ஏர்டெல் வழங்கும் வோல்ட்இ சேவைகளுடன் இலவச வாய்ஸ் கால் திட்டம்?

By Prakash
|

அடுத்த வாரம் முதல் ஏர்டெல் நிறுவனம் நாடு முழுவதும் வோல்ட்இ சேவைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது, இதை முன்னிட்டு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால் திட்டங்கள் வழங்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்டு நாடு முழுவதும் வோல்ட்இ இலவச கால் அழைப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் ஜியோவுக்கு போட்டியாக அடுத்தவாரம் வோல்ட்இ சேவைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.

இலவச வாய்ஸ் கால்:

இலவச வாய்ஸ் கால்:

அடுத்த வாரம் வோல்ட்இ சார்ந்த அழைப்புகள் முதலில் மும்பை, டெல்லி, கொல்கட்டா போன்ற நகரங்களில் வழங்கப்படும், மேலும் இந்த சேவை
அறிமுகமாக இலவச வாய்ஸ் கால் திட்டத்தை கொண்டுவர வாய்ப்பு உள்ளது.

வோல்ட்இ :

வோல்ட்இ :

வோல்ட்இ சேவைகள் பொறுத்தவரை கால்அழைப்பு தரம் மிக உயர்வாக இருக்கும்.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜியோ நிறுவனம் துவங்கப்பட்டு இலவச வோல்ட்இ அழைப்புகளை வழங்கியது.

ஐடியா:

ஐடியா:

கூடிய விரைவில் ஐடியா செல்லுலார் நிறுவனமும் வோல்ட்இ சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதற்க்கான பணிகள் இப்போது தெடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஏர்டெல் 4ஜி பீச்சர் போன்:

ஏர்டெல் 4ஜி பீச்சர் போன்:

தற்சமயம் ஜியோ நிறுவனம் 4ஜி பீச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது, கூடிய விரைவில் விற்பனைக்கு கொண்டுவரும். இதைத் தொடர்ந்து
ஏர்டெல் நிறுவனம் இந்த வருட இறுதியில் 4ஜி பீச்சர் போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பீச்சர் போனை தயாரிக்கமைக்ரோமேக்ஸ் மற்றும் இன்டெக்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டவுன்லோடு வேகம் :

டவுன்லோடு வேகம் :

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆகஸ்ட் மாதம் டவுண்லோட் வேகம் பொறுத்தவரை தொடரந்து ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது, மேலும் இப்போது குறிப்பிட்டுள்ள அறிக்கையில் ஏர்டெல் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel to start offering free VoLTE calls from next week to take on Jio ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X