Airtel சைலெண்டாக செய்த வேலை.! பட்டி தொட்டியெல்லாம் கலக்கப்போகும் புது ரூ.199 பிளான்.!

|

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) சைலெண்டாக அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்ட பட்டியலில் ரூ.199 மதிப்பிலான புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை (Airtel new prepaid plan) அறிமுகப்படுத்தியுள்ளது. இது 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. கம்மி விலையில் 30 நாட்களுக்கு டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் SMS நன்மையை விரும்புவோருக்கு இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்று தான் கூறவேண்டும்.

ஏர்டெல் சைலெண்டாக அறிமுகம் செய்த புதிய ரூ.199 திட்டம்

ஏர்டெல் சைலெண்டாக அறிமுகம் செய்த புதிய ரூ.199 திட்டம்

சரி, இப்போது ஏர்டெல் நிறுவனம் சைலெண்டாக அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ரூ.199 திட்டத்தின் நன்மைகள் என்ன? இது என்ன பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது?

ஏன் இந்த திட்டத்தைப் அதிகப்படியான மக்கள் ரீசார்ஜ் செய்வார்கள் என்று நம்பப்படுகிறது என்பது போன்ற தகவல்களைப் பற்றி இப்போது இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் உண்மையாவே புதிது தானா?

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் உண்மையாவே புதிது தானா?

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Airtel prepaid recharge) பட்டியலில் இந்த திட்டம் அமைதியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குவது இது முதல் முறை அல்ல.

2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கட்டண உயர்வுகள் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, ஏர்டெல் நிறுவனம் ரூ.199 திட்டத்தை வழங்கியது என்பது கவனிக்கத்தக்கது.

ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!

பழைய ரூ.199 திட்டம் என்ன நன்மைகளை வழங்கியது?

பழைய ரூ.199 திட்டம் என்ன நன்மைகளை வழங்கியது?

ஏர்டெல் நிறுவனத்தின் பழைய ரூ.199 திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டாவுடன் 24 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்கப்பட்டது. பின்னர், இந்த திட்டம் திருத்தப்பட்ட சில மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

குறிப்பாக, இது தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ திட்டத்திற்குப் போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!

புதிய ரூ.199 ஏர்டெல் திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?

புதிய ரூ.199 ஏர்டெல் திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?

ஏர்டெல் டெல்கோ அப்போது இந்த ரூ. 199 திட்டத்துடன் 1.5 ஜிபி தினசரி டேட்டாவை வழங்கியது. ஆனால் இப்போது ஏர்டெல் 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது.

இந்த நேரத்தில் இந்த சலுகையின் சிறப்பு என்ன? இதில் என்ன நன்மை கிடைக்கிறது என்று பார்க்கலாம். புதிய ரூ.199 ஏர்டெல் திட்டம் இப்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

Realme 10 லுக்க பார்த்து மயங்கிடாதீங்க.! இதில 1 முக்கியமான அம்சம் மிஸ்ஸிங்.! அது என்ன தெரியுமா?Realme 10 லுக்க பார்த்து மயங்கிடாதீங்க.! இதில 1 முக்கியமான அம்சம் மிஸ்ஸிங்.! அது என்ன தெரியுமா?

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

பார்தி ஏர்டெல் இணையதளம் மற்றும் மொபைல் ஆப்ஸ் இல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் லைவ் செய்யப்பட்டுள்ளது. ஏர்டெல் பயனர்கள் இந்த திட்டத்துடன் இப்போதிலிருந்தே ரீசார்ஜ் செய்யத் தொடங்கலாம்.

ஏர்டெல் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் சேவை வழங்கும் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் தினசரி டேட்டா நன்மையோடு வரவில்லை என்பது கவலை அளிக்கிறது.

OnePlus பயனர்கள் OnePlus பயனர்கள் "பச்சை பச்சையா" புகார் செய்றாங்க.! என்ன காரணம் தெரியுமா?

3ஜிபி டேட்டாவுடன் எக்ஸ்டரா இலவச நன்மைகள்.!

3ஜிபி டேட்டாவுடன் எக்ஸ்டரா இலவச நன்மைகள்.!

இந்த புதிய ரூ. 199 திட்டமானது 3ஜிபி மொத்த டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை உடன் வருகிறது. இந்தத் திட்டத்தில் மொத்தம் 300 SMS-களை நிறுவனம் வழங்குகிறது.

இத்துடன் இலவச நன்மைகளாக Hellotunes மற்றும் Wynk Music உள்ளிட்ட Airtel Thanks கூடுதல் நன்மைகளை airtel இந்த திட்டத்துடன் வழங்குகிறது.

2023-ல 2023-ல "இந்த" Vivo போனை தான் எல்லாரும் போட்டி போட்டு வாங்க போறாங்க.! ஏன் தெரியுமா?

எக்ஸ்ட்ரா யூஸேஜிற்கு எக்ஸ்ட்ரா கட்டணமா?

எக்ஸ்ட்ரா யூஸேஜிற்கு எக்ஸ்ட்ரா கட்டணமா?

இந்த திட்டத்துடன் கிடைக்கும் எஸ்எம்எஸ் நன்மைகளைப் பயன்படுத்திய பிறகு, உள்ளூர் எஸ்எம்எஸ்க்கு ரூ 1 மற்றும் STD எஸ்எம்எஸ் ஒன்றிற்கு ரூ. 1.5 வசூலிக்கப்படும். திட்டத்துடன் வழங்கப்பட்ட வரம்பிற்குப் பிறகு 1 MB-க்கு 50p என்ற டேட்டா கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த திட்டத்துடன் 300 எஸ்எம்எஸ்கள் இருந்தாலும், நீங்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 SMS மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.

அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!

வேலிடிட்டி முடிந்த பின் இந்த ரீசார்ஜ் திட்டம் இப்படி தான் செயல்படும்.!

வேலிடிட்டி முடிந்த பின் இந்த ரீசார்ஜ் திட்டம் இப்படி தான் செயல்படும்.!

இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலாவதியாகும் போது பயன்படுத்தப்படாத அனைத்து SMS மற்றும் டேட்டாவும் காலாவதியாகிவிடும்.

மேலும் அதே திட்டத்தில் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் போது உங்கள் பழைய பேலன்ஸ்கள் எதுவும் முன்னோக்கி கொண்டு செல்லப்படாது.

இந்த ஏர்டெல்லின் புதிய திட்டமானது ஒரு முக்கிய வாடிக்கையாளர் தளத்திற்கு ஒரு நல்ல சலுகையாகும்.

அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!

முழுமையாக 1 மாதத்திற்கு வேலிடிட்டி வேண்டுமா?

முழுமையாக 1 மாதத்திற்கு வேலிடிட்டி வேண்டுமா?

தொலைத்தொடர்பு நிறுவனம் நீண்ட காலமாக புதிய ப்ரீபெய்ட் திட்டங்களைச் சேர்க்கவில்லை; இதனால், இந்த புதிய சேர்த்தல் நீண்ட வறட்சிக்குப் பிறகு கிடைத்த தண்ணீர் போல் உணர்கிறது. இருப்பினும், கம்மி விலையில் இந்த திட்டம் மிக முக்கியமாக, 30 நாட்கள் சேவை வேலிடிட்டியை வழங்குகிறது. முழு மாத ரீசார்ஜ் திட்டங்களைத் தேடுவோருக்கு இந்த திட்டம் நல்ல சாய்ஸ்.

Best Mobiles in India

English summary
Airtel Silently Launched Rs 199 Prepaid Recharge Plan With 30 Days Validity

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X