Home
News

திடீரென முடங்கிய Airtel சேவை.. கால், டேட்டா, பிராட்பேண்ட் சேவைகள் டவுன்.. அவதிக்குள்ளான பயனர்கள்..

திடீரென ஏர்டெல் நிறுவனத்தின் சேவை (Airtel services) முடங்கியுள்ளது. இதனால் கால் மற்றும் இணைய சேவைப் பயன்படுத்த முடியவில்லை என்று பல ஏர்டெல் வாடிக்கையாளர்கள் புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக மொபைல் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளில் பல பயனர்கள் சிக்கல்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

அழைப்புகளை மேற்கொள்ளவோ ​​அல்லது எடுக்கவோ, தரவு சேவைகளை அணுகவோ அல்லது பிராட்பேண்ட் சேவை வழியாக இணையத்தை அணுகவோ கூட முடியவில்லை என்று பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பல வாடிக்கையாளர்கள் மொபைலில் ஏர்டெல் சிம் 'நெட்வொர்க் இல்லை' ('No Network')என்றே காட்டுவதாகவும் புகார் அளித்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் சார்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

திடீரென முடங்கிய Airtel சேவை.. அவதிக்குள்ளான பயனர்கள்..

Downdetector.com என்கிற செயலிழப்பு கண்காணிப்பு தளம் வெளியிட்ட தகவலின்படி, தோராயமாக 46% பயனர்கள் மொத்த சேவை தடையை எதிர்கொண்டனர், 32% பேர் சிக்னல் இல்லை என்றும், 22% பேர் மொபைல் இணைப்பு சிக்கல்களை அனுபவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி, ஜெய்ப்பூர், சூரத், குஜராத், மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய மாநிலங்களில் இந்த சேவை துண்டிப்பு அதிகமாக உள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது. பின்பு லக்னோ, கொல்கத்தா, சென்னை போன்ற பிற பகுதிகளும் அவ்வப்போது இந்த சிரமத்தை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் சேவை முடங்கியுள்ளது எனப் பலர் சமூக வலைத்தளத்திலும் தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக ஜியோ நிறுவனத்துக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது. அதுவும் ஏர்டெல் நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. எனவே ஜியோவை விட ஏர்டெல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒரு புதிய திட்டத்தை இப்போது பார்க்கலாம்.

சமீபத்தில் ஏர்டெல் அறிமுகம் செய்த ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 398 Prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா
கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

திடீரென முடங்கிய Airtel சேவை.. அவதிக்குள்ளான பயனர்கள்..

அதேபோல் ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா வழங்குகிறது. குறிப்பாக இந்த ஓடிடி சந்தா மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளது.

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக கம்மி விலையில் ஓடிடி சந்தா எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel services have been affected all over the country: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X