Home
News

இனிமேல் கிடைக்காது.. Airtel திட்டங்களில் இருந்து திடீரென நீக்கப்பட்ட இலவச நன்மை.. கஸ்டமர்கள் ஷாக்!

நேற்று வரையிலாக.. ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் 8 திட்டங்களில் இருந்து கிடைத்த ஒரு இலவச நன்மை, இனிமேல் எப்போதுமே கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதென்ன நன்மை? இது எந்தெந்த ஏர்டெல் திட்டங்களில் அணுக கிடைத்தது? தற்போது இந்த இலவச நன்மை திடீரென நிறுத்தப்பட என்ன காரணம்? இதோ விவரங்கள்:

பார்தி மிட்டல் தலைமையிலான பார்ட்டி ஏர்டெல் நிறுவனம் ஆனது, இனிமேல் தனது கஸ்டமர்களுக்கு வேலிடிட்டி லோன்களை (Validity Loans) வழங்காது என்று அறிவித்து உள்ளது. அறியாதோர்க்ளுக்கு வேலிடிட்டி லோன் என்பது ஏர்டெல் மூலம் இயக்கப்படும் ஒரு இலவச சேவை (Free service) ஆகும்.

Airtel திட்டங்களில் இருந்து திடீரென நீக்கப்பட்ட இலவச நன்மை!

இதன்கீழ் வாடிக்கையாளர்கள் 1.5 ஜிபி அளவிலான டேட்டா (1.5GB Data) மற்றும் வாய்ஸ் கால் (Voice Call) ஆகிய நன்மைகளை 1 நாள் என்கிற வேலிடிட்டியின் (1 Day Validity) கீழ் முற்றிலும் இலவசமாக பெறுவார்கள்; அதாவது இதற்கென எந்த தொகையும் (No Charges) வசூலிக்கப்படாது.

இந்த சேவை பான்-இந்தியா (PAN-India) அடிப்படையில் இல்லை; ராஜஸ்தான் (Rajasthan), கேரளா (Kerala), பீகார் (Bihar), கர்நாடகா ( Karnataka) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் அணுக கிடைத்தது. தற்போது இந்த சேவையை நிறுத்திவிட்டதாக ஏர்டெல் உறுதி செய்துள்ளது. இந்த் திடீர் நடவடிக்கைக்கு என்ன காரணம்? இதே சேவை வேறு ஏதேனும் வடிவத்திலும் மீண்டும் வருமா என்பது குறித்து எந்த தகவலையும் ஏர்டெல் வழங்கவில்லை.

இங்கே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஏர்டெல் நிறுவனத்தின் டேட்டா லோன் வசதிக்கு (Airtel Data Loan Feature) எந்த பாதிப்பும் இல்லை. ஏர்டெல் நிறுவனம் வேலிடிட்டி லோன்களை நிறுத்திவிட்டாலும் கூட தன் பயனர்களுக்கு டேட்டா லோன் சலுகையை தொடர்ந்து வழங்கி வருகிறது.

இதுவொரு அவசரகால டேட்டா கடன் வசதி (Emergency data loan facility) ஆகும். இதன் கீழ் ஒரு வாடிக்கையாளர் 1 ஜிபி டேட்டாவை 1 நாள் என்கிற வேலிடிட்டியின் (1GB of data for 1 day) கீழ் பெற முடியும்.

இருப்பினும் இந்த கடனை வாடிக்கையாளர்கள் திருப்பி செலுத்த வேண்டி இருக்கும். அதாவது வாடிக்கையாளர் தனது அடுத்த டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்யும் போது, ஏர்டெல் நிறுவனத்தால் டேட்டா கடன் திரும்ப பெறப்படும். டேட்டா லோனை மீட்டெடுப்பதற்கான செல்லுபடியாகும் பேக்குகளை பொறுத்தவரை: ரூ.22, ரூ.33, ரூ.77, ரூ.121, ரூ.149, ரூ.161, ரூ.181 மற்றும் ரூ.361 ஆகும்.

டேட்டா லோனை பெற விரும்பும் ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் (Airtel Prepaid Customers) இதற்கான பிரத்யேக யுஎஸ்எஸ்டி (USSD) குறியீடான *567*3# ஐ டயல் செய்ய வேண்டி இருக்கும் அல்லது, CLI 56321 இலிருந்து அனுப்பப்படும் எஸ்எம்எஸ்-க்கு வாடிக்கையாளர்கள் "1" என்று பதிலளிக்கலாம். ஒரு நேரத்தில், ஒரு வாடிக்கையாளர் ஒரு டேட்டா கடனை மட்டுமே பெற முடியும். அடுத்த கடனைப் பெற, வாடிக்கையாளர் முதலில் முந்தைய கடனை அழிக்க வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த சேவை பான்-இந்தியா அடிப்படையில் கிடைக்கிறது. அதாவது இது இந்தியா முழுவதும் உள்ள ஏர்டெல் பயனர்களுக்கு கிடைக்கிறது ஆனால் இந்த சேவை ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு (Airtel Postpaid Customers) வேலை செய்யாது. ஏர்டெல்லின் டேட்டா லோன் வசதியானது, டேட்டாவிற்கு உடனடியாக பணம் செலுத்த முடியாத பயனர்களின் அடிப்படை அல்லது முக்கியமான வேலைகளுக்கு, உடனடி இணைய அணுகலை பெற உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது, இதனால் ஏர்டெல் நிறுவனத்தின் கீழான அவர்களின் அனுபவம் தடை இல்லாததாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Stopped Its Validity Loan Feature But Still Continue Data Loan Facility
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X