2 ஆப்ஷன் இருக்கு.. கம்மி செலவுல SMS, Voice, Data உடன் ரொம்ப நாளுக்கு Airtel SIM-ஐ ஆக்டிவ் ஆக வைக்கலாம்!
டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) கொடுத்த குடைச்சலில் ஏர்டெல் (Airtel) நிறுவனமானது வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை மட்டுமே வழங்கும் புதிய வவுச்சர்களை அறிமுகம் செய்து இருந்தது.
முதலில் ஏர்டெல் நிறுவனத்தின் புதிய வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்கள் ரூ.499 மற்றும் ரூ.1959 க்கு அறிமுகம் ஆகின. பின்னர் அறிமுகமான சில நாட்களிலேயே, முறையே ரூ.30 மற்றும் ரூ.110 விலை குறைப்பை பெற்றன. இப்போது இந்த திட்டங்கள் ரூ.469 க்கும் ரூ.1849 க்கும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

மலிவாக இருந்தாலே சிக்கல் தான் என்பது போல (பெயர் குறிப்பிடுவது போலவே) இந்த திட்டங்களில் எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் நன்மைகள் மட்டுமே கிடைக்கும்; டேட்டா நன்மைகள் எதுவும்கிடைக்காது; கூடவே இந்த திட்டங்களின் மேல் டேட்டா வவுச்சர்களை கொண்டு ரீசார்ஜ் செய்யவும் முடியாது.
இந்த கட்டத்தில் தான் மலிவான செலவில் எஸ்எம்எஸ், வாய்ஸ், டேட்டா உடன் சேர்த்து நீண்ட நாட்களுக்கு ஏர்டெல் சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்க உதவும் திட்டங்களின் தேவை அதிகரிக்கின்றன. அப்படியான திட்டங்களை தான் நீங்களும் தேடுகிறீர்கள் என்றால்..உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் உள்ளன.
01. ஏர்டெல்லின் ரூ.489 ப்ரீபெய்ட் பிளான்: இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், மொத்தம் 600 இலவச எஸ்எம்எஸ்களுடன் சேர்த்து மொத்தம் 6ஜிபி டேட்டாவும் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது இலவச ஹலோட்யூன்ஸ் (Hello tunes) மற்றும் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 77 நாட்கள் ஆகும்.
02. ஏர்டெல்லின் ரூ.548 ப்ரீபெய்ட் பிளான்: இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், மொத்தம் 900 இலவச எஸ்எம்எஸ்களுடன் சேர்த்து மொத்தம் 7ஜிபி டேட்டாவும் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது இலவச ஹலோட்யூன்ஸ் (Hello tunes) மற்றும் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
சராசரி தினசரி செலவை (Average daily cost) பொறுத்தவரை, ரூ.489 திட்டமானது தினமும் ரூ.6.35 என்கிற செலவில் அணுக கிடைக்கிறது. மறுகையில் உள்ள ரூ.548 திட்டமானது ரூ.6.52 என்கிற செலவின் கீழ் அணுக கிடைக்கிறது. நீங்கள் மலிவான திட்டத்தை விரும்பினால் ரூ.489 சிறந்ததாக இருக்கும். அடிக்கடி ரீசார்ஜ் செய்வதில் இருந்து விலகி இருக்க விரும்பினால் ரூ.548 சிறந்ததாக இருக்கும்.
விலை குறிக்கப்பட்ட ஏர்டெல் ரூ.469 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ்களை வழங்கும். கூடுதலாக இது ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்
விலை குறிக்கப்பட்ட ஏர்டெல் ரூ.1849 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்களை வழங்கும். கூடுதலாக இது ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்
விரைவில் ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: தொழில் நிதி ரீதியாக ஸ்திரமாக இருப்பதற்கும், நிலையான அடிப்படையில் நியாயமான வருமானத்தை வழங்குவதற்கும் இன்னும் சிறிது கட்டண திருத்தும் தேவைப்படுகிறது என்று ஏர்டெல் நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கோபால் விட்டல் கூறியுள்ளார். ஆக எப்போது வேண்டுமானாலும் அடுத்த ரீசார்ஜ் விலை உயர்வு அறிவிக்கப்படலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications