ஏர்டெல் ஸ்பெஷல் ரீசார்ஜ் ஆபரின்கீழ் 3 அதிரடி அன்லிமிடெட் திட்டங்கள் அறிவிப்பு.!
இந்த புதிய ரீசார்ஜ் திட்டங்களின் விலை நிர்ணயம் என்ன.? டேட்டா தவிர வேறென்ன நன்மைகளை இந்த திட்டங்கள் வழங்குகின்றன என்பதை பற்றி விரிவாக காண்போம்.
இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள உயர்நிலை போட்டியின் காரணமாக, ஜியோவிற்கு எதிராய், நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் அதன் மூன்று புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்த மூன்று திட்டங்களும் முறையே 300ஜிபி, 112ஜி மற்றும் 60ஜிபி அளவிலான டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய ரீசார்ஜ் திட்டங்களின் விலை நிர்ணயம் என்ன.? டேட்டா தவிர வேறென்ன நன்மைகளை இந்த திட்டங்கள் வழங்குகின்றன என்பதை பற்றி விரிவாக காண்போம்.

மொத்தம் 360 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!
அறிவிக்கப்பட்டுள்ள மூன்று திட்டங்களில், முதலாவது மொத்தம் 300ஜிபி அளவிலான டேட்டாவுடன், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் (வணிக பயன்பாடு அல்லாத) அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது. மொத்தம் 360 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானது ரூ.3,999/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

தேசிய ரோமிங் மற்றும் வெளிச்செல்லும் அழைப்பு.!
அழைப்பு நன்மைகளை பொறுத்தமட்டில், வெளிச்செல்லும் தேசிய ரோமிங் அழைப்புகளையும் இந்த ரூ.3,999/- திட்டம் வழங்குகிறது. உடன் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குமென பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான வலைத்தளமான ஏர்டெல்.இன் குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 180 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!
இந்த ரீசார்ஜ் பேக்கின் கீழ், ஏர்டெல் நிறுவனம் மொத்தம் 125 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் (வணிக பயன்பாடு அல்லாத) அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது. மொத்தம் 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானது ரூ.1,999/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

தேசிய ரோமிங் மற்றும் வெளிச்செல்லும் அழைப்பு.!
இதர அழைப்பு நன்மைகளை பொறுத்தமட்டில், வெளிச்செல்லும் தேசிய ரோமிங் அழைப்புகளையும் இந்த ரூ.1,999/- திட்டம் வழங்குகிறது. உடன் ரூ.3,999/- திட்டத்தை போன்றே தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.

மொத்தம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!
அறிவிக்கப்பட்டுள்ள மூன்று திட்டங்களில், கடைசி திட்டமானது மொத்தம் 60ஜிபி அளவிலான டேட்டாவுடன், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் (வணிக பயன்பாடு அல்லாத) அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது. மொத்தம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானது ரூ.999/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

தேசிய ரோமிங் மற்றும் வெளிச்செல்லும் அழைப்பு.!
இதர அழைப்பு நன்மைகளை பொறுத்தமட்டில், வெளிச்செல்லும் தேசிய ரோமிங் அழைப்புகளையும் இந்த ரூ.999/- திட்டம் வழங்குகிறது. உடன் மேற்கூறப்பட்ட இரண்டு திட்டங்களை போலவும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குமென பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான வலைத்தளமான ஏர்டெல்.இன் குறிப்பிட்டுள்ளது.

ரூ.19/- முதல்.!
மறுபுறம் உள்ள முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ரூ.19/- (ஒரு நாள் செல்லுபடியாகும்) முதல் ரூ.9,999/- (360 நாட்கள்) வரையிலாக பலதரப்பட்ட ஜியோ ரீசார்ஜ் திட்டங்களை தொகுத்து வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications