Just In
- 22 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 1 day ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 1 day ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 1 day ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
லவ் ஜிகாத்.. கட்டாய மதமாற்றம்..ஆர்எஸ்எஸ் பிரம்மாண்ட பேரணி - எதிர்ப்பு கோஷத்தால் பதற்றமான மும்பை
- Movies
பதான் பாக்ஸ் ஆபிஸ்: முதல் வாரத்தில் 400 கோடி வசூல்... ஷாருக்கானின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் இதுதானா?
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
- Sports
இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி
- Automobiles
டொயோட்டா காரை அப்படியே காப்பி அடித்து புதிய காரை உருவாக்கும் மாருதி! பெரிய குடும்பங்களுக்காக சூப்பர் முயற்சி!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஏர்டெல் ரூ.399/-ல் நம்பமுடியாத திருத்தம்; ஜியோவின் ரூ.398/-க்கு "செம்ம" நெருக்கடி.!
இந்திய டெலிகாம் துறையில், சரிக்கு சமமான போட்டியே இல்லாமல் வெற்றிகளை குவித்து வந்த பார்தி ஏர்டெல் நிறுவனமானது, திருப்புமுனை கட்டமொன்றில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பில் இருந்து, இந்நாள் வரையிலாக ஜியோவுடன் போட்டி போடுவதையும், வாடிக்கையாளர்களை தக்கவைப்பதிலுமே பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தூக்கமில்லாத இரவுகள் கழிகின்றன.

ஆரம்பத்தில் சற்று ஆட்டம் கண்டாலும், ஏர்டெல் மெல்ல மெல்ல ஜியோயின் போக்கிற்கு ஈடுகொடுக்கும் யுக்திகளை கையாள தொடங்கியது. மலிவு விலை திட்டங்கள், கூடுதல் நன்மைகள் என தொடங்கி, ஜியோ ரீசார்ஜ் விலையில் திட்டங்கள், ஜியோவின் திட்டங்களுடன் சரிக்கு சமமான நன்மைகளை வழங்கும் திட்டங்கள் என ஏர்டெல் நிறுவனம் எழுச்சி கண்டுள்ளது.

சரியான பதிலடி
அந்த எழுச்சியை மென்மேலும் நீடிக்கும் வண்ணம், ஏர்டெல் நிறுவனம் ரூ.399/- என்கிற அதன் ப்ரீபெய்ட் திட்டத்தில் மிகவும் புரட்சிகரமான திருத்தமொன்றை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட இந்த திட்டத்தின் நன்மைகளானது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.398/- திட்டத்திற்கு சரியான பதிலடி கொடுக்கும் வண்ணம் உள்ளது. அதென்ன திருத்தும்.? இந்த திட்டத்தின் தற்போதைய நன்மைகள் என்னென்ன.?

நாள் ஒன்றிற்கு 1ஜிபி
இந்த புதிய ஏர்டெல் ரூ.399/- பேக் ஆனது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவுடன், உள்ளூர், எஸ்டிடி, மற்றும் ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் (அனைத்து கைபேசிகளுக்குமான) நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி
இந்த ஏர்டெல் ரூ.399/- திட்டமானது மொத்தம் 70 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டமானது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.398/- திட்டத்திற்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. ஜியோவின் ரூ,398/- ஆனது நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான அதிவேக 4ஜி டேட்டாவை (64கேபிபிஎஸ் என்கிற வரம்பற்ற அணுகல்) வழங்குகிறது.

70 நாட்களுக்கு செல்லுபடி
உடன் இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் உண்மையாக வரம்பற்ற குரல் அழைப்புகளையும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தா போன்ற நன்மைகளையும் ஜியோவின் ரூ.398/- வழங்குகிறது. இந்த திட்டமும் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு
ஏர்டெல் நிறுவனத்தின் இதே ரூ.399/- ஆனது முன்னர் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவுடன், உள்ளூர், எஸ்டிடி, மற்றும் ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்கியது.

91 நாட்களுக்கு செல்லுபடி
இதன் செல்லுபடி காலம் 70 நாட்கள் என்று நீட்டிக்கப்பட்டுள்ளதால், நிறுவனத்தின் இதர பட்ஜெட் திட்டங்களான ரூ.448/- திட்டத்தின் செல்லுபடி காலம் 70 நாட்களில் இருந்து 82 நாட்கள் என்று நீட்டிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.509/- திட்டமானது 91 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.199/- ப்ரீபெய்ட்
ஜியோவின் தொடர்ச்சியான தாக்குதலின் விளைவால் ஏர்டெல் அறிவித்துள்ள சில போட்டித்தன்மை மிக்க கட்டண திட்டங்களில் (ஜியோவின் ரூ.199/- திட்டத்திற்கு பதிலடியாக களமிறக்கப்பட்ட) ஏர்டெல் ரூ.199/- ப்ரீபெய்ட் திட்டமானது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளைக்கு 1.2ஜிபி அளவிலான 4ஜி டேட்டா
இந்த இரண்டு தொகுப்புகளுமே வரம்பற்ற அழைப்பு நன்மைகளுடன், நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் என்கிற நன்மையை வழங்குகின்றன. ஆனால் ஜியோவின் ரூ.199/- பேக் ஆனது ஒரு நாளைக்கு 1.2ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது. மறுகையில் உள்ள ஏர்டெல் பேக் ஆனது ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான 3ஜி/ 4ஜி தரவை வழங்குகின்றது.

ஏர்டெல் ரூ.93/-
கூடுதலாக, ஏர்டெல் நிறுவனம் ரூ.93/- என்கிற திட்டத்தையும் அறிமுகம் செய்தது. இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளுக்குமான வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் மற்றும் 10 நாட்களுக்கு செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான 3ஜி/ 4ஜி டேட்டா ஆகியவைகளை வழங்குகிறது.

14 நாட்களுக்கு செல்லுபடி
மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/- திட்டமானது, அனைத்து நெட்வொர்க்குகளுக்குமான வரம்பற்ற குரல் அழைப்புகள், 140 எஸ்எம்எஸ்கள் மற்றும் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான அதிவேக 4ஜி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது. புதிய ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் திருத்தங்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470