Home
News

Airtel சிம் கார்டு வச்சி இருக்குற எல்லோருக்கும் ஒரு குட் நியூஸ்.. இனிமே நம்ம ஆட்டம் வேற மாறி இருக்கும்!

உங்களிடம் பயன்பாட்டில் உள்ள ஏர்டெல் சிம் கார்டு (Airtel SIM Card) இருந்தால், நீங்கள் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை கடந்த சில காலங்களாக பயன்படுத்தப்படாத ஏர்டெல் சிம் கார்டு இருந்தால்.. அதை தூசித்தட்டி கையில் எடுத்து கொள்ளவும். ஏனென்றால் ஏர்டெல் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு அப்படி?

இந்தியா முழுவதும், தனது 22 டெலிகாம் வட்டங்களில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களையும் குஷிப்படுத்தும் குட் நியூஸ் ஒன்றை பார்தி ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. இந்திய தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications - DoT) நிர்ணயித்த விதிமுறைகளின்படி 5ஜி-யின் குறைந்தபட்ச ரோல்-அவுட்டை (Minimum roll-out obligation of 5G) வெற்றிகரமாக முடித்துள்ளதாக ஏர்டெல் கூறியுள்ளது.

Airtel சிம் கார்டு வச்சி இருக்குற எல்லோருக்கும் ஒரு குட் நியூஸ்!

அதாவது ஏர்டெல் நிறுவனமானது இந்தியாவின் அனைத்து 22 தொலைத்தொடர்பு வட்டங்களிலும் (Telecom Circles) 26 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமில் 5ஜி சேவைகளை (26GHz Spectrum 5G Services) அறிமுகப்படுத்தி உள்ளது; ஏர்டெல்லின் 5ஜி சேவையானது இப்போது நாடு முழுவதும் 5000 நகரங்கள் மற்றும் நகரங்களில் கிடைக்கிறது.

மேலும் ஏர்டெல் நிறுவனமானது, தனது 5G நெட்வொர்க்கில் தேசிய அளவில் 10 மில்லியன் யூனிக் கஸ்டமர்களை (Unique Customers) தாண்டியுள்ளதாகவும், செப்டம்பர் 2023 க்குள் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க் ஆனது ஒவ்வொரு நகரம் மற்றும் முக்கிய கிராமப்புறங்களை சென்றடையும் என்று கூறியுள்ளது.

ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் (Unlimited 5G data) அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் மிகவும் எளிமையான வழியில், 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தி பார்க்கும் அல்லது முயற்சி செய்து பார்க்கும் வாய்ப்பு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

தனது 22 டெலிகாம் வட்டங்களிலும் 5ஜி பிளஸ்-ஐ அறிமுகம் செய்து ஏர்டெல் நிறுவனமானது ஜியோவை முந்திவிட்டதா என்று கேட்டால்.. இல்லவே இல்லை. ஏனென்றால் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதியே இதை செய்துவிட்டது.

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ஜியோ, ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்குள் 22 உரிமம் பெற்ற சேவை பகுதிகள் (Licensed Service Areas - LSA) ஒவ்வொன்றிலும் குறைந்தபட்ச 5ஜி ரோல்-அவுட்டை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு வெளியான சில தினங்களுக்கு பிறகே ஏர்டெல்லின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவானது இந்திய தொலைத்தொடர்புத் துறை நிர்ணயித்த விதிமுறைகளின்படி, 26 ஜிகாஹெர்ட்ஸ் மில்லிமீட்டர் அலை ஸ்பெக்ட்ரத்தை (26GHz mmWave Spectrum) பயன்படுத்தி 5ஜி அடிப்படையிலான இணைப்பை (5G Based Connectivity) 22 தொலைத்தொடர்பு வட்டங்களிலும் ரோல்-அவுட் செய்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பாக அறிவித்து இருந்தது.

நினைவூட்டும் வண்ணம், நாட்டின் முதல் 5ஜி அலைக்கற்றை விற்பனையின் போது லோ-பேண்ட் (Low-band), மிட்-பேண்ட் (Mid-band) மற்றும் எம்எம்வேவ் ஸ்பெக்ட்ரம் (mmWave Spectrum) ஆகியவற்றை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ரூ.88,078 கோடிக்கு வாங்கியது. 22 வட்டங்களில், ஒவ்வொன்றிலும் மில்லிமீட்டர் வேவ் ஸ்பெக்ட்ரமில் (அதாவது 26 ஜிகார்ட்ஸ் ஸ்பெக்ட்ரமில்) 1000 மெகா ஹெர்ட்ஸ் உள்ளதாக ஜியோ கூறுகிறது.

1000 மெகா ஹெர்ட்ஸ் என்பது என்டர்ப்ரைஸ் யூஸ் கேஸ்களை (Enterprise use cases) தனித்துவமாக செயல்படுத்துவதோடு சேர்த்து உயர்தர ஸ்ட்ரீமிங் சேவைகளையும் வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். மேலும் ஜியோ நிறுவனத்திடம் எஸ்ஏ (SA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டேண்ட்அலோன் 5ஜி நெட்வொர்க்கும் (Standalone 5G Network) உள்ளது.

அறியாதோர்களுக்கு 5ஜி ஸ்டான்டலோன் என்பது 4ஜி நெட்வொர்க்குடன் எந்த சார்பும் இல்லாத உலகின் மிகவும் மேம்பட்ட 5ஜி நெட்வொர்க் (Most advanced 5G network) ஆகும். இந்தியாவில் எஸ்ஏ 5ஜி நெட்வொர்க்கை கொண்ட ஒரே ஒரு டெலிகாம் ஆப்ரேட்டர் ரிலையன்ஸ் ஜியோ தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தகது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Successfully Complete Its 5G Service Introduction in 22 Telecom Circles All Over India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X