ரூ.449/-திட்டத்தில் ஏர்டெல் வழங்கும் கூடுதல் டேட்டா: எவ்வளவு தெரியுமா?
இதற்குமுன்பு ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.99 திட்டதில் ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி டேட்டா, இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் புதிய சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதன்படி இப்போது ரூ.449 திட்டத்தில் புதிய சலுகையை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள ரூ.449 திட்டதில் வாடிக்கையாளர்களுக்கு 136ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை 91 நாட்கள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் இந்த திட்டத்திற்கு
போட்டியாக கூடுதல் டேட்டா நன்மையை அறிவித்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

ஏர்டெல் ரூ.449 திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.449 திட்டம் பொறுத்தவரை தினசரி 2ஜிபி விதம் 70 நாட்களுக்க பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் 140ஜிபி டேட்டா கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இலவச கால் அழைப்புகள், எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகயை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.99 திட்டம்:
இதற்குமுன்பு ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.99 திட்டதில் ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி டேட்டா, இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. மேலும் ஏர்டெல் நிறுவனம் வழங்கும் மலிவான திட்டங்களைப் பார்ப்போம்.

ரூ.23, ரூ.28 மற்றும் ரூ.29:
ஏர்டெல் வழங்கும் ரூ.23 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை 200எம்பி டேட்டா மற்றும் 100எஸ்எம்எஸ் போன்றவற்றை இரண்டு நாட்கள் பயன்படுத்த முடியும் குறிப்பாக இலவச கால் அழைப்புகளை இந்த திட்டத்தில் பயன்படுத்த முடியும். ஏர்டெல்-ன் ரூ.28 மற்றும் ரூ.29 ப்ரீபெய்ட் திட்டங்கள் முறையே 500எம்பி மற்றும் 520எம்பி டேட்டாவை 28நாட்கள் பயன்படுத்த முடியும், மேலும் இந்த திட்டங்களில் இலவச கால் அழைப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை.

ரூ.47, ரூ.49 மற்றும் ரூ.59:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.47 ப்ரீபெய்ட் திட்டத்தில் 500எம்பி டேட்டா சலுகையை 28 நாட்கள் பயன்படுத்த முடியும், மேலும் இந்த திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படவில்லை, ஆனால் இலவச கால் அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.49 ரீசார்ஜ் திட்டதில் 3ஜிபி டேட்டா சலுகையை 28 நாட்கள் பயன்படுத்த முடியும், ஆனால் இலவச எஸ்எம்எஸ் மற்றம் கால் அழைப்புகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் வழங்கும் ரூ.59 ரீசார்ஜ் திட்டத்தில் 500எம்பி டேட்டா மற்றும் 100எஸ்எம்எஸ் போன்ற சலுகையை 7நாட்கள் பயன்படுத்த முடியும். மேலும் இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.97 மற்றும் ரூ.99 திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.97 திட்டத்தில் 1.5ஜிபி டேட்டா மற்றும் 200எம்எஸ்எம் போன்ற சலுகைகளை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். மேலும் இந்த திட்டதில் இலவச கால் அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ரூ.99 திட்டதில் 1ஜிபி டேட்டா மற்றம் இலவச கால் அழைப்புகள் போன்றவை 10நாட்களுக்கு பயன்படுத்த முடியும். மேலும் இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள் வழங்கப்பட்டவில்லை.


Click it and Unblock the Notifications