ரூ.339/-விலையில் ஏர்டெல் வழங்கும் 20ஜிபி கூடுதல் டேட்டா: ஜியோவிற்கு டாட்டா.!
ஏர்டெல் தனது போஸ்ட்பெய்டு ரூ.339 பிளான் இல் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி ஏர்டெல் பயனர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஏர்டெல் தனது போஸ்ட்பெய்டு ரூ.339 பிளான் இல் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி ஏர்டெல் பயனர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏர்டெல் இன் இந்த ரூ.339 பேக் இல் இனி 20ஜிபி அதிக டேட்டா வழங்க போகிறதேன்று கூறியுள்ளது. ஆனால் இந்த 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா மாதாந்திர வேலிடிட்டியா அல்லது வருடாந்திர வேலிடிட்டியா என்பது இன்னும் உறுதிப் படுத்தப்படவில்லை.
நமக்குக் கிடைத்த தகவலின் படி ஒரு ஆண்டிற்கான கூடுதல் 20ஜிபி தரவு வழங்குமென்று தெரிய வந்துள்ளது. ஒரு ஆண்டிற்குக் கூடுதல் 20ஜிபி யுடன், எப்பொழுதும் வழங்கும் மாதாந்திர 20ஜிபி யுடன் இந்த பிளான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

40ஜிபி டேட்டா
நீங்கள் புதிதாக ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர் ஆகா இணையப் போகிறீர்கள் என்றால் இந்த பிளான் ஐ தேர்வு செய்யுங்கள். இந்த புதிய ஏர்டெல் ரூ.339 பிளான் படி உங்களுக்கு 40ஜிபி டேட்டா கிடைக்கும், அதில் 20 ஜிபி மாதாந்திர அடிப்படையில் மற்றும் கூடுதல் 20 ஜிபி வருடாந்திர அடிப்டையில் வழங்கப்படும்.

500 ஜிபி டேட்டா
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 399 திட்டம் டேட்டா மாற்றுத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது, மேலும் பயனர் கணக்கில் 500 ஜிபி டேட்டா வரை பயனர்கள் பெறமுடியும். இத்துடன் இதர பயன்களாக அனைத்தும் ஒரேமாதிரியானவை தான். வரம்பற்ற வாய்ஸ் அழைப்புகள் FUP வரம்பு இல்லாமல், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் சேவையை வழங்குகிறது. இருப்பினும் ரூ.399 பிளான், அமேசான் ப்ரைம் சந்தாவை வழங்கவில்லை.

வோடபோன் இன் ரூ.399 திட்டம்
சமீபத்தில், ஏர்டெல் விட சிறந்த டேட்டா நன்மைகளை வழங்கும் ரூ.399 மற்றும் ரூ.499 திட்டங்களை வோடபோன் அறிமுகம் செய்தது. வோடபோன் இன் ரூ.399 திட்டம் தற்போது ஒவ்வொரு மாதமும் 40 ஜிபி டேட்டா சேவையை வழங்குகின்றது.இத்தடன் ரூ.499 ரெட் பிளான் திட்டத்தின் படி மாதத்திற்கு 75 ஜிபி டேட்டா வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே ரூ.499 பட்ஜெட் பிளான்களின் சேவைகளை வோடபோனுக்கு பொருத்தமாக மாற்றப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது ரூ.399 திட்டமும் மாற்றம் அடைந்துள்ளது.

ஜியோவிற்கு டாட்டா
இதைப் போன்று ஏர்டெல் தனது பிளான்களில் அதிரடி மாற்றங்களைப் பயனர்களுக்கு தரப்போவதாக விவரங்கள் கசிந்துள்ளது. ஜியோவிற்கு பொட்டியாக மாற்றங்களை மேற்கொள்ளும் ஏர்டெல் நிறுவனம் சீக்கிரம் ஜியோவிற்கு டாட்டா காட்டிவிடும் போலத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications