அதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வது?

|

ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வைஃபை வசதி மூலம் இனி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

நெட்வொர்க்க கிடைக்காத சமயத்தில் உதவும்

நெட்வொர்க்க கிடைக்காத சமயத்தில் உதவும்

நெட்வொர்க் கிடைக்காத சமயத்திலும் இந்த வைஃபை சேவை பயன்படுத்தி கால் செய்யலாம் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல் மட்டுமல்ல, ஜியோவும் மத்தியப் பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் இந்த சேவையை வழங்குவதற்கு பணியாற்றி வருகின்றனர். பி.எஸ்.என்.எல் நிறுவனமும் பல வட்டங்களில் இதுகுறித்து சோதனைகளை நடத்தியுள்ளது.

வைஃபை வழியாக குரல் அழைப்பு

வைஃபை வழியாக குரல் அழைப்பு

ஏர்டெல் வைஃபை வழியாக குரல் அழைப்பை அறிமுகப்படுத்தும் இந்த வைஃபை சேவை குறிப்பிட்ட மொபைல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. வைஃபை அழைப்பின் இந்த அம்சம் ஆப்பிள், சாம்சங், சியோமி மற்றும் ஒன்ப்ளஸ் ஆகிய நான்கு பிராண்டுகளின் 24 ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும்.

இஸ்ரோ பூமியை கண்காணிக்க திட்டம்: நாளை விண்ணில் ஏவப்படும் ராக்கெட்- நேரில் பார்க்க அரிய வாய்ப்புஇஸ்ரோ பூமியை கண்காணிக்க திட்டம்: நாளை விண்ணில் ஏவப்படும் ராக்கெட்- நேரில் பார்க்க அரிய வாய்ப்பு

சாதாரன அழைப்பை விட தெளிவாக இருக்கும்

சாதாரன அழைப்பை விட தெளிவாக இருக்கும்

அழைப்பு இணைப்பு நேரம் மற்றும் தரம் நிலையான மற்றும் VoLTE அழைப்பு தொழில்நுட்பங்களை விட சிறப்பாக இருக்கும். மேலும், இந்த நன்மையை அனுபவிக்க தங்களுக்கு எந்த தனி பயன்பாடும் தேவையில்லை எனவும் எந்த செயலி போன்றவைகளுக்கு உள்நுழையவும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் 4 ஜி சிம் கார்டு

ஏர்டெல் 4 ஜி சிம் கார்டு

இந்த அம்சத்தை பயன்படுத்த விரும்பினால், அம்சத்தை ஆதரிக்கும் செல்போன் மற்றும் டெல்லியில் ஏர்டெல் 4 ஜி சிம் கார்டு தேவைப்படும். இந்த இரண்டையும் பெற்றவுடன், உங்கள் தொலைபேசியில் இந்த அம்சத்தை எவ்வாறு இயக்குவது என்பதற்கான படிப்படியான செயல்முறை, முதலில் சிம் கார்டு அமைப்புகளுக்குச் செல்லவும், அடுத்து, VoLTE சுவிட்சை இயக்கவும்.

ஆக்டிவேட் செய்யும் முறை

ஆக்டிவேட் செய்யும் முறை

வைஃபை அழைப்பு சுவிட்சை இயக்கவும் இதன் மூலம் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம். மேலும் கடைசியாக, உங்கள் சாதனத்தை ஒரு முறை மறுதொடக்கம் செய்து, நிலைப்பட்டியில் VoWi-Fi சின்னம் தோன்றும் வரை காத்திருக்கவும்.

அனைவரும் பயன்படுத்தும் இந்த சேவை நிறுத்தப்படுகிறது: டிராய் அறிவிப்பு.! எந்த சேவை?அனைவரும் பயன்படுத்தும் இந்த சேவை நிறுத்தப்படுகிறது: டிராய் அறிவிப்பு.! எந்த சேவை?

டெல்லியில் வழங்கப்படும் சோதனை

டெல்லியில் வழங்கப்படும் சோதனை

தற்போது வரை, இந்த சேவை டெல்லி என்.சி.ஆரில் வழங்கப்படுகிறது, மேலும் சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திலும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட மொபைல்களில் மட்டுமே அனுமதி

குறிப்பிட்ட மொபைல்களில் மட்டுமே அனுமதி

இந்த சேவை அனைத்து மொபைகளிலும் பயன்படுத்த முடியாது, குறிப்பிட்ட மொபைல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் அது எந்தெந்த மொபைல்கள் என்ற விவரங்களை கீழே பார்க்கலாம்.

ஆப்பிள்:

ஆப்பிள்:

ஐபோன் 6 எஸ்
ஐபோன் 6 எஸ் பிளஸ்
ஐபோன் 7
ஐபோன் 7 பிளஸ்
ஐபோன் எஸ்.இ.
ஐபோன் 8
ஐபோன் 8 பிளஸ்
ஐபோன் எக்ஸ்
ஐபோன் எக்ஸ்
ஐபோன் எக்ஸ் மேக்ஸ்
ஐபோன் எக்ஸ்ஆர்
ஐபோன் 11
ஐபோன் 11 புரோ.

OnePlus:

OnePlus:

ஒன்பிளஸ் 7
ஒன்பிளஸ் 7 ப்ரோ
ஒன்பிளஸ் 7 டி
ஒன்பிளஸ் 7 டி புரோஜியோவிற்கு பதிலடி:

வோடபோனின் இரண்டு அட்டகாசமான திட்டங்கள் அறிமுகம்.! முழுவிபரங்கள்.!வோடபோனின் இரண்டு அட்டகாசமான திட்டங்கள் அறிமுகம்.! முழுவிபரங்கள்.!

சியாமி:

சியாமி:

சியோமியின் போக்கோ எஃப் 1
ரெட்மி கே 20
ரெட்மி கே 20 ப்ரோ

சாம்சங்:

சாம்சங்:

சாம்சங்கின் கேலக்ஸி ஜே 6
கேலக்ஸி ஆன் 6
கேலக்ஸி எம் 30S
கேலக்ஸி ஏ 10S

Best Mobiles in India

English summary
Airtel’s Wi-Fi Calling Or VoWi-Fi Goes Live In Delhi: Available on 24 Smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X