ஜியோவுடனான கட்டண யுத்தம்: ஏர்டெல் ரூ.149/-ல் கற்பனைக்கு எட்டாத திருத்தம்.!
ஏர்டெல் ரூ.149/- ஆனது இப்போது 28ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்கும். அதாவது செல்லுபடியாகும் 28 நாட்களுக்கும், நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு எதிராக மீண்டுமொரு நடவடிக்கையைஎடுத்துதுள்ளது. அதாவது அதன் பட்ஜெட் விலை திட்டமான ரூ.149/-ஐ மறுபரிசீலனை செய்துள்ளது.

ஜியோவின் குடியரசு 2018 திட்டங்கள் அறிமுகமான நாளில் இருந்தே பார்தி ஏர்டெல் உட்பட இதர டெலிகாம் நிறுவங்களிடம் இருந்து திருத்தங்கள் அல்லது புதிய திட்டங்கள் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு நிகழ்ந்துள்ளது. இனின் ரூ.149/-ன் நன்மைகள் என்ன.? இதன் முந்தைய நன்மைகள் என்ன.? என்பதை விரிவாக காண்போம்.

நாள் ஒன்றிற்கு 1ஜிபி
ஏர்டெல் ரூ.149/- ஆனது இப்போது 28ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்கும். அதாவது செல்லுபடியாகும் 28 நாட்களுக்கும், நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

பல வட்டாரங்களில்
ஏர்டெல் நிறுவனம் அதன் நெருங்கிய போட்டியாளரான ஜியோவை எதிர்க்கும் நோக்கத்தில் இந்த திட்டத்தை திருத்தியுள்ளதில் சந்தேகமில்லை. ஆந்திரா மற்றும் தெலுங்கானா, டெல்லி, கர்நாடகா போன்ற பல வட்டாரங்களில் இந்த திருத்தப்பட்ட ரூ.149/- கிடைக்கப்பெறுகிறது.

வரவிருக்கும் நாட்களில்
ஆனாலும் கூட சில பயனர்கள் மட்டுமே இந்த வாய்ப்பைப் பெற தகுதியுடையவர்களாய் உள்ளன. விரைவில் இந்த ஏர்டெல் திட்டமானது ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாக வரவிருக்கும் நாட்களில் அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

மை ஏர்டெல் பயன்பாட்டினுள்
இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்குமா என்பதை கண்டறிய ஏர்டெல் ப்ரீபெயிட் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் வலைத்தளத்திற்கு செல்லலாம் அல்லது மை ஏர்டெல் பயன்பாட்டினுள் திருத்தியமைக்கப்பட்ட ரூ.149/- கிடைக்கிறதா என்று சரிபார்க்கலாம்.

1ஜிபி மட்டுமே
திருத்தப்பட்ட ரூ.149/- ஆனது ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான தரவை மட்டுமின்றி ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்களுக்கு ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளையும் வழங்கும். முன்னதாக, இந்த திட்டம் 1ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை மட்டுமே வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முன்னிலை
மறுகையில் ஜியோ அதன் ரூ.149/-ன் கீழ் நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி வழங்கி முன்னிலை வகிப்பதும், சமீபத்தில் ஏர்டெல் அதன் ரூ.399, ரூ.199, ரூ.448 மற்றும் ரூ.509 ஆகிய பல வரம்பற்ற காம்போ ப்ரீபெய்ட் திட்டங்களையும் சமீபத்தில் திருத்தியதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications