நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் டாங்கில்.!
விலைகுறைக்கப்பட்ட இந்த ஏர்டெல் சாதனம் சில்லறை விற்பனை மையம் மற்றும் அமேசான் வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடு முழுவதும் பல்வேறு மக்கள் இன்டர்நெட் சேவையை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர், மேலும் இணையம் பயன்படுத்துவோருக்கு அத்தியாவசிய கருவியாக மாறிவிட்டது இந்த யுஎஸ்பி டாங்கில்.
தற்சமயம் ஏர்டெல் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் டாங்கில் சாதனத்திற்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது ஏர்டெல் நிறுவனம். மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள்
என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் டாங்கில்:
ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் டாங்கிள் முந்தைய விலை மதிப்பு பொறுத்தவரை ரூ.1950-ஆக இருந்தது, தற்சமயம் விலை குறைக்கப்பட்டு
ரூ.999-என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. மேலும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் பயன்படுத்த மிக அருமையாக இருக்கும்.

இந்தியா:
விலைகுறைக்கப்பட்ட இந்த ஏர்டெல் சாதனம் சில்லறை விற்பனை மையம் மற்றும் அமேசான் வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைஃபை:
ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் டாங்கில் எங்கு சென்றாலும் பயனர்கள் தங்கள் அதிவேக அதிவேக வைஃபை பயன்படுத்த அனுமதிக்கின்றன.
மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

4ஜி நெட்வொர்க் :
இது மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள், லேப்லெட், மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் போன்ற பல சாதனங்களை இணைக்க உதவுகிறது
இந்த ஏர்டெல் 4ஜி நெட்வொர்க் ஹாட்ஸ்பாட் .

ரூ.349-திட்டம்:
ஏர்டெல் தற்சமயம் ரூ.349-திட்டத்தை அறிவித்துள்ளது, அதன்படி ரூ.349-க்கு ரீசார்ஜ் 56ஜிபி 3/4ஜி டேட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த திட்டம் 28நாட்களுக்கு பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேசிவ்:
இந்தியாவில் முதல் முறையாக மேசிவ் மல்டிப்பிள்-இன்புட் மல்டிப்பிள்-அவுட்புட் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக ஏர்டெல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் 5ஜி தொழில்நுட்பத்திற்கான முண்ணோட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications