Airtel சேவையில் திடீர் மாற்றம்.. One Airtel அறிமுகம்.. பழைய திட்டங்களை ரீசார்ஜ் செய்த கஸ்டமர்களின் நிலை என்ன?
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் புதிய ஒருங்கிணைந்த சேவை ஆக 'ஒன் ஏர்டெல்' (One Airtel) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முன்னதாக கிடைத்த ஏர்டெல் பிளாக் (Airtel Black) சேவைக்கான பெயர் மாற்றும் ஒரு முயற்சியாகவே தெரிகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்நிறுவனம் கடந்த 2020-ஆம் ஆண்டு வாக்கில் ஒருங்கிணைந்த சேவைகளை சோதனை செய்தபோது, அதை 'ஏர்டெல் ஒன்' என்று அழைத்தது. பின்னர் அது 'ஏர்டெல் பிளாக்' என மாற்றப்பட்டு இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இப்போது ஏர்டெல் நிறுவனம் ஆனது மிகவும் அமைதியான முறையில் தனது 'ஏர்டெல் பிளாக்' சேவையை 'ஒன் ஏர்டெல்' எனப் பெயர் மாற்ற தொடங்கியுள்ளது. இந்த சேவை அப்படியேதான் இருக்கிறது, ஆனால் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. விலையிலும் எந்த வித்தியாசமும் இருக்காது. ஏர்டெல் பிளாக் சேவையை போலவே 'ஒன் ஏர்டெல்' சேவையின் கீழ் கிடைக்கும் திட்டங்களும், வாடிக்கையாளர்கள் பல ஏர்டெல் சேவைகளை ஒரே ஒருங்கிணைந்த திட்டத்தில் இணைக்க அனுமதிக்கும்.

அதாவது வாடிக்கையாளர்கள் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் மொபைல் (Airtel Postpaid Mobile), ஏர்டெல் வைஃபை (Airtel Wi-Fi) மற்றும் ஏர்டெல் டிடிஎச் /ஐபிடிவி இணைப்புகள் (Airtel DTH / IPTV connections) அனைத்தையும் ஒரே திட்டத்தில் இணைக்கலாம். இது வாடிக்கையாளர்களுக்கு பல கட்டணங்களை செலுத்துவதிலும், அவை அனைத்தையும் கண்காணிப்பதிலும் உள்ள சிரமத்தை கணிசமாக குறைக்கிறது.
ஒன் ஏர்டெல் அறிமுகத்தின் விளைவாக தற்போதுள்ள ஏர்டெல் பிளாக் கஸ்டமர்களுக்கு என்ன நடக்கும்? தற்போதுள்ள ஏர்டெல் பிளாக் வாடிக்கையாளர்கள், எதிர்காலத்தில் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை என்றால், அவர்கள் தற்போதைய திட்டத்தையே தொடர்வார்கள். இருப்பினும், ஏதேனும் சேவை சேர்க்கப்பட்டாலோ, நீக்கப்பட்டாலோ அல்லது மாற்றியமைக்கப்பட்டாலோ, வாடிக்கையாளர் ஒன் ஏர்டெல் திட்டத்திற்கு மாற்றப்படலாம்.
ஏர்டெல்லின் இணையதளத்தில் உள்ள பிரிவுகளில் இன்னும் ஏர்டெல் பிளாக் என்ற பெயரே காட்டப்படுகிறது. வாடிக்கையாளர்கள் திடீரென ஒரு புதிய பெயரால் குழப்பமடையாமல் இருப்பதற்காக இது இருக்கலாம். ஒன் ஏர்டெல் திட்டத்தில் சேர, வாடிக்கையாளர்கள் அதன் சேவைகளில் குறைந்தபட்சம் இரண்டையாவது முன்பதிவு செய்ய வேண்டும் என்று ஏர்டெல் கூறியுள்ளது.
ஒரு சேவையை சேர்க்க, நீக்க அல்லது மாற்றியமைக்க, பயனர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பிற்கு செல்லலாம் அல்லது இணையதளத்திற்கு செல்லலாம். எனவே, அடிப்படையில், இந்த சேவை ஏர்டெல் பிளாக் போன்றதுதான். பெயர் மாற்றத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை . ஏர்டெல் பிளாக் திட்டத்தை வழங்கும் ஒவ்வொரு பிராந்தியத்திலும், ஏர்டெல் நிறுவனம் ஒன் ஏர்டெல் திட்டத்தையும் வழங்க வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் ஒன் ஏர்டெல் திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படலாம். அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.
இதற்கு முன்னதாக ஏர்டெல் செய்த முக்கியமான மாற்றம் ரூ.40 விலை உயர்வு தான். கடந்த மாதம் - ஏர்டெல் நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான 84 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை அதிகரித்தது முன்பு, ரூ.700 முதல் ரூ.800 வரையிலான பிரிவில், ரூ.799 மற்றும் ரூ.859 என இரண்டு திட்டங்கள் இருந்தன. இவைகள் வட்டம் அல்லது பயனரை பொறுத்து, முறையே 77 அல்லது 84 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன், ஒரு நாளைக்கு 1.5ஜிபி அல்லது 2ஜிபி டேட்டாவை வழங்கின.
ஆனால் கடந்த மாதம், ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.799 திட்டத்தை நீக்கிவிட்டு, தனது ரூ.859 ட்ரூலி அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை ரூ.899 ஆக உயர்த்தியது. நன்மைகளை பொறுத்தவரை, ஏர்டெல்லின் ட்ரூலி அன்லிமிடெட் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டமானது, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் (லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் உட்பட), ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா ஆகிய முக்கிய நன்மைகளை 84 நாட்கள் செல்லுபடியுடன் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications