Home
News

Airtel-ன் புது சம்மர் ஆபர்.. ரூ.50 விலை குறைக்கப்பட்ட 1 மாத திட்டம்.. எந்த ரீசார்ஜ்? என்னென்ன நன்மைகள்?

ஏர்டெல் (Airtel) நிறுவனமானது, சம்மர் ஓடிடி சேல் (Summer OTT Sale) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கும் சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சந்தா (Airtel Xstream Play Premium), அதன் வழக்கமான விலையான ரூ.149 இல் இருந்து மாதம் ரூ.99 என்கிற விலையில் வழங்கப்படுகிறது.

இந்த சந்தாவின் கீழ், சோனி லைவ், சன் நெக்ஸ்ட், ஆஹா போன்ற பிரபலமான ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் கூடுதலாக 17 க்கும் மேற்பட்டஓடிடி ஆப்களுக்கான அணுகல் கிடைக்கும். இந்த சலுகை - குறைந்த விலையில் பிரீமியம் கன்டென்ட்களை தேடும் ஸ்ட்ரீமிங் ஆர்வலர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான சலுகையாக அமைகிறது.

Airtel-ன் புது சம்மர் ஆபர்.. ரூ.50 விலை குறைக்கப்பட்ட 1 மாத திட்டம்!

இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து எந்த அதிகாரப்பூர்வமான செய்தி குறிப்பு வெளியாகவில்லை என்றாலும், இந்த சலுகை தற்போது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் ( Airtel Thanks App) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே (இணையதளம் மற்றும் ஆப்) உள்ளிட்ட ஏர்டெல்லின் டிஜிட்டல் தளங்களில் செயல்பாட்டில் உள்ளதாக டெலிகாம்டால்க் (Telecom talk) அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சந்தாவின் கீழ் என்னென்ன கிடைக்கும்?
வழக்கமான விலை: மாதத்திற்கு ரூ.149
சம்மர் ஓடிடி சேல்-ன் கீழ் கிடைக்கும் சலுகை விலை: மாதத்திற்கு ரூ.99
பேக் வகை: ஓடிடி சப்ஸ்க்ரிப்ஷன் பேக்
முக்கிய நன்மைகள்: ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் கன்டென்ட் லைப்ரரி மற்றும் பார்ட்னர் ஓடிடி தளங்களுக்கான அணுகல்
செல்லுபடியாகும் காலம்: 1 மாதம்

சந்தாக்கள் மற்றும் நன்மைகள்: ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சந்தாவின் கீழ் சோனி லைவ், சன் நெக்ஸ்ட் ஆஹா, லயன்ஸ்கேட், ஹங்காமா, ஈரோஸ் நவ், ஷீமாரோமீ, எபிக் ஆன், பிளேபிளிக்ஸ், மனோரமாமேக்ஸ், அல்ட்ரா, சாவ்பால், ஷார்ட்ஸ்டிவி, ராஜ் டிஜிட்டல், கிளிக் (Klikk), நம்மபிளிக்ஸ், டாக்குபே, அட்டாடைம்ஸ், ஜோஜோ மற்றும் டைம்ஸ் பிளே. சலுகை விலையில் (ரூ.99) இந்த திட்டத்திற்கான ஒரு நாளுக்கான நடைமுறை விலை: ரூ.3.30 ஆகும்.

நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 வேண்டுமா? மேற்கண்ட திட்டத்துடன் கூடுதலாக, ஏர்டெல் நிறுவனமானது மாதம் ரூ.279 என்கிற விலையில் மற்றொரு பிரீமியம் திட்டத்தையும் வழங்குகிறது, இதில் நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் பிற தளங்கள் உட்பட 23 ஓடிடி தளங்களுக்கான அணுகல் கிடைக்கும்.

ஏர்டெல் டேட்டா பேக் ரூ.279-ன் நன்மைகள்:
பேக் வகை: காம்போ / டேட்டா பேக்
முக்கிய நன்மைகள்: 1ஜிபி டேட்டா. 1ஜிபி டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகான பயன்பாட்டிற்கு ஒரு எம்பி-க்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.
செல்லுபடி காலம்: 1 மாதம்

சந்தாக்கள் மற்றும் நன்மைகள்: நெட்பிளிக்ஸ் பேஸிக், ஜியோ ஹாட்ஸ்டார் சூப்பர், ஜீ5 பிரீமியம், மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் ஆகியவற்றுடன் 20 ஓடிடி தளங்களுக்கான அணுகல், 1 மாதத்திற்கு கிடைக்கும். இந்த 20 ஓடிடி தளங்கள் மேலே, ரூ.99 திட்டதுடன் வரும் அதே ஓடிடி தளங்கள் ஆகும் என்பதும் இங் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்கான, ஒரு நாளுக்கான பயனுள்ள விலை: ரூ.9.30 ஆகும்.

ரூ.44 க்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா: இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட் (Vodafone Idea Limited - VIL) ஆனது அதன் நுகர்வோருக்காக ரூ.44 ப்ரீபெய்ட் திட்டத்தை (Vi Rs.44 Prepaid Plan) வழங்குகிறது. இந்த ரூ.44 திட்டத்துடன் பயனர்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியாவின் ரூ.44 ப்ரீபெய்ட் திட்டம் 1ஜிபி டேட்டாவுடன் மட்டுமே வருகிறது. இருப்பினும், இந்த திட்டத்தின் முக்கிய நன்மை, பயனர்களுக்காக இணைக்கப்பட்டுள்ள ஓடிடி (OTT) சந்தாவாகும். ரூ.44 ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இலவச பயன்பாடு கிடைக்கிறது. இந்த திட்டத்துடன், உங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவானது 28 நாட்களுக்கு கிடைக்கும்.

மேலும் ரூ.44 உடன் வரும் 1ஜிபி டேட்டா நன்மை ஆனது, ரீசார்ஜ் செய்த நாளன்று இரவு 11:59 மணிக்கு காலாவதியாகிவிடும். மேலே குறிப்பிட்டபடி, இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்களுக்கு எந்த சேவை காலமும் கிடைக்காது. வெளிச்செல்லும் எஸ்எம்எஸ் (Outgoing SMS) நன்மைகளும் இல்லை. மலிவான விலையில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை தேடும் வி கஸ்டமர்களுக்கு மட்டுமே இது பொருத்தமானதாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel Summer OTT Sale Airtel Xstream Play Premium Subscription Now Available for Rs 99 Instead of Rs 149 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X