரும்பாலான ஏர்டெல் கஸ்டமர்களுக்கு தெரிந்திருக்கும். இதுபற்றி அறியாத கஸ்டமர்களுக்கு இப்போது தெரிந்து கொள்ளவதற்கான நேரம் வந்துவிட்டது. அதெப்படி ரீசார்ஜ் கட்டணத்தில் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

பார்தி ஏர்டெல் நிறுவனமானது, ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக கிரெடிட் கார்ட் சேவையை வழங்கி வருகிறது. இந்த கிரெடிட் கார்டு மூலம் பில்கள் மட்டுமல்லாமல், மொபைல் ரீசார்ஜ்கள் உள்ளிட்ட பலவற்றில் பணத்தை சேமிக்க முடியும். இந்த கிரெடிட் கார்டுக்கு வருடத்துக்கு ரூ.500 கட்டணமாக இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ரூ.16,000 வரை சேமிக்க முடியும். 4 லட்சத்திற்கும் அதிகமான கஸ்டமர்கள் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர் என்று ஏர்டெல் வெப்சைட் சொல்கிறது. சரி, இந்த ஏர்டெல் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு (Airtel Axis Bank Credit Card) மூலம் என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை முதலில் பார்த்துவிடுவோம். அதன்பின் ஏர்டெல் கஸ்டமர்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்.

முடிஞ்சு போச்சு.. ஏர்டெல்லுக்கு இனி இதான்.. ரூ.500 எடுத்து வைங்க!

ஏர்டெல் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு சலுகைகள்: நல்ல கிரெடிட் ஸ்கோர் அல்லது ஏற்கனவே ஆக்சிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்தால், இந்த கிரெடிட் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரையில் கிரெடிட் லிமிட் பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் செலவினங்கள் மூலம் ரூ.16,000 வரையில் சேமிக்கலாம்.

இந்த கார்டை மிகவும் குறைவான கட்டணத்தில் பராமரிக்கலாம். இதை தொடர்ந்து ஆக்டிவில் வைத்திருக்க ஆண்டுக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் டிஜிட்டல் முறையில் எளிதாக இந்த கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஆக்சிஸ் வங்கி இணையதளம் மூலமும் பெற்று கொள்ளலாம்.

18-70 வயதுடையவர்கள் இந்த ஏர்டெல் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இப்போது, விஷயத்துக்கு வருவோம், ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யும்போது, இந்த கார்டை பயன்படுத்தினால், ரீசார்ஜ் செய்வதில் 25% தள்ளுபடி கிடைக்கும். அதேபோல சொமேட்டோ, ஸ்விக்கி மற்றும் பிக்பாஸ்கெட் டெலிவரிக்கு 10% சதவீத தள்ளுபடி கிடைக்கும்.

இதுபோக ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் செலுத்தும் யூடிலிட்டி பில்களுக்கும் 10% தள்ளுபடியை பெற்று கொள்ளலாம். இதர செலவினங்களுக்கும் 1% கேஷ்பேக் கிடைக்கிறது. ஆகவே, வீடுகளுக்கான யூடிலிட்டி பயன்பாட்டு பில்கள் முதல் ரீசார்ஜ் வரையில் இந்த கார்டு மூலம் தள்ளுபடியை பெற்று கொள்ள முடிகிறது. இது லாபத்தை தர வாய்ப்பும் இருக்கிறது.

ஜூலை 3ஆம் தேதி முதல் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.179 திட்டமானது, ரூ.199 விலைக்கு கிடைக்கும். அதேபோல ரூ.455 திட்டமானது, ரூ.509 விலையில் கிடைக்கும். 24 ஜிபி டேட்டாவுடன் வருடாந்திர வேலிடிட்டி கொடுக்கும் ரூ.1,799 திட்டமானது, ரூ.1,999 விலைக்கு கிடைக்கும். இப்படி பல திட்டங்களின் விலையை ஏர்டெல்லில் அதிகரிக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Tariff Hikes Customers Go With Axis Bank Credit Card To Save Money on Recharge From July 3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X