சத்தமில்லாமல் Airtel செய்த வேலை.. தினமும் 3ஜிபி கிடைக்கும் திட்டம் நீக்கமா? இதற்கு மாற்று என்ன தெரியுமா?
டெலிகாம் நிறுவனங்கள் சென்ற வாரத்தில் ஒன்றின் பின் ஒன்றாக மடமடவென அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்தன. பாரதி ஏர்டெல் நிறுவனம், அதனைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனம் மற்றும் அதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் அதன் டேரிஃப் விலை திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது. இந்த புதிய அதிகரிப்பு விலை தற்போது நடைமுறையில் உள்ளது. இருப்பினும் சில திட்டங்களின் நன்மைகளை நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகிறது.

ஏர்டெல்லின் தினசரி 3 ஜிபி டேட்டா திட்டங்களுக்கு என்ன ஆச்சு?
கடந்த மாதம் உயர்த்தப்பட்ட கட்டணத் திட்டங்களின் பட்டியலில் ஏர்டெல் தினசரி 3 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களைச் சேர்க்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், இப்போது ஏர்டெல் நிறுவனம் சத்தமில்லாமல் அதன் மூன்று 3 ஜிபி தினசரி டேட்டா கிடைக்கும் திட்டங்களை அவற்றுடன் வந்த நன்மைகளுடன் நிறுத்திவிட்டது. இதன் படி, எந்த ப்ரீபெய்ட் திட்டங்களை நிறுவனம் தற்போது நிறுத்தியுள்ளது என்பது பற்றித் தெளிவாகப் பார்க்கலாம். இந்த திட்டங்களை நீங்கள் முன்பு பயன்படுத்தியிருந்தால், இனி வேறு திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

ஏர்டெல் அறிவித்த அதிரடி கட்டண உயர்வு
ஒரு வாரத்திற்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் அதன் கட்டண உயர்வை அறிவித்து, அதன் வரம்பற்ற திட்டங்களில் மாற்றங்களைச் செய்தது. டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனம் அதன் பட்டியலின் கீழ் தினசரி 3 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களிலும் மாற்றங்களைச் செய்துள்ளதாகத் தெரிகிறது. ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களில் மாற்றத்தை அறிவித்த பின்னர் திட்டங்களின் விலை அதிகப்படியாக ரூ. 500 வரை அதிகரிக்கப்பட்ட போதிலும், இனி புதிய விலையில் தான் திட்டங்கள் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தாலும், அதன் 3 ஜிபி தினசரி டேட்டா திட்டங்களில் எந்த மாற்றத்தையும் நிறுவனம் குறிப்பிடவில்லை.

எந்தெந்த ஏர்டெல் திட்டங்களை நிறுவனம் சத்தமில்லாமல் நிறுத்தியுள்ளது?
கடந்த மாதம், ஏர்டெல் நிறுவனம் 3 ஜிபி தினசரி டேட்டா திட்டங்களை உயர்த்திய கட்டணங்களின் பட்டியலில் சேர்க்கவில்லை என்று தெரிவித்திருந்தோம். எனவே, சில இழப்பீடாக 3 ஜிபி தினசரி டேட்டா திட்டங்களைத் தேர்வு செய்யும் பயனர்கள் இந்த விலை உயர்விலிருந்து விடுபடுவார்கள் என்று கூறியிருந்தோம். ஆனால், இப்போது நிலைமை தலைகீழானது, ஏர்டெல் அதன் ரூ. 398, ரூ. 499 மற்றும் ரூ. 558 விலையில் இருந்த அதன் 3 ஜிபி தினசரி டேட்டா திட்டங்களை நிறுத்திவிட்டதாகத் தெரிகிறது. ஏர்டெல் இந்தத் திட்டங்களில் இந்த மாற்றத்தைப் பிரத்தியேகமாக அறிவிக்கவில்லை.

ரூ. 398 மற்றும் ரூ. 558 ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கிய நன்மைகள் என்ன?
ரூ. 398 ப்ரீபெய்ட் திட்டம் அதன் பயனர்களுக்கு 3 ஜிபி தினசரி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்கியது மற்றும் ரூ. 558 ப்ரீபெய்ட் திட்டம் 56 நாட்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மையை அதன் பயனர்களுக்குச் செல்லுபடியாகும் காலம் முழுக்க வழங்கியது. அதேபோல், ரூ. 499 திட்டம் அதன் பயனர்களுக்கு டிஸ்னி+ ஹோஸ்டார் சந்தாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி காலத்திற்குத் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் படி செய்திருந்தது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் பற்றிப் பார்க்கையில், அனைத்து நெட்வொர்க்கிற்கான வரம்பற்ற அழைப்பு நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வழங்கியது.

ஏர்டெல் தேங்க்ஸ் கீழ் என்ன நன்மைகள் இலவசமாகக் கிடைத்தது?
இத்துடன் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மையாக இந்த திட்டத்தைத் தேர்வு செய்த பயனர்களுக்கு வின்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமிக்கான சந்தாக்களுக்குக் கூடுதலாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்திற்கான சந்தா ஆகியவை அடங்கும். ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்கள் இலவச HelloTunes மற்றும் ரூ. 150 கேஷ்பேக் நன்மையைப் பெறுவார்கள். சில திட்டங்கள் கூடுதல் டேட்டா கூப்பன்களையும் கொடுத்தன. இந்த திட்டங்களை நீரும் ஏன் நிறுத்தியது என்பது பற்றித் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.

புதிய ரூ. 599 மற்றும் ரூ. 699 விலை திட்ட நன்மைகள் என்ன?
இப்போது, ஏர்டெல் நீரும் ரூ. 599 மற்றும் ரூ. 699 விலையின் கீழ் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களுடன் தினசரி 3 ஜிபி டேட்டா நன்மை மற்றும் ஸ்ட்ரீமிங் நன்மைகள் கிடைக்கக் கூடிய திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் பகிரப்பட்ட கட்டண உயர்வு பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஏர்டெல் அதன் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் நன்மையை ரூ. 155 முதல் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களுடனும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ரூ. 599 மற்றும் ரூ. 699 விலையுள்ள திட்டங்களுடன் பிரத்தியேக ஸ்ட்ரீமிங் நன்மைகளை வழங்குகிறது.

தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கிறதா? இன்னும் என்ன சிறப்பிருக்கிறது?
இந்த இரண்டு திட்டங்களும் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்த்தால், இந்த திட்டங்கள் அதன் பயனர்களுக்கு 3 ஜிபி தினசரி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் அழைப்பு மற்றும் SMS நன்மைக்காக இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும் நன்மைகள் கிடைக்கிறது. ஏர்டெல்லின் ரூ. 599 ப்ரீபெய்ட் திட்டம் உங்களுக்கு டிஸ்னி+ ஹோஸ்டார் மொபைல் நன்மைக்கான சந்தாவை வழங்குகிறது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும்.

இனி இந்த ஒரு திட்டத்தில் மட்டும் தான் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கிடைக்குமா?
அதேபோல், ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பிற்கான அணுகலை வழங்குகிறது. இப்போது வரை, ஏர்டெல் அதன் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மைகளை வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவை இப்போது ஒரு திட்டமாகக் குறைக்கப்பட்டுள்ளன என்பதைப் பயனர்கள் அறிந்துகொள்வது நன்று. ஏர்டெல் அதிகரித்துள்ள முழு விலை விபரம் பற்றி அறிந்துகொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து, ஏர்டெல் விலை உயர்வு திட்டப் பதிவைப் படியுங்கள்.


Click it and Unblock the Notifications