ஜியோவை பின்னுக்குத் தள்ளிய ஏர்டெல் இன் புதிய ரீசார்ஜ் திட்டம்.! இலவச 105 ஜிபி டேட்டா.!
ஜியோவின் ரூ.399 ப்ரீபெய்ட் பிளானுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தனது புதிய ரூ.419 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியினால் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள பல புதிய திட்டங்களையும் பல சலுகைகளையும் வழங்கி வருகிறது.

ஜியோவின் ரூ.399 ப்ரீபெய்ட் பிளானுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தனது புதிய ரூ.419 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்புதிய ரீசார்ஜ் பிளான் 75 நாட்கள் வேலிடிட்டியுடன் 105 ஜிபி டேட்டா சேவையை பயனர்களுக்கு வழங்குகிறது.

ஏர்டெல் இன் பழைய திட்டம்
இந்த புதிய ரீசார்ஜ் பிளான் ஏர்டெல் இன் பழைய திட்டமான ரூ.399 பிளான் இன் மேம்படுத்தப்பட்ட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது டெலிகாம் சந்தையில் நிலவும் கடும் போட்டியைச் சமாளிக்க ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் பல புது புது திட்டங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ சேவைக்கு எதிரான ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

புதிய ரூ.97 காம்போ ரீசார்ஜ்
அண்மையில் ஏர்டெல் நிறுவனம் சென்ற வாரம் தனது புதிய ரூ.97 காம்போ ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தியது. இந்த ஏர்டெல் இன் புதிய ரீசார்ஜ் பிளான் ஜியோவின் ரூ.98 ரீசார்ஜ் பிளானுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.419 ரீசார்ஜ் பிளான்
தற்போது ஏர்டெல் அறிமுகம் செய்திருக்கும் ரூ.419 ரீசார்ஜ் பிளான் ஜியோவின் ரூ.399 ரீசார்ஜ் பிளானுக்கு போட்டியாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.419 ரீசார்ஜ் பிளான் பலன்கள்
ஏர்டெல் இன் இந்த புதிய திட்டத்தில் வரையறை இல்ல வாய்ஸ் கால்ஸ் சேவை மற்றும் 1.5 ஜிபி 4ஜி டேட்டா சேவையை பயனருக்கு வழங்குகிறது. அத்துடன் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த புதிய ரீசார்ஜ் பிளான் திட்டம் 75 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்தத் திட்டம் ஏர்டெல் இன் அனைத்துப் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications