ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது! எந்த சேவை? என்ன காரணம்?

|

இந்தியாவின் மிக முக்கியமான முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது அதன் 3G சேவையை சுமார் 10 நகரங்களில் நிறுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதையும் ஏர்டெல் நிறுவனம் விளக்கியுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனம்

பார்தி ஏர்டெல் நிறுவனம்

பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா பகுதியில் தனது 3ஜி சேவையை முற்றிலுமாக நிறுத்தியது. அதனை தொடர்ந்து கொல்கத்தா பகுதியில் இனிமேல் ஏர்டெல் மொபைல் பிராட்பேண்ட் சேவை 4ஜி சேவையாக மட்டுமே வழங்கப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருந்தது.

முடக்கப்பட்டும் 3ஜி சேவை

முடக்கப்பட்டும் 3ஜி சேவை

ஏர்டெல் நிறுவனம் தெரிவித்தது போல கொல்கத்தா பகுதியில் 3ஜி சேவை முடக்கப்பட்டு 4ஜி சேவை மட்டும் பயன்பாட்டில் வைக்கப்பட்டது. அதற்கு பிறகு, ஏர்டெல் நிறுவனம் படிப்படியாக தனது 3ஜி சேவையை இந்திய முழுவதும் நிறுத்தும் என்று அறிவித்திருந்தது.

இந்த நகரங்களில் ஏர்டெல்லின் 3ஜி சேவை இனி இல்லை

இந்த நகரங்களில் ஏர்டெல்லின் 3ஜி சேவை இனி இல்லை

ஏர்டெல் நிறுவனம் அறிவித்த அறிவிப்பின்படி மகாராஷ்டிரா, கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் போன்ற நகரங்களில் ஏர்டெல்லின் 3ஜி சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 3ஜி சேவை நிறுத்தப்பட்டதை போல் அனைத்து பகுதியிலும் 2020 ஆம் ஆண்டு முடிவிற்குள் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

4ஜி ஆக மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்

4ஜி ஆக மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்

தற்போது ஏர்டெல் 3ஜி சேவை நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள ஏர்டெல் பயனர்கள் தங்களது சிம் கார்டை 4ஜி ஆக மேம்படுத்த வேண்டும். அதேபோல் அவர்களின் மொபைலையும் அப்டேட் செய்ய வேண்டும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் ஏர்டெல்லின் 3ஜி பயனர்கள், தங்கள் மொபைல் மற்றும் சிம் கார்டை மேம்படுத்தாமல் கூட வாய்ஸ் கால் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

L900 டெக்னலாஜி

L900 டெக்னலாஜி

ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது L900 டெக்னலாஜியை 900 MHz என்ற பேண்ட்வித் உடன் பயன்படுத்துகிர்து. பலமான 4ஜி சேவையை நாடு முழுவதும் வழங்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஏர்டெல் நிறுவனம் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளதாக கூறியுள்ளது. இதற்காக தான் 3ஜி சேவையை நாடு முழுதும் நிறுத்த ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel stops service in 10 cities Which service what is the reason : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X