ஏர்டெல் சூப்பர்சேவர் : வெறும் ரூ.49/-க்கு வரம்பற்ற அழைப்புகள் பெறுவது எப்படி.?
சமீபத்தில், நாட்டில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களும் தங்களின் சந்தாதாரர்களை கவரும் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கொண்ட புதிய கட்டண திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளன.
ரிலையன்ஸ் ஜியோவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியில் ஏர்டெல் சேவை வழங்குநர் நிலையான ஈடு கொடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை முறையே ரூ.49/- மற்றும் ரூ.99/-ல் வழங்கும் புதிய ஏர்டெல் சூப்பர்சேவர் குரல் தொகுப்புகளை அறிவித்துள்ளது.

பிராட்பேண்ட் மற்றும் லேண்ட்லைன்
இந்த சூப்பர்சேவர் குரல் தொகுப்புதனை ஏர்டெல் பிராட்பேண்ட் மற்றும் லேண்ட்லைன் ஆகிய இரண்டு பயனர்களும் அனுபவிக்க முடியும். பயனர்கள் தொலைபேசி அல்லது மொபைல் எண் என இரண்டிலும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அதை பெறுவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர்
மேலே குறிப்பிட்டுள்ள, ஏர்டெல்வழங்கும் இந்த சிறப்பு சூப்பர் சேவர் குரல் தொகுப்பில் இரண்டு திட்டங்கள் உள்ளன. முதல் திட்டம் ரூபாய்.49/- இதன் மூலம் வரம்பற்ற உள்ளூர் அழைப்புகளை ஏர்டெல் வழங்குகிறது. இரண்டாவது ரூ.99/- திட்டம் இதன் மூலம் நீங்கள் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை நிகழ்த்த முடியும்.

வலைத்தளம்
முதலில் நீங்கள் ஏர்டெல் வலைத்தளம் சென்று நீங்கள் ஏர்டெல் பிராட்பேண்ட்பயனரா அல்லது லேண்ட்லைன் பயனரா என்பதை பதிவு செய்து பின்னர் வலைத்தளத்தில் கிடைக்கப்பெறும் 'பை நௌவ்' ஆப்ஷனை கிளிக் செய்யவும்
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தகவல்
அந்த செய்முறையை நிகழ்த்திய பின்னர், எஸ்டிடி கோட் உடனான உங்கள் நிலையான லேண்ட்லைன் எண், மொபைல் எண் மற்றும் உங்கள் மாநில தேர்வு போன்ற முக்கியமான தகவல்களை அளிக்க வேண்டும்.

விரும்பும் பேக்
அடுத்தப்படியாக உங்களுக்கு தேவையான ஏர்டெல் சூப்பர்சேவர் குரல் தொகுப்பை தேர்வு செய்ய வேண்டும். வரம்பற்ற உள்ளூர் அல்லது வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் என தேர்வை நிகழ்த்திய பின்னர் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் நீங்கள் விரும்பும் பேக் ஒரு சில நொடிகளில் உங்களுக்கு வழங்கப்படும்
புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எஸ்எம்எஸ் :
இந்த புதிய திட்டங்களை ஆக்டிவேவேஷனை நிகழ்த்த எஸ்எம்எஸ் மூலமும் கோரிக்கை அனுப்ப முடியும். நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தும் உங்கள் பதிவு பெற்ற மொபைல் எண்ணில்இருந்து 53636 என்ற எண்ணிற்கு உங்கள் தேவைக்கேற்ப UNL49 அல்லது UNL99 என்று ரூ.3/- மதிப்பிலான ஒரு எஸ்எம்எஸ் அனுப்பின்னால் போதும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :
ரூ.19,990க்கு ஐபோன் 7 வழங்கும் ஏர்டெல், ஆனால் சில நிபந்தனைகள்!?


Click it and Unblock the Notifications








