ஏர்டெல் ரூல்ஸ்.. இனிமே ரூ.20 இல்லனா.. SIM கார்டு டீஆக்டிவ்.. 90 நாட்களுக்கு குறி.. கால்கள், எஸ்எம்எஸ், டேட்டா!
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் அவர்களது சிம் கார்டு மூலம் 90 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்தவில்லை என்றால், உங்களது சிம் கார்டு டீஆக்டிவேட் (SIM Card Deactivate) செய்யப்பட இருக்கிறது. இதில் இருந்து தப்பிக்க ரூ.20 ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதுவும் 30 நாட்களுக்கு மட்டுமே டீ-ஆக்டிவேட்டில் இருந்து காப்பாற்றும். இந்த ஏர்டெல் சிம் கார்டு விதிகள் (Airtel SIM Card Rules) என்ன சொல்கிறது? ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் இப்போது என்ன செய்யலாம்?
இந்த விதிகள் புதிதாக வந்தது, கிடையாது. டிராய் (TRAI) என்று சொல்லப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது அமல்படுத்தி விதிகளையே இப்போது ஏர்டெல் கஸ்டமர்களுக்கு விளக்கி இருக்கிறது. இது டெலிகாம்டாக் தளத்தில் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விதிகள் என்ன சொல்கிறது என்பதை முதலில் பார்ப்போம்.

ஏர்டெல் கஸ்டமர்கள் அவர்களது சிம் கார்டில் 90 நாட்களாக வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் டேட்டாவை பயன்படுத்தவில்லை என்றால், இந்த விதிகளின்படி அந்த சிம் கார்டு டீஆக்டிவேட் செய்யும் நிலைக்கு தள்ளப்படும். அந்த 90 நாட்களுக்கு மேல் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும். இந்த அவகாசத்துக்குள் நீங்கள் வழக்கமாக செய்யும் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.
அப்படி இல்லாதபட்சத்தில் உங்களது சிம் கார்டை டீஆக்டிவேட் செய்ய ஏர்டெல் நிறுவனத்துக்கு உரிமை இருக்கிறது. அதன்பிறகு உங்களது மொபைல் நம்பரும் வேறொரு கஸ்டமர்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தால் வழங்க முடியும். இதை தடுத்து வைக்க ஒரு வழி இருக்கிறது. அதாவது, ரூ.20 டாக்டைம் உங்களுக்கு சிம் கார்டில் இருந்தால், அந்த 90 நாட்களுக்கு பிறகு கூடுதலாக 30 நாட்கள் அவகாசம் கிடைக்கும்.
இப்படி ரூ.20 டாக்டைம் மூலம் 30 நாட்களை பெற்று நீங்கள் எத்தனை மாதங்களுக்கு வேண்டுமானாலும் சிம் கார்டை டீஆக்டிவேட் செய்வதில் இருந்து நீட்டித்து கொள்ளலாம். இதையே ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு (Prepaid Customers) விளக்கி இருக்கிறது. ஆகவே, ஏர்டெல் கஸ்டமர்கள் 2025ஆம் ஆண்டில் 90 நாட்களுக்கு சிம் கார்டை ரீசார்ஜ் செய்யாமல் வைத்திருக்காதீர்கள்.
அப்படி இருந்தாலும், உங்களது டாக்டைம் வேல்யூ ரூ.20 அல்லது அதற்கு மேல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால், உங்களது சிம் கார்டு டீஆக்டிவேட் செய்யப்படுவதில் இருந்து 30 நாட்களுக்கு தப்பிக்கும். இந்த விதிகளே மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கும் பொருந்துகிறது. இப்போது, ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள் மட்டுமே கொண்ட திட்டங்கள் இருக்கின்றன.
அதை ரீசார்ஜ் செய்தாலே போதும் சிம் கார்டை தொடர்ந்து ஆக்டிவாக வைத்திருக்க முடியும். இது பெரும்பாலும் செகண்டரி சிம் கார்டுகளுக்கு சரியாக இருக்கும். ஏனென்றால், பிரைமரி சிம் கார்டில் எப்போதும் ரீசார்ஜ் இருக்கும்படி கஸ்டமர்கள் பார்த்து கொள்கின்றனர். ஆகவே, 2 சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் இந்த விதிகளை தெரிந்து கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
ஏர்டெல்லில் மினிமம் ரீசார்ஜ் எது? வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே அடங்கிய திட்டங்கள் வந்தாலும், அதில் வேலிடிட்டி கூடுதலாக இருப்பதால் விலையும் அதிகமாக இருக்கிறது. ஆகவே, ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் மட்டுமே உங்களுக்கு மினிமம் ரீசார்ஜ் கொடுக்கிறது. இந்த திட்டத்தில் டேட்டா குறைவாக கிடைக்கும். ஆனால், வாய்ஸ் கால்கள் அதிகமாக இருக்கும்.
ஆகவே, 2 ஜிபி டேட்டாவை மட்டுமே கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடியும். ஆனால், வாய்ஸ் கால்களை அன்லிமிடெட் சலுகையில் செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தாவும் கிடைக்கிறது. இந்த மினிமம் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஸ்பேம் கால்கள், எஸ்எம்எஸ்கள் அலெர்ட் வருகிறது.


Click it and Unblock the Notifications








